ஜனாதிபதி – மகாநாயக்க தேரர்கள் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (20) மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். 

வர்த்தமானியை வெளியிட நடவடிக்கை

வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயது வர்த்தமானியில் வெளியிடப்படாதமை குறித்த அமைதியின்மை மற்றும் நிச்சயமற்ற தன்மையை அடுத்து, 200 இற்கும் மேற்பட்ட நிபுணர்கள் முன்கூட்டியே ஓய்வு பெறக்கூடிய அபாயம் உள்ளதால், அரச நிர்வாக அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக அறிய வருகின்றது.

உப்புத் தட்டுப்பாடு; இறக்குமதிக்கு அனுமதி

இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் ஊடாக 30,000 மெற்றிக் தொன்கள் வரை பதப்படுத்தப்படாத உப்பை இறக்குமதி செய்வதற்கு இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பொலிஸாருக்கு வாகனங்கள் வாங்க இந்தியா நிதியுதவி

இலங்கை பொலிஸாருக்கான வாகன தேவைகளை பூர்த்தி செய்வதற்கு 300 மில்லியன் இலங்கை ரூபாயை மானியமாக வழங்க இந்திய அரசாங்கம் இணங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.

103 பேருடன் முள்ளிவாய்க்காலில் கரையொதுங்கிய படகு

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில்  வெளிநாட்டு பிரஜைகள் 103 பேருடன்    படகொன்று   வியாழக்கிழமை (19) கரையொதுங்கியுள்ளது. மியன்மாரில் இருந்து 103 பயணிகளுடன் படகொன்று திசைமாறி வந்து கரையொதுங்கியுள்ளது. குறித்த படகில் 25 க்கும் மேற்பட்ட சிறுவர்களும்  உள்ளடங்கியிருக்கின்றனர்.

“சைகை மொழியை அரச மொழியாக்குக”

கிளிநொச்சியில் சைகை மொழியை அரச மொழியாக அனைத்து இடங்களிலும் பயன்படுத்த வலியுறுத்தி கவனயீர்ப்பு பேரணியும் விழிப்புணர்வு கூட்டமும் புதன்கிழமை (18)  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு இலவச பசளை வழங்கி வைப்பு

திருகோணமலை மாவட்ட நிலாவெளி கமநல சேவை பகுதிக்குட்பட்ட விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் MOP பசளை வியாழக்கிழமை (19)  விநியோகிக்கப்பட்டது.  குறித்த உர விநியோகம் பதில் கமநல  அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ரமேஷ் தலைமையில் நிலாவெளி கமநல சேவை  நிலையத்தில் இடம்பெற்றது 

மதுபானசாலையை அகற்றகோரி மனு

உடுப்பிட்டி , இமையாணன் மேற்கில் புதிதாக திறக்கப்பட்ட மதுபானசாலையை அகற்ற கோரி அப்பகுதியை சேர்ந்த 35 பொது அமைப்புக்கள் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்பள்ளி சிறார்களுக்கு உணவு கொடுப்பனவு அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பகால குழந்தை அபிவிருத்தி நிலையங்கள் மற்றும் முன்பள்ளி சிறார்களுக்கு வழங்கப்படும் காலை உணவு கொடுப்பனவை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, ஒரு பிள்ளைக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் 60 ரூபாயை 100 ரூபாயாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மற்றொருவரின் எம்.பி பதவியை சவாலுக்கு உட்படுத்தி ரிட்மனு

மற்றுமொருவரின்  எம்.பி பதவியை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் டாக்டர். உபாலி பன்னிலகே, பாராளுமன்ற உறுப்பினராக (எம்.பி) பதவி வகிக்கத் தகுதியற்றவர். எனவே அவர் அமைச்சராகவும் பதவி வகிக்க தகுதியற்றவர் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.