அண்மைக்காலமாக கிழக்கில், இல்மனைட் எனும் கறுப்பு மணல் அகழ்வது தொடர்ப்பான சர்ச்சைகளும் இதற்கு எதிரான மக்கள் எழுச்சிகளும் இடம்பெற்று வருகின்றன. இன்று இலங்கையில் மட்டுமன்றி, உலகில் அனைத்து பகுதிகளிலும் இயற்கையின் இருப்பைக் கேள்விக்குட்படுத்தும் சம்பவங்கள் அதிகமாக இடம்பெற்று வருகின்றன.
1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன் குழந்தையாக இருக்கும் போது அவனுடைய உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற எலும்புகளுடன் இணைந்து விடுகிறது…
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமி விவகாரத்தில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, பொலிஸாரின் விசாரணைகளில் திருப்தியடைய முடியாதென ஐக்கிய மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர் ப்ரனிதா வர்ணகுலசூரிய தெரிவிக்கிறார்.
2021 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் தேயிலை ஏற்றுமதி வருமானம் 14 சதவீதத்தால் அதிகரித்து 650 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது. இக்காலப்பகுதியில் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்த தேயிலையின் அளவில் 10 சதவீத அதிகரிப்பு பதிவாகியிருந்ததுடன், 137 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது.
ஆசியா சியாகா கொமோடிட்டீஸ் பிஎல்சி முன்னெடுத்திருந்த ஆய்வின் பிரகாரம், 2021ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில், ஜுன் மாத தேயிலை ஏற்றுமதியினால் அதிகளவு ஊக்குவிப்பு வழங்கப்பட்டிருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. ஐந்தாண்டு காலப்பகுதியில் பதிவாகியிருந்த உயர்ந்த ஏற்றுமதி பெறுமதியை ஜுன் மாதத்தில் பதிவு செய்திருந்தது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துசண்டையை மையமாக வைத்து ஆர்யா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார்.இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, முரளி.ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி நல்ல பலதரமான விமர்சனங்களை பெற்று வருகிறது.
ஒவ்வொருநாளும் நடைப்பயிற்சியில் ஈடுபடும் வயதான ஒருவர், ஒருநாள் வெளியில் செல்ல முடியாமல் போய்விட்டால், குட்டிபோட்ட பூனையைப் போல, வீட்டுக்குள் அங்குமிங்கும் உலாவித்திரிவார்; எவ்விதமான ஆறுதலுக்கும் செவிசாய்க்கமாட்டார். அவ்வாறானவர்களைக் கட்டுப்படுத்துவது என்பது நினைத்துக்கூட பார்க்கமுடியாது.
எதிர்கால சந்ததியினர் மீது திட்டமிட்டு நஞ்சை ஊட்டாதீர்
ஒவ்வொன்றுக்கும் எதிர்வினை நிகழத்தான் செய்யும். அதில் பெரும்பாலானவை இயற்கையாகவே இடம்பெறும்; வேண்டுமென்றே, திட்டமிட்டு செய்யப்படும் எதிர்வினைகள் பலவாகும். அவற்றைத் தடுத்து நிறுத்துவதென்பது குதிரைக்கொம்பாகவே இருக்கிறது. ஏனெனில், அவ்வாறான செயல்களில் பலவற்றுக்குப் பின்னால், அரசியல் ஒழிந்தே இருக்கிறது.
மனித உயிர்களுக்கு மதிப்பில்லாமல் போகும் நிலைமையே காணப்படுகின்றது என்பது, ஒவ்வொரு நாளும் இடம்பெறுகின்ற வீதி விபத்துகளின் ஊடாக அவதானிக்க முடிகின்றது. 24 மணிநேரத்துக்குள் ஆகக் குறைந்தது 10 உயிர்களை வீதி விபத்துகள் காவுகொண்டுவிடுகின்றன.
மரம் நடுவதற்கான 10 விதிமுறைகளை அறிவியலாளர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதைக் கவனமாக பின்பற்றுவது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும்.மரம் நடுவது நன்மை தரும்; பருவநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தைக் காக்க உதவும் என மரங்கள் பல பலனை தரும். ஆனால் இடத்திற்கு தகுந்தாற்போல ஒரு மரத்தை நடவில்லை என்றால் அதுவே தவறாக முடிந்துவிடும் என்கின்றனர் லண்டனில் உள்ள க்யூ தாவரவியல் பூங்காவை சேர்ந்த நிபுணர்கள்.
இன்று உலக ஈர நிலங்கள் தினம் ஈரநிலங்கள் மற்றும் நீர் ‘;Wetlands and Water” ‘என்னும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆண்டு உலக ஈரநிலதினம் கடைப்பிடிக்கப்படுகிறது.