கடும் மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக, விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
Category: செய்திகள்
அமைச்சர்களின் ஓய்வூதியமும் பறிபோகும்?
பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் ஓய்வூதியம் மற்றும் வரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதேவேளை, தற்போது அமைச்சுக்களுக்குச் சொந்தமான 150 சொகுசு வாகனங்களை விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாகன இறக்குமதி குறித்த புதிய அறிவிப்பு
வாகன இறக்குமதிக்கான அனுமதியின் முதல் கட்டத்தின் கீழ், பஸ்கள் மற்றும் லொறிகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்கப்படும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கான முதல் கட்ட திட்டத்திற்கு நிதி அமைச்சகம் இன்னும் சில நாட்களில் ஒப்புதல் அளிக்கும் என அதன் தலைவர் இந்தியா சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்தார். வாகன இறக்குமதியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத்தின் கீழ் கார்களின் இறக்குமதி அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் தொடங்கும் என்று அவர் மேலும் கூறினார்.
முன்னாள் எம்.பி சேகு இஸ்ஸதீன் காலமானார்
வெள்ளத்திலிருந்து தப்பிக்க வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை
அதானி விவகாரத்தால் பாராளுமன்றத்தில் அமளி: இரு அவைகளும் ஒத்திவைப்பு
கிழக்கு பல்கலைக்கழக விடுதிகள் மூடப்பட்டன
இரண்டு அஞ்சல் ரயில்களும் இரத்து
மலையக ரயில் தண்டவாளங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், புதன்கிழமை (27) இயக்கப்படவிருந்த கொழும்பு – கோட்டை – பதுளை மற்றும் பதுளை – கொழும்பு ஆகிய இரண்டு இரவு நேர அஞ்சல் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த இரண்டு அஞ்சல் ரயில்களும் நேற்றும் (26) ரத்து செய்யப்பட்டன.
6 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன
கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (26) இரவு பெய்த கடும் மழை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த 06 விமானங்கள் மத்தள மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘களத்துக்குச் செல்லுங்கள்”
தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் அடிப்படையாக கொண்டுச் செயற்படமால் அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ள பிரதேசங்களுக்குச் சென்று தகவல்களை பெற்றுக்கொண்டு, மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்தார்.