போர் நிறுத்தத்திற்கான புதிய பரிந்துரையை வழங்கிய எகிப்து

போர் நிறுத்தத்திற்கான புதிய பரிந்துரையை எகிப்து வழங்கியுள்ளது. எகிப்து தனது பரிந்துரையில், “ஹமாஸ் உயிரோடுள்ள ஐந்து பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும். அதில் அமெரிக்க-இஸ்ரேல் பணயக் கைதியுடன் அடங்குவார். அதற்குப் பதிலாக இஸ்ரேல் காசா முனைக்கு மனிதாபிமான உதவிகளை சென்றடைய அனுமதிக்க வேண்டும். சில வாரங்கள் போர் நிறுத்தம் செய்ய வேண்டும். இஸ்ரேல் சிறையில் உள்ள நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்களை விடுதலை செய்ய வேண்டும்” குறிப்படப்பட்டுள்ளது. இந்த போர் நிறுத்த பரிந்துரையை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு ஏற்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Gold Card Visa: ஒரே நாளில் 1,000 அட்டைகள் விற்பனை

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்த கோல்ட் கார்ட் விசா திட்டத்தின் கீழ் ஒரேநாளில் ஆயிரம் கோல்ட் கார்ட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் கோல்ட் கார்ட் வாங்குவதற்காக பலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்கள் வரிசையில் நிற்கிறார்கள்.

பிறக்கும் போதே அடையாள எண்

தேசிய பிறப்புச் சான்றிதழ் செயல்முறை 15 ஆண்டுகளுக்கு முன்பு தகவல் தொழில்நுட்பம் (ICTTA)  நிறுவனம் மற்றும் பதிவாளர் நாயகத் துறை, நபர்கள் பதிவுத் துறை மற்றும் பிற அரசுத் துறைகள் இணைந்து தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு நாடு முழுவதும் இந்தத் திட்டத்தைத் தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது என அரச பரிபாலனம் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன அதரிவித்துள்ளார்.

குற்றங்களை தடுக்க 500 சிறப்பு அதிரடிப்படை

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளை ஒடுக்குவதற்காக புதிதாக சேர்க்கப்பட்ட 500 சிறப்பு அதிரடிப்படை (STF) பணியாளர்களை ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமைச்சர்களின் குடியிருப்புகள் தொடர்பான அறிக்கை வெளியானது

அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட குடியிருப்புகளை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்துவது குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதி செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

நியூசிலாந்தின் ரிவர்டன் கடற்கரைக்கு அருகிலுள்ள பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பூமியின் அடியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கனடாவுக்கு தப்ப முயன்ற 11 பேர் கைது

மோசடியான கனேடிய விசாகளைப் பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற 11 இலங்கையர்களும், அவர்களை விமான நிலையத்திற்கு அழைத்து வந்த ஒரு தரகரும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடிவரவுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகளுக்கு வாகனம்: முன்னாள் பிரதானிக்கு சிக்கல்

கிழக்கு பல்கலைக்கழகத்தில் தன்னுடைய மகளின் போக்குவரத்துக்காக, நீண்ட காலமாக, வாகனம் மற்றும் எரிபொருளை பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதானி ஒருவர் பயன்படுத்தியுள்ளது தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழில் சிறுமியை கட்டி வைத்து கொடூரம்

வடமராட்சி கிழக்கு, குடத்தனை பொற்பதியில் 14 வயது சிறுமி ஒருவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் தொடர்பாக, தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பருத்தித்துறை சட்ட வைத்திய அதிகாரி, மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

“வாகன வரிகளைக் குறைக்க முடியாது”

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஒப்பந்தத்தின்படி, வாகன வரிகளைக் குறைக்க முடியாது, மேலும் இந்த ஆண்டு வாகன இறக்குமதியில் வரி திருத்தங்கள் எதுவும் இருக்காது என்று ஜனாதிபதியின் மூத்த பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவா தெரிவித்தார்.