எரிபொருள் விலைகளில் திடீர் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இல்லங்களுக்காக 35 எம்.பிக்கள் விண்ணப்பம்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களுக்காக 35 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன என்று   பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

வரி செலுத்துனர்களுக்கு விசேட அறிவித்தல்

2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் இன்றுடன் (30) நிறைவடைவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. அறிக்கைகள் இணையவழி ஊடாக மட்டுமே பெறப்படும் என்றும், அதற்கான தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தலைமை அலுவலகம், பிராந்திய மற்றும் நகர அலுவலகங்கள் நாளை வழமையான வேலை நாளாக திறக்கப்படும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் ஜாவத்தை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை வங்கிக் கிளையும் வருமான வரி செலுத்துவதற்காக திறந்து வைக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

4 மாவட்டங்களுக்கு 16 பேரிடர் மீட்பு குழுக்கள் நியமனம்

நாடளாவிய ரீதியில் பெய்து வரும் கடும் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 4 மாவட்டங்களுக்கு 16 பேரிடர் மீட்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக, கடற்படை தெரிவித்துள்ளது. அம்பாறை, புத்தளம் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம், உதவி வழங்குவதற்காக இந்தக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இதேவேளை, வட பிராந்தியத்திலுள்ள பரீட்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள  உயர்தரப் பரீட்சைக்கான வினாத்தாள்களை மீண்டும் கொண்டு வருவதற்கு, பெல் 212 ரக ஹெலிகொப்டர் அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. 

’வடக்கில் காணிகளை விடுவிப்போம்’

வடக்கில் பாதுகாப்புப் படைகளின் வசமுள்ள காணிகள், தேசிய மக்கள் சக்தியின் இந்த ஆட்சிக் காலத்தில் விடுவிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பந் துயகொத்தாவ உறுதியளித்தார்.

நிந்தவூர் அரபு மத்ரஸாவின் அதிபர், ஆசிரியருக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட நிந்தவூர் அரபு மத்ரஸாவின் அதிபர் மற்றும் ஆசிரியர் ஆகியோரை டிசம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் ஏனைய 2 பேரை 1 இலட்சம் ரூபாய் பிணையில் செல்லுமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தல் வேட்புமனு தாக்கல்: அடுத்த வாரம் கலந்துரையாடல்

மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை தீர்மானிப்பதற்கான கலந்துரையாடல், அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாக, பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

இரத்தினபுரிக்கு பிரதீப் விஜயம்

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட இரத்தினபுரி மாவட்ட பெருந்தோட்ட பிரதேசங்களுக்கு, பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார். இதன்போது,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் ஏனைய வசதிகளை பெற்றுக்கொடுக்க சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சீரற்ற வானிலை: 38,616 பேர் தற்காலிக முகாம்களில் தஞ்சம்

கடும் மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாட்டின் 24 மாவட்டங்களிலும், தற்காலிக தடுப்பு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 38,616 ஆகும் என, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். அத்துடன்,  அனர்த்தங்கள் காரணமாக 102 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.  2,096 பகுதி வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளைக் கொடிகள் கட்டி துக்க தினம்

வெள்ள நீரில் அகப்பட்டு மரணமடைந்த மாணவர்கள் உட்பட ஏனையோரது மறுவாழ்விற்காக வெள்ளைக் கொடிகள் கட்டப்பட்டு துக்க தினம் அனுஷ்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.