மத மாற்றமும் மன மாற்றமும்

(சோழந்தூர் அப்துல்லாஹ்)

யுவன் சங்கர் ராஜா அடிக்கடி முஸ்லிம் சமூகத்தால் கொண்டாடப்படும் போதெல்லாம்..என் மண்டைக்குள் ஒரு விசயம் ஓடிக்கொண்டே இருக்கும்..பல முறை முகநூலில் எழுதுவேன் ஆனால் பதிவேற்றம் செய்யாமலே Discard செய்துவிடுவேன்.

அறிவுக்களவு செய்யும் யாழ்பல்கலை பேராசிரியர்கள்: முன்நாள் விரிவுரையாளர் பகிரங்க குற்றச்சாட்டு!!

யாழ் பலக்லைக்கழக கல்விசார் ஊழியர்களின் (Academic Staff) கல்விசார் மற்றும் அறிவுசார் மோசடிகளை (Academic and Intellectual Frauds) மேற்கொண்டுவருவதான பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார் யாழ் பல்கலையின் முன்நாள் விரிவுரையாளரான கலாநிதி முத்துகிருஷ்ணா சர்வானந்தன் யாழ் பல்கலைக்கழகத்தில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற சில விரிவுரையாளர்கள், பிற கல்விமான்களின் கல்விசார் வெளியீடுகளை அல்லது கருத்துக்கள் மற்றும் உள்ளடக்கங்களை திருடி, பிரதிபண்ணி தமது பெயரில் பிரசுரிப்பது…..

லெனின் ஏன் நமக்கு என்றும் தேவைப்படுகிறார்?

பாரதியால் ‘ஆகாவென் றெழுந்தது பார் யுகப்புரட்சி/ கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்!’ என்று புகழப்பட்டது ரஷ்யப் புரட்சி. அந்தப் புரட்சியின் தலைவர் லெனின். ‘உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்’ என்று உரத்த குரலில் ஓங்கி ஒலித்த மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் தத்துவங்களை நடைமுறைப்படுத்தியவர் லெனின்.

அருந்ததியர் சமூகத்தின் ஆவணப் பெட்டகம், தலித்தின் குறிப்புக்கள

(நிலாந்தி சசிகுமார்)

இலங்கையின் வரலாற்றில் அருந்ததியினர் சமூகம் பற்றி வெளிவரும் முதல் நூல் இதுவாகும்.90 களில் சரிநிகரில் வெளிவந்த தொடர் பத்தி தலித்தின் குறிப்புகளாக நூல் வடிவம் பெற்றிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

கடல் அட்டை வளர்ப்பும், தீவக கடல்களின் பொருத்தப்பாடும் – அவைகளின் அரசியலையும், சூழலியலையும் முன்வைத்து – 04

ஏ.எம். றியாஸ் அகமட் (அம்ரிதா ஏயெம்) (சிரேஸ்ட விரிவுரையாளர், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்

நீருயிரின வளர்ப்பு:

நீருயிரின வளர்ப்பிற்கு, உயிரியல், பொருளாதார, சட்டரீதியான பல வரைவிலக்கணங்கள் காணப்படுகின்றன. மூலப்பொருள், சக்தி, தொழிலாளர்கள் போன்ற உள்ளீடுகளை இட்டு, வளர்க்கப்படும் தாவர, விலங்குகளின் இறப்பு வீதம், பிறப்பு வீதம், இனப்பெருக்கம் போன்றவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தி வளர்க்கும் முறை என வரைவிலக்கணப்படுத்தலாம். நீரில் தாவரங்களையும், விலங்குகளையும் வளர்க்கும் அறிவியல் எனவும் இலகுவாக இனனொருமுறையில் வரைவிலக்கணப்படுத்தலாம்.

கடல் அட்டை வளர்ப்பும், தீவக கடல்களின் பொருத்தப்பாடும் – அவைகளின் அரசியலையும், சூழலியலையும் முன்வைத்து – 03

ஏ.எம். றியாஸ் அகமட் (அம்ரிதா ஏயெம்) (சிரேஸ்ட விரிவுரையாளர், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்)

இலங்கை மீன்பிடிக் கைத்தொழிலும், வளங்களும்:

