நீதிமன்ற வளாகத்திற்குள்…. வரவேண்டிய கார் வரவில்லை

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவவை 15 மில்லியன் ரூபாய் ஒப்பந்தத்தில் சுட்டுக் கொன்றதாக கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். 

கடவுச்சீட்டு: ஒரு நாள் சேவை குறித்த விசேட அறிவிப்பு

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தால் 24 மணி நேர ஒரு நாள் சேவை கடவுச்சீட்டுகளை வழங்குவது குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு நாயகம் பி.எம்.டி. நிலுஷா பாலசூரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வித்தியா கொலை வழக்கு ; லலித் ஜயசிங்கவுக்கு கடூழிய சிறை

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் பிரதான சந்தேகநபரை ஆரம்பத்தில் விடுவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்றம் இன்று (20) தீர்ப்பை வழங்கியது. 

கொலைக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டது

கெசல்பத்தர பத்மேவின் தந்தையின் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தின் இலக்கம் 5 ஆம் அறையில், சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கடந்த 19 ஆம் திகதி சுட்டு படுகொலை செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில் பல விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டு வரம் நிலையில், தற்போது கொலைக்கான காரணத்ழதயும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

தோழர் லட்சுமி நஞ்சப்பன் மறைவு !

தோழர் லட்சுமி நஞ்சப்பன் மறைவு !எம் இதய அஞ்சலிகள்!!

மிக இருண்ட காலத்தில் நிர்க்கதியான காலத்தில் தோழர் நாபா தோழர்கள் சென்னையில் படுகொலை செய்யப்பட்ட நாட்களில் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் அறச் சீற்றம் கொண்டார்கள் .தர்மபுரியில் அவர்களது பேராளர் மாநாடு. தோழர் நஞ்சப்பன் அவரது துணைவியார் லட்சுமி ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் உறுதுணையாக நின்றார்கள்.

ஒரு மேடையில் மறைந்த உன்னத தோழர்கள் மொகித் சென் த.பாண்டியன் உட்பட வரலாறு கண்ட தோழர்கள் அருகில் நின்றார்கள். தர்மபுரியில் பேரணி ஆண்களும் பெண்களுமாக நூற்றுக்கணக்காக பேரணியில் தோழர் நாபாவின் பதாகைகளையும் அவர்கள் உயர்த்தி சென்றார்கள் பசுமையாக எம் நினைவுகளில் .தோழர்களின் படுகொலை தொடர்பாக தோழர் நஞ்சப்பனின குரல் தமிழக சட்ட சபையிலும் ஒலித்ததுமறக்கிலோம்

ஒன்றரை கோடி ரூபாய் ஒப்பந்தம்? டுபாயில் முக்கிய புள்ளி

புதுக்கடை நீதிமன்றத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அடுத்தடுத்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துகொண்டு இருக்கின்றன.

இளநீர் விலை 300 ஐ தாண்டியது

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இளநீர் விலை கடந்த நாட்களில் 300 ரூபாயைத் தாண்டிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறிய அளவிலான இளநீர் 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். 

செவ்வந்தியை கண்டுபிடிக்க உதவி கோரும் பொலிஸார்

கனேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய, பெண் சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். 

கொலையாளியை அழைத்துச் சென்ற வேன் ஓட்டுநர் கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்ல உதவிய வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பாராளுமன்றத்தில் இதனை இன்று (20) தெரிவித்தார்.

உணவகங்களில் திடீர் சோதனை

பொது மக்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மிக்க உணவுகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில்  கல்முனை பிராந்தியத்திலுள்ள உணவகங்கள், உணவு கையாளும் நிறுவனங்களை சோதனைக்குட்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.