எம்.பி.க்களுக்கு இனி சொகுசு வாகனங்கள் இல்லை

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எரிபொருள் சிக்கன வாகனக்கள் வழங்கப்படும் என, பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பதவிக்காலம் முடியும் வரை அந்த வாகனத்தை பயன்படுத்தி மக்கள் சேவையை, உறுப்பினர்கள் மேற்கொள்ள முடியும் என, அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார். எம்.பி.க்களுக்கு சொகுசு வாகனங்கள் வழங்கப்படாது என்றும் கூறினார். மக்களின் வரிப்பணம் விரயமாவதை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் தெரிவித்தார்.

இருக்கை சண்டை ; அர்ச்சுனாவுக்கு எதிராக CID-யில் முறைப்பாடு

புதிய பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சிவில் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.

நெதன்யாகுவுக்கு எதிராக பிடியாணை பிறப்பித்த சர்வதேச நீதிமன்றம்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், நேற்று (21), பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரிசி நெருக்கடிக்கு தீர்வு முன்மொழிவு

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில், அரிசி விற்பனை நிலையம் ஒன்றை நிறுவுமாறு, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  அவ்வாறு செய்தால், நாட்டில் நிலவும் அரிசி நெருக்கடிக்கு குறுகிய கால மற்றும் நீண்டகால தீர்வு கிடைக்கும் என, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்  டி.எம்.எஸ்.பண்டார தெரிவித்தார்.

வருட இறுதிக்குள் மின் கட்டணத்தில் திருத்தம்?

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான அறிக்கையினை இலங்கை மின்சார சபை இன்றுவரை சமர்ப்பிக்காத நிலையில், மின்சார கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை இந்த வருடம் அறிவிக்க முடியாது என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. 

மன்னார் அவசர நிலை குறித்து வைத்தியசாலை நிர்வாகம் அறிக்கை

“துயரங்களுக்கு வன்முறைகள் பதிலாகாது” மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் திட்டமிட்டு தோற்றுவிக்கப்பட்ட அவசர நிலை குறித்து மன்னார் வைத்தியசாலை பணிப்பாளர் , வைத்திய நிபுணர்கள் , வைத்தியர்கள் , துணை மருத்துவ உத்தியோகத்தர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் குடும்ப நல உத்தியோகத்தர்கள் , சுகாதார ஊழியர்கள், நோயளர் காவு வண்டி சாரதிகள், தொழில்நுட்ப உதவியாளர்கள் இணைந்து இன்றைய தினம் (22) அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

’பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலை மூடப்படாது’

பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலை எக்காரணம் கொண்டும் மூடப்பட மாட்டாது என்று, சமகி ஜன பலவேகய பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். தற்போதைய ஆட்சியில், பாராளுமன்ற உணவகம் மூடப்படவுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் வினவிய போதே, அவர் இவ்வாறு கூறினார். பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலை  மூடப்பட மாட்டாது. ஆனால் அந்த வசதியை யாரும் துஷ்பிரயோகம் செய்யாமல் இருப்பதை அரசாங்கம் கவனித்துக்கொள்ளும் என்றாலும்,  ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 3 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இலங்கை பாராளுமன்றத்தை டிசம்பர் மாதம் 3ஆம் திகதி காலை 9:30 மணி வரை ஒத்திவைத்துள்ளார். இன்று முற்பகல் 10வது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வின் போது அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை ஜனாதிபதி வழங்கியதை தொடர்ந்து இந்த ஒத்திவைப்பு இடம்பெற்றது.

“சட்டத்துக்கு மேல் யாருமில்லை”

அக்கிராசனத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிகொண்டிருக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, சட்டத்துக்கு மேல் யாரும் இல்லை, நான், உட்பட அனைவரும் சட்டத்துக்கு ​கீழ்படிந்தவர்கள். அத்துடன், கடந்தகாலங்களில் இடம்பெற்ற  மிகவும் கொடூரமான சம்பவங்கள் தொடர்பில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, சட்டத்தின் முன், நிறுத்தப்படுவார்கள். அத்துடன், சட்டம் மீதான நம்பிக்கையை மக்கள் மத்தியில் கட்டியெழுப்புவோம்.  

இளங்குமரனின் கூற்று கோமாளித்தனமானது – பொதுஜன பெரமுன

யாழ் மாவட்டத்தில் இருந்து புதிதாக தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனின் சலுகை தொடர்பான கூற்று கோமாளித்தனமானது என, சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதான அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.