(Shyamsundar )
மியான்மர் – வங்கதேச எல்லைப் பிரச்சனை தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் என்எஸ்ஏ அஜித் தோவல் ஆகியோரை தொடர்பு கொள்ள வங்கதேச நாட்டின் மூத்த ஆலோசகர் முகமது யூனுஸ் முயற்சித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
The Formula
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பொலன்னறுவை மாவட்ட எம்.பி ஜகத் விக்கிரமரத்ன புதிய சபாநாயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவரின் பெயரை பிரதமர் ஹரிணி முன்மொழிய சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க அதனை வழிமொழிந்தார்
ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் நுழையும் மனோ கணேசன் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பாராளுமன்ற உறுப்பினராக பிரதி சபாநாயகர் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (17) சத்திப்பிரமாணம் செய்துகொண்டார்.
தான் ஒரு விசேட வைத்திய நிபுணர் அல்ல என்றும் தனது உத்தியோகபூர்வ கடிதங்களிலும், விசிட்டிங் கார்டுகளிலும், மருந்துச் சீட்டுகளிலும் அவ்வாறான தலைப்பைப் பயன்படுத்தியதில்லை என்றும் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி இன்று தெளிவுபடுத்தினார். “தேர்தல் பிரசாரத்தின் போது என்னை விசேட வைத்தியர் என்று அழைக்கக்கூடாது என்று நான் திட்டவட்டமாக கூறியுள்ளேன்,” என்று அவர் பாராளுமன்றத்தில் கூறினார்.
பயனர்கள் தங்கள் செய்திகளை நிர்வகிக்கும் விதத்தை புரட்சிகரமாக்கும் புதிய அப்டேட்டை வாட்ஸ் அப் வெளியிட உள்ளது. இந்த அப்டேட்டில், பயனர்களுக்கு படிக்கப்படாத செய்திகளை நினைவூட்டும் புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது, இதனால் முக்கியமான எந்த உரையாடலும் தவறவிடப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.