ஜனாதிபதி நிதியம்;பொலிஸ் விசாரணைகள் ஆரம்பம்

ஜனாதிபதி நிதியில் ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என்பதை கண்டறிய பொலிஸ் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிய வருகிறது.

8747 சாரதிகள் கைது

கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் எப்பாகத்திலும் பாரிய விபத்துக்கள் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திணைக்களம், மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 சாரதிகள் உட்பட, வீதி சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 8,747 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

நாளை 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள்

சுனாமி அனர்த்தம் இடம்பெற்று 20 வருடங்கள் பூர்த்தியடையும் டிசெம்பர் 26ஆம் திகதி (நாளை) காலை 9.25 மணி முதல் 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்களை கோரியுள்ளது. 2004 டிசம்பர் 26, அன்று நடந்த இந்த பேரழிவில் 35,000 க்கும் அதிகமானோர் இறந்தனர் மற்றும் 5,000 க்கும் அதிகமானோர் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது

“இராணுவ காணிகளை விடுவிக்க மக்கள் கோரவில்லை” – வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்

வடக்கு மக்கள் , இராணுவத்தினரின் காணிகளை விடுவிக்க கோரவில்லை. அவர்களின் சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோருகிறார்கள் என்ற தெளிவுபடுத்தலை தென்னிலங்கை மக்களுக்கு எடுத்துச் சொல்லுமாறு என்னைச் சந்தித்த தென்னிலங்கையைச் சேர்ந்த சிவில் சமூகக் குழுக்களிடம் தெரிவித்துள்ளேன் என வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன்  தெரிவித்துள்ளார். 

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொலை:இஸ்ரேல் ஒப்புக்கொண்டது

ஜூலை மாதம், ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் கொன்றதை, இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், முதல் முறையாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.

ரோமானிய தூதுவருடன் பிரதமர் சந்திப்பு

இலங்கையின் ரோமானிய தூதுவர், Steluta Arhire தனது பதவிக் காலத்தை முடித்துக்கொண்டு திங்கட்கிழமை (23) பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இராமேஸ்வரம் மீனவர்கள் 17 கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த   17 இந்திய மீனவர்களை செவ்வாய்க்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 17 மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்தோடு, மீனவர்களையும் படகுகளையும் தலைமன்னார் கடற்படையிடம் ஒப்படைத்து விசாரணைகளுக்கு உற்படுத்தி வருகின்றனர்.

மீண்டும் தலைதூக்கும் பாதாள உலக குழுக்கள்

மீண்டும் தலைதூக்கும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.  இன்று (24) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதை தெரிவித்தார். 

ஹட்டன் பஸ் விபத்து: அதிர்ச்சித் தகவல் வெளியானது

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் மல்லியப்பு பகுதியில் கடந்த 21ஆம் திகதி விபத்துக்குள்ளான நிலையில், குறித்த பஸ் இன்று நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகன பரிசோதகரால் பரிசோதிக்கப்பட்டது.