நான்கு பேரும் நம்ம தனியார் ஆஸ்பத்திரியும்!

டாக்டர்: என்ன வருத்தம்?

நோயாளி 1: தலைவலி டாக்டர்.
டாக்டர்: என்ன தொழில் செய்றீங்க?
நோயாளி 1 : ஒரு தொழிலும் இல்லீங்க. ரொம்பக் கஷ்டமான வாழ்க்கை.
டாக்டர்: சரி…ஒரு நாளைக்கு மூணு வேளை ஒவ்வொரு பனடோல் போடுங்க…சரியாயிடும்.

(“நான்கு பேரும் நம்ம தனியார் ஆஸ்பத்திரியும்!” தொடர்ந்து வாசிக்க…)

இன்று ராஜிவ் நினைவு நாள்.

‘ஏ தாழ்ந்த தமிழினமே’ என்று
ஏய்க்கிறவனுக்கு இரையானதைத் தவிர
பிழையேதுமில்லை தமிழனிடம்.

(“இன்று ராஜிவ் நினைவு நாள்.” தொடர்ந்து வாசிக்க…)

நந்திக் கடல் அருகே

இழந்து இழந்து

பின்வாங்கிப் பின்வாங்கி
இழுத்துவந்தீர்கள் இங்கு 
நந்திக் கடலருகே
நான்கு லட்சம் பேர் நாங்கள்

(“நந்திக் கடல் அருகே” தொடர்ந்து வாசிக்க…)

அன்னையர் தின வாழ்த்துகள்!

தியாகியாகாமல்,
தெய்வமாகாமல்,
தன் கடமையை மட்டும் சரியாக ஆற்றினால்
போதும் அன்னையர்களே!

(“அன்னையர் தின வாழ்த்துகள்!” தொடர்ந்து வாசிக்க…)

ஓ இலங்கை அரசாங்கமே!

இசுலாமியர் உங்களிடம்
எதைக் கேட்டுவிட்டார்கள் என்று
அடிக்கிறீர்கள்?

அரசாங்கத்தில் வேலைவாய்ப்புக்
கேட்டார்களா?
உங்களுக்கே வேலையில்லை
என்பதால் தானே
இனவாதிகளின் முதுகு சொறிகிறீர்கள்.

(“ஓ இலங்கை அரசாங்கமே!” தொடர்ந்து வாசிக்க…)

நல்லாட்சி

நீலவானனும் பச்சைமாலனும்
பொற்காசுக்கு அடிமையாகி
பெற்றதாயைத்துகிலுரிந்து
பிறத்தியார்க்கு அம்மணங்காட்டி
துச்சாதனம் பண்ணுகிறார்;
வாளுடைய சிங்கமாய்
கொம்புடைய யானையாய்
செங்கொடிச் சிறுத்தைகளுடன்
பேருக்குக் கூட்டுச்சேர்ந்து
நல்லாட்சி நாமம்வைத்து
நடக்கிறது தர்பார்கூத்து.

(“நல்லாட்சி” தொடர்ந்து வாசிக்க…)

பின்னென்ன உயர்குல வேளாளன்?

எலும்பை ஊடறுத்து

உயிரைத் தீண்டும்
ஊசிக்குளிர்

வாழ்வின் மிடறறுத்து
உயிரைத் துரத்தி
உறிஞ்சிக்குடிக்கும் வெஞ்சினம்

கொடுமைகளில் சிதைந்தது சுற்றம்
ஆன்மாவும் விறைக்கும்
கூதல் வெளியில்
தடுமாறிச் சுவாசிக்கும்
தட்டுக் கெட்டு மிஞ்சிய சுற்றம்

(“பின்னென்ன உயர்குல வேளாளன்?” தொடர்ந்து வாசிக்க…)

அல்லாஹு அக்பர்!

-எஸ். ஹமீத்
ண்ணமெல்லாம்
சுற்றிவரச் சிங்கள ஊர்களினால்
சூழப்பட்டிருக்கும் அந்த
ஒற்றை ஒற்றையான
முஸ்லிம் கிராமங்களைப் பற்றியே
சுழல்கிறது…

(“அல்லாஹு அக்பர்!” தொடர்ந்து வாசிக்க…)

கூவல்!

(எஸ். ஹமீத்)
குயில் கூவுகிறது…
அகம் மகிழ்கிறது!
குழந்தை கூவுகிறது…
அரவணைப்பு கிடைக்கிறது!
வியாபாரி கூவுகிறான்…
விற்பனை நடக்கிறது!
அரசியல்வாதி கூவுகிறான்…
வாக்குகள் சேர்கிறது!
சேவல் கூவுகிறது…
காலை புலர்கிறது!
சிரியா கூவுகிறது…
மரணங்களே மறுமொழியாகிறது!