கடந்த ஜனாதிபதித் தேர்தல், அதற்கு பின்னரான பொதுத் தேர்தலில், தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை பலரும் ஜீரணித்துக்கொள்ள முடியாதவர்களாகவே இருக்கின்றனர். தனி ஒரு கட்சியினால் பெரும்பான்மையை பெற்று ஆட்சியமைக்க முடியாது என்பதே கடந்தகால வாதமாக இருந்தது. எனினும், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, அந்த கூற்றை சுக்குநூறாக்கிவிட்டது.
Category: கட்டுரைகள்
Articles
தேர்தல் முடிந்தது:இனிச் செய்ய வேண்டியது என்ன
(எம். ஏ. நுஃமான்)
யாரும் எதிர்பாராத வகையில் மூன்றில் இரண்டுக்கு அதிகமான பெரும்பான்மை பெற்று தேசிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தைக் கைப்பற்றி இருக்கிறது. மட்டக்களப்பு மாவட்டத்தைத் தவிர இலங்கையின் 21 தேர்தல் மாவட்டங்களிலும் அது வெற்றி பெற்றிருக்கின்றது, வடக்கில், குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில், அது பெற்ற வெற்றி வரலாற்று முக்கியத்துவம் உடையது.
ஜனாதிபதி நாற்காலி ஒரு முள் படுக்கை
(முருகானந்தம் தவம்)
வரலாற்றுப் பதிவுகளுடன் நடந்து முடிந்த இலங்கையின் 9ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியவற்றின் தலைவரான அனுரகுமார திசாநாயக்க மக்களின் 2ஆவது ‘அரகலய’ புரட்சி மூலம் 5,634,915 நேரடி வாக்குகள், 1,05,264 விருப்பு வாக்குகள் என்ற அடிப்படையில் 5,740,179 மொத்த வாக்குகளைப் பெற்று ஜனாதிபதிக் கதிரையை அலங்கரித்துள்ளார்.
இலங்கைத் தேர்தல்: மூன்றில் இரண்டு ஆட்சி அதிகாரம்
(தோழர் ஜேம்ஸ்)

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களில்….
தேர்தலில் நிற்காமலே தோற்றும் போனவர்கள் மகிந்த ராஜபக்ச, மாவை சேனாதிராஜ உட்பட பலர்….
தேர்தலில் நின்று தோற்றுப் போனவர்கள் சுமந்திரன், டக்ளஸ் உட்பட பற் பலர்…
தேர்தலில் நின்று வென்றவர்கள் அடைக்கலநாதன், சஜித் உட்படசிலர்….
நாலு தமிழ் பெண்கள் உட்பட பத்திற்கும் மேற்பட்ட பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை பாராளுமன்றத்திற்கு மக்களுக்காக தெரிவு செய்யப்பட்ட நிலை
இலங்கை பாராளுமன்றத் தேர்தல் (பகுதி 4)
சுன்னாகம் சம்பவத்துக்கு உரிய நடவடிக்கை அவசியம்
பொலிஸ் திணைக்களத்துக்கு ஆட்சேர்ப்பு செய்யும் போது, பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர், அந்த நபரின்கடந்த காலத்தை ஆராய்வார்கள். அடுத்து, அந்த நபரின் சகோதரர்கள் மற்றும் உறவினர்களின் கடந்த காலமும் பார்க்கப்படுகிறது. இது வளர்ந்த நாடுகளால் தற்போது தூக்கி எறியப்பட்ட ஒரு பாரம்பரியமாகிவிட்டது.
மாற்றத்துக்கான அனுரவின் பயணம்
கடினமாக உழைத்து சம்பாதித்ததை தூக்கி எறிய வேண்டாம்
கடினமாக உழைத்து சம்பாதித்ததை முதலீடு எனும் வலையை வீசுகின்ற வலையமைப்புகளில் சிக்கி சின்னாப்பின்னமாகி தவிப்பதை விடவும், முறையான நிதிநிறுவனங்கள், வங்கிகளில் வைப்பிடுவதன் ஊடாக, ஓய்வுகாலத்தில் நிம்மதியாக வாழமுடியும். எனினும், கூடிய இலாபத்தை மட்டுமே இலக்காக கொண்டவர்கள் பலரும், அந்த வலைக்குள் சிக்கிவிடுகின்றனர்.
சமாதானத்திற்கான போரரசியல் – 4
(தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
1994-1995இல் ஆரம்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தை முயற்சிகள் குமாரதுங்கவின் அரசியல் முன்னேற்றமாகக் கருதப்படலாம். புலிகளுடனான பகைமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உறுதிப்பாட்டைத் தற்காலிகமாகப் பாதுகாப்பதன் மூலம், குமாரதுங்க தனது விமர்சகர்களை மௌனமாக்குவதற்குத் தனது அரசியல் மூலதனத்தைத் திரட்டிக் கொள்ள முடிந்தது.
சின்னாப்பின்னமாக போகும் சிறுபான்மை பிரநிதித்துவம்
புதிய பாராளுமன்றத்துக்கான தேர்தல், எதிர்வரும் 14ஆம் திகதியன்று இடம்பெறவிருக்கின்றது. ஆக வாக்களிப்புக்கு இன்னும் ஆறு நாட்கள் மட்டுமே இருக்கின்றன. இறுதி வாரம் என்பதால், தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், நாட்டில் தேர்தலொன்று நடைபெறுகின்றதா? என தங்களால் உணர முடியாமல் உள்ளதென பலரும் கூறுகின்றனர். அந்தளவுக்கு பிரசாரங்கள் முழு வீச்சில் முன்னெடுக்கப்படவில்லை.