இந்தியாவிற்கு தென்கிழக்கில் இந்திய உப கண்டத்தில் அமைந்திருக்கும் இலங்கையானது பல கரையோர அம்சங்களைக் கொண்ட 1770 கிலோமீற்றர் கரையோரத்தையும், 200 கடல் மைல் பிரத்தியேக பொருளாதார வலயத்தையும் (Economic Exclusive Zones), 517000 சதுர கிலோமீற்றருக்கு மேற்பட்ட ஆள்புல உரிமையுள்ள (Soveriegn rights) சமுத்திர பிரதேசத்தையும் கொண்டு காணப்படுகின்றது. இலங்கையின் தரைப் பரப்பளவைவிட 8 மடங்கு கடல் பரப்பு அதிகமாகும். இவைகளில் கண்டமேடையும், ஆழ்கடலும் அடங்குகின்றன. இங்கு பதினொரு சதவீதமாக காணப்படும் கண்டமேடைகளில்; 250000 தொன் அடித்தள, இடைத்தள, மேற்தளவாழி மீன்களும், ஆழ்கடல் மீனினங்களும் (இவைகள் இடம்பெயரக்கூடியன) பிடிபடுகின்றன. இருந்தும் மீன்பிடியானது சராசரியாக 25 கிலோமீற்றருக்குள்ளும், ஆகக்கூடியது 40 கிலோமீற்றருக்குள்ளும், மொத்தமாக 25000 தொடக்கம் 30000 சதுர கிலோமீற்றருக்குள்ளேயே நடைபெறுகின்றது.

கடல் அட்டை வளர்ப்பும், தீவக கடல்களின் பொருத்தப்பாடும்:– அவைகளின் அரசியலையும், சூழலியலையும் முன்வைத்து – 02

ஏ.எம். றியாஸ் அகமட் (அம்ரிதா ஏயெம்) (சிரேஸ்ட விரிவுரையாளர், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்)

உள்ளுர் அறிவு:

பெனடிக்ற் சின்னமணியை இருத்தி உரையாடுவதற்கு தயாரானேன். றெஜினோல்டும், சசியும் அருகே இருந்தார்கள். கடுமையா களைச்சிப் போயிருப்பயள். உடுப்ப மாத்திக்கி, றெஸ்ட் எடுத்துற்றுக் கதைப்பம் என்றார். நான் களைக்கல்ல. கதைப்பம் என்றேன். என்ன குடிப்பம் என்றார். பிளேன்ரி என்றேன். இஞ்சி போட்டதா, வேர்க்கொம்பு போட்டதா?. வேர்க்கொம்பு என்றேன். சாப்பாட்டுக்கும், நான் தங்குதவற்குமான அறைக்கும் மிகுந்த கவனமெடுக்க ஓடித்திருந்தார்.

இந்த பதிவை இரண்டு முறையாவது படிங்க

உலகில் ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம் 70 ஆண்டுகள்.

குழந்தை வயது முதல், பருவ வயது வரை:

முதல் 20 வருடங்கள் வாழ்க்கையின் அர்த்தம் தெரியாமல் விளையாட்டாக ஓடிவிடும்.

கிழக்கு மாகாணம் வரை படம்

(Thulanchanan Viveganandarajah)

கி.பி 1695இல் வரையப்பட்ட இலங்கையின் ஒரு ஒல்லாந்து வரைபடம், இணையத்தில் காணக் கிடைத்தது. முந்நூறு ஆண்டுகள் கடந்தும் கிழக்கிலங்கைக் கிராமங்கள் பெரும்பாலும் அப்படியே பெயர் மாறாமல் இருக்கின்றன என்பதை வெள்ளையர் சொற்களினூடே கண்டபோது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! நீங்களும் கண்டு களியுங்கள்! 🙂

கதிர்காமம் தொடர்பாக 1977 இல் தாக்கல் செய்யப்பட்டு இருந்த வழக்கு

(Tharshanth Rajenthram)

கதிர்காமக்கந்தன் கோயில் சம்பந்தமான பின்வரும் விண்ணப்பத்தை மனுதார் (செ. சுந்தரலிங்கம் உயர் நீதி மன்றத்தில் 1977-ம் ஆண்டு தாக்கல் செய்துள்ளார்:- “பிரசித்த நொத்தாரிசு ஜே. கதிரமான் (து. ஊயனயசயஅயn) 1898-ம் ஆண்டு மார்ச் மாதம் 9-ம் திகதி எழுதி கைச்சாத்திட்ட 2317 இலக்க உறுதியின் சட்டதிட்ட நிபந்தனைகளின் பிரகாரம் மேலே சொல்லப்பட்ட கதிர்காமக் கோயில்களின் சில கட்டடங்கள், காணி பூமிகள் சட்டரீதியாக நியமிக்கப்பட்ட தர்மகர்த்தாவும், அவற்றை நிர்வகித்து நடத்த உரிமை பெற்றவருமான தத்தாரமகிரி சுவாமியை வெளியேற்றி விட்ட மேற்குறிப்பிட்ட கட்டடங்களையும் நிலபுலன்களையும் உரிமைகொண்டாடி தனக்கே சொந்தமாக்கி கொள்ள முதல் பிரதிவாதி (பிக்க சித்தார்த்த தேரோ) முயற்சித்து வருகிறார். மூல உறுதியின் உண்மையான பிரதி P (பி) இலக்கமிட்டு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.