எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்குச் சென்றபோது, SJB பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேராவால் தாக்கப்பட்டதாக யாழ் மாவட்ட சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
Category: செய்திகள்
தமிழகத்தில் சிவப்பு எச்சரிக்கை
தமிழகத்தின் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு நேற்று கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னையில் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது. இதேவேளை, புதுச்சேரியில் ஃபெங்கல் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு டிரம்பின் எச்சரிக்கை
பிரதேச செயலகத்தில் மக்கள் குவிந்தனர்
அமைச்சர்களுக்கு இனி பங்களாக்கள் வழங்கப்படாது
சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள அழைப்பு
முகநூல் பதிவுக்காக இளைஞர் கைது
யாழ்ப்பாணம், இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை அவரது வீட்டில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அவரது முகநூல் பதிவொன்று தொடர்பான விசாரணைக்காகவே கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவரை யாழ்ப்பாணத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளைப் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்
லெபனானுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் இணக்கம்?
லெபனானுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
நாட்டின் பல பகுதிகளிலும் காற்றின் தரம் குறைந்தது
கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று காற்றின் தர சுட்டெண் 92 – 120 வரை உள்ளதாக என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. காற்றின் தர அறிக்கையின்படி, பல நகர்ப்புறங்களில் காற்று சற்று ஆரோக்கியமற்ற நிலைக்கு உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையினால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம் எனவும் அவ்வாறான சிரமங்கள் ஏற்பட்டால் வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது
பாராளுமன்ற குழுக்கள் பலவற்றை இரத்து செய்ய தீர்மானம்
கடந்த அரசாங்கத்தின் போது தன்னிச்சையாக நியமிக்கப்பட்டதாக கூறப்படும் பாராளுமன்றத்தின் பல குழுக்களை இரத்து செய்ய அல்லது மாற்றுவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. இந்த குழுக்களை நியமித்ததால் பெருமளவு பணம் விரயமாவதை அரசு கண்டறிந்ததை அடுத்தே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.