3 வினாக்கள் கசிந்த விவகாரம்: இரகசிய அறிக்கை கையளிப்பு

ஐந்தம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளில் பகுதி I வினாத்தாளில் மூன்று கேள்விகள் கசியவிட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளின் விரிவான தகவல்கள் அடங்கிய இரகசிய அறிக்கையை குற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளர் உயர் நீதிமன்றில் வியாழக்கிழமை (19) கையளித்துள்ளார்.

திருட்டுப் பணம் மீண்டும் இலங்கைக்கு கொண்டு வரப்படுமா?

முகமூடி அணிந்த பெண் ஒருவர் NPP பாராளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கோட்டஹச்சியிடம் வாக்குகளைப் பெறுவதற்காக அவர் குறிப்பிட்டது போல் உகாண்டாவில் பதுக்கி வைக்கப்பட்டதாக கூறப்படும் திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு அவர்களின் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ள சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

ஞானசார தேரருக்கு பிடியாணை

மத அவமதிப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர்,  இன்று (19) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றில் ஆஜராகாததால் அவரை கைது செய்து மன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

ஜனாதிபதி அவர்கள் இந்திய விஜயத்தின் போது ஊடகங்கள் முன்னிலையில் ஆற்றிய உரை

2024 டிசம்பர் 16
மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களே,
மாண்புமிகு அமைச்சர்களே,
கனவான்களே, கனவாட்டிகளே,
ஊடகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நண்பர்களே!
ஆயுபோவன்,வணக்கம், நமஸ்தே!
இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் எனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக புதுடெல்லிக்கு வருகைதருவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

ஒற்றைப் பனைமரம்

(Puthiyavan Rasiah)

26 மார்கழி மாலை 3.00 மணிக்கு ‘ஒற்றைப் பனைமரம்’ திரைப்படம் சிறப்புக் காட்சி இடம்பெறுகிறது. திரையிடலை ஒழுங்கு செய்திருக்கும், Siva Abctamilnet அவர்களுக்கு நன்றி. சமுகம் சார்ந்த திரைமுயற்சிகளுக்கான முதலீடு என்பது, பெரும் சவாலாகவே இருக்கிறது. எனது அடுத்த படத்திற்கான முதலீட்டை பெற்றுக்கொள்ள, ஒரு புது முயற்சியாக இத்திரையிடலைப் பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறார் சிவா. காட்சிக்கான நுழைவு இலவசம்.

வவுனியாவில் மாரடைப்பால் 45 பேர் மரணம்

வவுனியா பொது வைத்தியசாலையில் இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான 10 மாத காலப்பகுதியில் மாரடைப்பால் 45 பேர் மரணம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரம்புக்வெல்லவின் வங்கிக் கணக்குகள் இடைநிறுத்தம்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் சுமார் 20 மில்லியன் ரூபாய் சேமிப்புடனான நடப்புக் கணக்கு மற்றும் நிலையான வைப்புக் கணக்கு, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பெப்ரவரி முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி

பெப்ரவரி முதலாம் திகதி முதல் தனிப்பட்ட பாவனைக்கான கார்களை இறக்குமதி செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர திசாநாயக்க பாராளுமன்றத்தில் இன்று (18) தெரிவித்தார். “இதனால் மீண்டும் டொலர் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்பதில் சந்தேகம் வேண்டாம், மத்திய வங்கியுடன் நீண்ட நாட்களாக விவாதித்து, வெளியேறும் டொலர்களை புரிந்து கொண்டு இதைச் செய்கிறோம். அதனால்தான் நாங்கள் உழைத்தோம். வாகனச் சந்தையை கடுமையான ஸ்திரத்தன்மையுடன் திறக்க வேண்டும்” என்று ஜனாதிபதி கூறினார்.

பால்மா, யோகட்களின் வற் வரி நீக்கப்படும்

கடந்த அரசாங்கத்தினால் பால்மா மற்றும் யோகட் உள்ளிட்ட பொருட்களுக்கும் வற் வரி அறவிடப்பட்டிருந்தது. எனினும் சிறுவர்களின் போசனை மட்டத்தை உயர்த்தும் நோக்கில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால்மா மற்றும் யோகட் என்பவற்றுக்கான வற் வரியை நீக்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடனான மூன்றாவது மதிப்பாய்வின் போது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

39 நாடுகளுக்கு இலவச விசா – இலங்கை

2025ஆம் ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில், 39 நாடுகளுக்கு இலவச விசா வழங்க உள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜிதா ஹேரத் தெரிவித்தார். இந்த நடவடிக்கையால் இந்தியா உட்பட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதை எளிதாக்கும் என குறிப்பிட்டார்.