எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை மற்றும் இறைச்சியைத் தட்டுப்பாடின்றி மக்களுக்கு வழங்க முடியும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். ஜனவரி மாதம் வரை முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையில் மாற்றம் இருக்காது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
Category: செய்திகள்
தேங்காய் விலை மேலும் உயரும்?
சட்டவிரோத வாகன இறக்குமதி குறித்து சுங்கத் திணைக்களத்திடம் விசாரணை
’’இன முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சி’’
வடக்கு , கிழக்கில் இடம்பெற்ற மாவீரர் தின அனுஸ்டிப்புக்களை திட்டமிட்ட வகையில் திரிபுபடுத்தி வடக்கு – தெற்குக்கிடையில் இனவாத முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் புகைப்படம் மற்றும் காணொளிகளை பதிவேற்றம் செய்தவர்களில் இருவர் புதிய ஜனநாயக முன்னணியின் செயற்பாட்டாளர்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
தென்கொரியாவில் அவசரநிலை பிரகடனம்: ஒரே நாளில் வாபஸ்
மூன்று சட்டமூலங்களை சமர்ப்பிக்க திட்டம்;நீதியமைச்சர்
திருடப்பட்ட சொத்துக்களை மீளப்பெறுதல், பணமோசடி, போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் மூன்று சட்டமூலங்களை அடுத்த வருடத்தின் முதல் காலாண்டுக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று தெரிவித்தார்.
பெண் பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவி சரோஜா சாவித்திரி போல்ராஜ்
பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் முதல் தடவையாகப் பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) கூடியது. இதில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஹேமாலி வீரசேகர, பாராளுமன்ற செயலாளர் நாயகமும், ஒன்றியத்தின் செயலாளருமான குஷானி ரோஹனதீர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அரசாங்க கொள்கை அறிக்கை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நவம்பர் 21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்க கொள்கை அறிக்கை மீதான தீர்மானம் இன்று பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அரசாங்க கொள்கை அறிக்கை மீதான விவாதம் நேற்று காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் இன்று காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும் இரண்டு நாள் விவாதமாக நடைபெற்றது.
W.M.மென்டிஸ் அன்ட் கம்பெனியின் உரிமம் இடைநிறுத்தம்
யாருக்கு Bar அனுமதி பத்திரம்: மாலை தெரியும்
மதுபானசாலைகள் (பார்) அனுமதி பட்டியல் இன்று(04) மாலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சுகாதார அமைச்சரின் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கடந்த சீசனில் சட்டவிரோதமாக பார் அனுமதி பெற்றவர்கள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட சபை உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.