மூச்சுவிட முடியாமல்
ஒரு தேசம் திணறுகின்றது
காற்றெல்லாம் கந்தக வாசனை
வெட்டப்பட வேள்வியாடுகளாய்
மனிதம் சிதறிக்கிடக்கின்றதே
இன்னுமொரு முள்ளிவாய்க்கால்
இங்கேதான் அரங்கேற்றப்படுகிறது…!
Category: சமூக விழிப்பு
Social Awakening
வைரமுத்துவுக்கு ஒரு கவிதை!
பேரரசின் காவியம்!!!
வெடி முழக்கில் நடுங்கிப் பயந்தது
யாழ்க் காற்று.
நின்
தமிழ் முழக்கில்
தைரியம் தந்தாய்.
நாம் விதிக் குரங்குகள் கிழித்தெறியும் பஞ்சுத் தலையணையா?’
‘யாழ் நகரில் என் பையன்
கொழும்பில் என் பெண்டாட்டி
வன்னியில் என் தந்தை
தள்ளாத வயதினிலே தமிழ் நாட்டில் என் அம்மா
சுற்றம் பிறாம்போட்டில்
சகோதரியோ பிரான்ஸ் நாட்டில்
நானோ வழிதவறி அலாஸ்கா வந்தவிட்ட
ஒட்டகம்போல ஓஸ்லோவில்!
நம் குடும்பங்கள் என்ன?
காற்றில் விதிக் குரங்குகள்
கிழித்தெறியும் பஞ்சுத் தலையணையா?’
(வ.ஐ.ச.ஜெயபாலன்)