”பொய்யை உண்மை என நம்ப வைக்க முழு உரிமை உள்ளது”

உண்மை ஒன்றை பொய் அல்லது பொய்யான ஒன்றை உண்மை என மற்றவர்களை நம்ப வைக்க மக்களுக்கு முழு உரிமை உள்ளது, அது ஜனநாயக உரிமை என NPP பாராளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கோட்டஹச்சி நேற்று (21) தெரிவித்தார்.

முதலை தாக்கி பெண் பலி

பவக்குளத்தை அண்மித்த உலுக்குளம பிரதேசத்தில் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி 67 வயதுடைய பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (21) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். புதுக்குடியிருப்பு சுடுவேந்திரபிலவில் வசிக்கும் பெண் மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது அருகில் உள்ள கால்வாயில் இருந்த முதலை தாக்கியுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உளுக்குளம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வேட்பாளர் பட்டியலை பொலிஸில் சமர்ப்பிக்க நடவடிக்கை

பொதுத் தேர்தலில் போட்டியிட்டதையடுத்து வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய வேட்பாளர்களின் பட்டியலை இலங்கை தேர்தல் ஆணைக்குழு பொலிஸிடம் வழங்க உள்ளது. அதற்கேற்ப சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பித்த வேட்பாளர்களின் பெயர்கள் மாவட்ட செயலகங்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

வவுனியாவில் அதிக பனிமூட்டம்: சாரதிகள் அவதி

வவுனியாவில் அண்மைய நாட்களை விடவும், ஞாயிற்றுக்கிழமை (22) அதிக பனிமூட்டமாகக் காணப்படுகின்றது. கடும் பனிமூட்டம் காரணமாக போக்குவரத்தை மேற்கொள்வதில் வாகன சாரதிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக  ஏ-9 வீதி மற்றும் மன்னார் வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள் ஒளியைப் பாய்ச்சியபடி சென்றமை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

ஜனவரியில் சீனா செல்கின்றார் ஜனாதிபதி

ஜனவரி மாதம் ஆரம்பத்தில் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.  மகாசங்கத்தினரை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டார்.

சடுதியாக குறைந்தது முட்டை விலை

நாட்டில் சில பகுதிகளில் முட்டை விலை சடுதியாக குறைந்து வருவதாக முட்டை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதன்படி, முன்னர் 40 ரூபாய் தொடக்கம் 45 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது 25 ரூபாய் தொடக்கம் 30 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் குறிப்பிடுகின்றனர். ஜாஎல, கந்தானை, ராகம உள்ளிட்ட பிரதேசங்களில் முட்டையின் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

15 முன்னாள் அமைச்சர்களின் விமான பயண விபரங்கள் கசிவு

கடந்த காலங்களில், 15 முன்னாள் அமைச்சர்கள் இலங்கை விமானப்படையின் விமானங்களை பல்வேறு பயண மற்றும் போக்குவரத்து தேவைகளுக்காக பயன்படுத்தியதாக, இலங்கை விமானப்படை தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஹட்டனில் கோர விபத்து: மூவர் பலி; 27 பேர் படுகாயம்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், சற்றுமுன்னர், பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், மூவர் உயிரிழந்ததுடன், 27 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சிலர் கண்டி வைத்தியசாலைக்கு, மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தவில்லை திருப்பி அனுப்பப்படுகின்றது

20.12.2024
நன்றி – சாந்தாதேவி தர்மரத்தினம் (முன்னாள் ஒருங்கிணைப்பாளர் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு)