பர்மா என்ற பண்டைய பெயரையுடைய மியன்மாரில் நடைபெற்று வரும் கடும்போக்கு வாதிகளின் அச்சுறுத்தலால், தங்களது வாழ்விடங்களை இழந்து, உயிரை மாத்திரமேனும் காத்துக்கொள்ளும் வகையில் ஆபத்தான கடல் மார்க்கப் பயணத்தின் மூலம் இலங்கை வரும் ரோஹிங்ய மக்கள் தொடர்ச்சியாக திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
Category: செய்திகள்
மதுபானங்கள் மீதான வரி அதிகரிப்பு
பிரதமர் பதவியை துறந்தார் ட்ரூடோ
மரணத்தை கணிக்கும் ’’மரணக் கடிகாரம்’’
சுரங்கத்துக்குள் வெள்ளம்:15 தொழிலாளர்கள் சிக்குண்டுள்ளனர்
அசாமில் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் வெள்ளம் சூழ்ந்ததில், 15 தொழிலாளர்கள் சிக்கி கொண்டுள்ளனர். அசாமின் மலைப்பிரதேச மாவட்டங்களில் ஒன்றான திமா ஹசாவோவில் உள்ளடங்கிய பகுதியில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயற்பட்டு வருகிறது. இதில், வேலை செய்து வந்த தொழிலாளர்களில் 15 பேர் வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டனர்.
நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
நேபாள எல்லைக்கு அருகில் உள்ள திபெத்தில் இன்று (07) காலை 7.1 மெக்னிடியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அந்த நாட்டு நேரப்படி இன்று காலை 06.50 மணியளவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக காத்மாண்டுவில் உள்ள தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது. இந்த நில அதிர்வின் தாக்கம் பீகார் மற்றும் அசாம் உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.
04 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன
கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (07) தரையிறங்க வந்த 04 விமானங்கள், அடர்ந்த கடும் பனிமூட்டம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதையை சரியாக பார்க்க முடியாததால் மத்தள மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.