(J P Josephine Baba)
சங்கம்புழா கிருஷ்ண பிள்ளை என்ற கவிஞரை நினைத்தால் துயர் தொற்றி கொண்டாலும், அவருடைய கவிதைகள் ஒரு தாலாட்டும் சங்கீதம் போன்றே நம்மை பின் தொடர்கிறது. நம் கவலைகளை தேற்றும் இசையாக தொடர்கிறது. உயிரோட்டமான அவருடைய வார்த்தைகள் ஆதரவாக நம்மை பின் தொடர்கிறது.
Category: கவிதைகள்
Poems
கவிதை: பேதுருவுக்கு எழுதிய புதிய திருமுகம் அல்லது சர்க்கரைக் கிண்ண முத்தம்
(பதிவுகள்.காம்)
- செல்லத்துரை சுதர்சன் –
- நல்ல கவிதை. கியூபாவின் மானுட நேயத்தைச் சரியான நேரத்திலுணர்ந்து எழுதிய கவிதை. உலகின் எந்தப்பகுதியிலென்றாலும் இதுபோன்ற பேரழிவுகளின்போது கியூபா தன் மருத்துவர்களையு, மருந்துகளையும் அனுப்பி உதவுவது வழக்கம். ஆனால் இம்முறை மேற்கு நாடுகளிலும் இத்தகைய அழிவுகள் ஏற்படுகையில், உலகமே பேரழிவை எதிர்நோக்கிக் காத்திருக்கையில் இவ்விதமான மானுட நேயச் செயற்பாடுகள், உதவிகள் போற்றப்பட வேண்டியவை. இவ்வழிவிலிருந்து மீண்டபின்னர் மேற்கும் கியூபாவின் பரந்த உள்ளத்தை உணர்ந்து, தடைகளை நீக்குமென எதிர்பார்ப்போம். –
மரம் நடுகை மாதம் பகுதி 4

(வடகோவை வரதராஜன்)
முன்னைய தொடர்ச்சி
நான் முன்பு கூறிய மாதிரி ;
நாம் நடும் மரங்கள் மனிதனுக்கு , விலங்குகளுக்கு பறவைகளுக்கு , தேனீக்களுக்கு பயன்படுவையாக இருக்கவேண்டும் . ஒரு மண்ணுக்கு சம்மந்தம் இல்லாத மரத்தை நாம் நடும் போது அது வளராது அல்லது வீரிய வளர்ச்சியைக் காட்டாது . உங்கள் சூழலில் இயற்கையாக என்ன மரங்கள் வளர்ந்திருக்கின்றன என அவதானியுங்கள் . அவற்றை நடுகை செய்யுங்கள்
துலாக்கோலின் சூட்சுமமா..?

நேற்றைக் கிரவு…, நீள்துயிலுக்
கிடையினிலே
ஏற்றம் இறைப்பதுபோல் ஓர்கனவு;
ஏற்றமதில்,
ஏறி மிதித்ததுநான்; இறைத்தவனோ இன்னொருவன்
சாறிக் கிடந்தஅந்த செம்பாட்டுத் தரைமேலே
ஆறிஆறி ஓடியது ஊற்றியநீர்;
ஏறியநான்
எட்டி முன்வந்து உழக்கநீர் மொள்ளுவதும்
விட்டுப் பின்செல்ல வெளிக்கிழம்பிப் பட்டையது
திட்டைக்கு ஏறித் தண்ணீர் சொரிவதுமாய்…
பட்டுப் பட்டென்று பகல்போலக் காட்சிதர,
எட்டிக் கீழ்நின்று இறைப்பவனை நோக்குகிறேன்..
இன்று அசாமில் நாளை எங்கோ….?
என்னையும் அவர்கள் சிலுவையில் அறைந்தார்

வெருகல் படுகொலையின் வெஞ்சினம்
பேரிகை ஆற்றின் கதறல்.
கதிரவெளி ஒரு குருசேத்திரமாக
மகாவலி உறைந்து போனதொரு கணத்தில்
கிழக்கு சூரியனும் உதிக்க மறுத்தான்
வெலிக்கடையையும் வென்றுவிட்ட இறுமாப்பு
வடக்கேயிருந்து வந்த வன்னி சூறாவளிக்கு
அன்றுதான் 1972 ஆண்டுகள் கழித்து
இரண்டாவது பெரியவெள்ளியை
எழுதிச் சென்றது இலங்கைத்தீவின் வரலாறு.
வடக்கு வாரியடித்த புழுதியில்
வாகரைக்காடுகள் அதிர்ந்தது மட்டுமல்ல
கிழக்கு மண்ணும் சிவந்தது.
வெருகலாற்று படுக்கை வெந்தணலானபோதும்
வங்கக்கடல் வற்றிவிடப்போவதில்லையே
அதை நாம் அறிவோம் என்றும்
காற்று திருப்பி அடிக்கும் காலம் வரும் என்றும்
கணக்குத் தீர்த்துக்கொள்ள காத்திருப்போம் என்றும்
காடுகளுக்கு சொல்லிப்பறந்தது
கதிரவெளி கடலலைகளுக்குள் ஒர் ஆள்காட்டி குருவி.
பிரண்டை தண்டு
எம்மிடம் வேலைபார்க்கும் இருவருக்கு முழங்கால் வலி அதிகமாக இருந்தன ஏதாவது பண்ணுங்க என்றார்கள்……
கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லாமல் இருக்கிறது என்றார்கள் எங்கம்மா ஏர் உழுவும் காலங்களில் கால் வலியை போக்க. பிரண்டையை சிறிது நேரம் மோரில் ஊற வைத்து பிறகு அதில்,மல்லிதலை,தூதுவளை, கறிவேப்பிலை சேர்த்து துவையல் செய்து தந்த ஞாபகம் அதையே இங்கு செய்தோம் …… (“பிரண்டை தண்டு” தொடர்ந்து வாசிக்க…)
நாபா என்னும் மானுடன்
வரதண்ணா ஒரு சகாப்தம்
இயலாத தாய்
சுட்டு வைத்த பணியாரம்
சிறுபிள்ளை பிராயத்தில்
கடை முழுதும் சென்று விற்றீர்…
விற்று வீடுவந்து
கல்வி தாகத்தால்
பள்ளிக்கும் ஓடுவீர்..