அன்னதான நெரிசலில் சிக்கி 32 பேர் பலி

நைஜீரியாவில், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி , அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபோது நேர்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி 32 பேர் உயிரிழந்துள்ளனர். நைஜீரியாவில், கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் இலட்சக்கணக்கானோர் அங்கு பட்டினியில் சிக்கி தவிக்கின்றனர். 

புதுவருடத்தில் டிஜிட்டல் மயமாகும் பொதுத்துறை

எதிர்வரும் வருடத்தில் இலங்கையின் பொதுத்துறையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் ஆரம்பிக்கப்படும் என இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார். கொழும்பு தேசிய நூலகம் மற்றும் ஆவணச் சேவைகள் சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

கெசல்கமுவ ஒயாவை அளவீடு செய்ய முயன்றோர் விரட்டியடிப்பு

காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் பொகவந்தலாவ டின்சின் பகுதியில் உள்ள கெசல்கமுவ ஒயாவை அனுமதியின்றி  அளவீடு செய்ய வந்த குழுவினர் தோட்ட நிர்வாகத்தினரால் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம்  திங்கட்கிழமை (23)  இடம்பெற்றது.

சந்திரிகா மாவத்தைக்கு கடும் பாதுகாப்பு

வாகன கொள்ளையர்களின் பிடியில் சிக்கியுள்ளதாக கூறப்படும் மாலம்பே தொடக்கம் அம்பத்தளை வரையிலான  சந்திரிகா குமாரதுங்க மாவத்தையில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை ஏற்பாடு செய்யுமாறு மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அப்பகுதி பொலிஸார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு திங்கட்கிழமை (23) பணிப்புரை விடுத்துள்ளார்.

கலாநிதி ஆயிஷா தலைவராக நியமனம்

தேசிய கைவினைப் பேரவையின் தலைவராக வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு மேம்பாட்டில் நிபுணரான கலாநிதி ஆயிஷா விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனத்துக்கான கடிதத்தை கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி உத்தியோகபூர்வமாக  வழங்கினார்.

கட்சித் தாவினார் சந்திரசேன

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராமன்ற உறுப்பினர் எஸ். எம். சந்திரசேன சர்வஜன சக்தி கட்சியின் உறுப்புரிமையை, திங்கட்கிழமை (23) பெற்றுக்கொண்டார்.

CSE புதிய உச்சத்தை எட்டியது

கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 15,000ஐத் தாண்டியது, இது, திங்கட்கிழமை (23) காலை  வர்த்தகத்தின் போது 15,027 என்ற சாதனையை எட்டியது. அதே நேரத்தில், மிகவும் செயலில் உள்ள பங்குகளைக் கண்காணிக்கும் S&P SL20 குறியீடும் அதிகரித்து, 4,494ஐ எட்டியது. வருவாய் 4 பில்லியன் ஆகும்.

முன்னாள் ஜனாதிபதிகளிடம் இருந்து முப்படையினர் நீக்கம்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த முப்படை வீரர்களை திங்கட்கிழமை (23) முதல் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் முப்படைத் தளபதிகளுக்கும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

’’மேலதிக புகையிரத சேவைகளை மேற்கொள்ள முடியாது’’

புகையிரத ஊழியர்கள் மற்றும் புகையிரத இயந்திரங்களின் பற்றாக்குறையினால் பண்டிகைக் காலங்களில் மேலதிக புகையிரத சேவைகளை மேற்கொள்ள முடியாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய சுற்றறிக்கைக்கு அமைச்சர் எதிர்ப்பு

மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் தமது சொந்த பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கட்டணத்துடன் பிரத்யேக வகுப்புகளை நடாத்துவதற்கு தடை விதித்து அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.