”பிளவுபடுத்தும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது” – அனுரகுமார

இலங்கையில் பிளவுபடுத்தும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.  புதிய அமைச்சரவையை நியமித்ததன் பின்னர் ஆற்றிய உரையில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

“இலங்கையின் அரசியல் கலாச்சாரம் நீண்ட காலமாக வடக்கை தெற்கிற்கு எதிராகவும் அதற்கு நேர்மாறாகவும் நிறுத்தும் முயற்சிகளால் வரையறுக்கப்படுகிறது. 

”அதிகார வரம்பறிந்து பொறுப்புணர்வுடன் செயற்படுங்கள்” – அனுரகுமார

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் அதிக அதிகாரங்கள் இருப்பதாகக் கூறிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, அனைத்து அமைச்சர்களும் தமது அதிகார வரம்புகளை அறிந்து பொறுப்புணர்வோடு செயற்படுவார்கள் என தான் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். புதிய அமைச்சரவையில் உரையாற்றிய அவர், பெரும்பாலான அமைச்சர்கள் அமைச்சரவைக்கு மட்டுமல்ல, பாராளுமன்றத்திற்கும் புதியவர்கள். அவர்கள் அனைவரும் நேர்மையானவர்கள், ஊழல் செய்யாதவர்கள் என்பதை தாம் நன்கு அறிவதாகவும், மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் தைரியம் அவர்களுக்கு இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதியின் முதல் வெளிநாட்டுப் பயணம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் டிசம்பர் மாத நடுப்பகுதியில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வார் என புதிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று ஊடகங்களுக்கு  தெரிவித்தார். புதிய அரசாங்கம் தேசத்தை பலப்படுத்தும் நோக்கில் இலங்கை நகர்கிறது என்பதை உலகிற்கு எடுத்துரைக்க உத்தேசித்துள்ளதாகவும், இலங்கை பிரஜைகளுக்கு நிலையான மற்றும் அழகான நாட்டை உறுதி செய்யும் எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.

சற்றுமுன் புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம்

திய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் சற்றுமுன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். முதலாவதாக கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதமராக  ஜனாதிபதி முன்னிலையில்  பதவியேற்றுக் கொண்டார்.

தீவிரமடையும் காற்று மாசு: 19 இலட்சம் பேர் பாதிப்பு

பாகிஸ்தானில் காற்று மாசு தீவிரமடைந்துள்ளதால்,   கடந்த மாதத்தில் மட்டும் 19 இலட்சம் பேர் மூச்சுப் பிரச்சினை காரணமாக அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

21இல் ஜனாதிபதியின் கொள்கை பிரகடனம் வெளியீடு

பெருந்தோட்டங்களிலும் வடக்கிலும், தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களை நியமித்ததன் மூலம் உலகிற்கு ஒரு செய்தி சொல்லப்பட்டுள்ளதாக, சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன், எதிர்வரும் 21ஆம் திகதி, ஜனாதிபதி தனது கொள்கைப் பிரகடனத்தை சமர்ப்பித்ததன் பின்னர் வெளிவிவகாரக் கொள்கை மற்றும் நாட்டின் நிதி நிலைமையை அதற்கேற்ப மாற்றி அமைக்க முடியும் என, மனித உரிமை செயற்பாட்டாளர் கலாநிதி பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.

23 பேர் கொண்ட அமைச்சரவையை ஜனாதிபதி நாளை பெயரிடுவார்; ஹரிணி PM

AKD பாதுகாப்பு மற்றும் நிதி இலாகாக்களை தக்க வைத்துக் கொள்ளும்; செவ்வாய்கிழமை முதல் அமைச்சரவை கூட்டம்
தமித் விக்கிரமசேகரவினால்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல்

1) பிமல் ரத்நாயக்க
ஜே.வி.பி.யின் அரசியல் குழு உறுப்பினர்
தேசிய மக்கள் அதிகாரத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

திங்களன்று புதிய அமைச்சரவை நியமனம்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை, எதிர்வரும் திங்கட்கிழமை (18) நியமிக்கப்படும் என, தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இதன்படி 25 பேருக்கும் குறைவான அமைச்சரவையொன்று நியமிக்கப்படும் என, தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனதா விமுக்தி பெரமுனவின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

அறிவுரை கூறும் யோக்கியதை அர்ச்சுனாவுக்கு இல்லை

ஒற்றையாட்சிக்கு எதிராகவே வட கிழக்கு தமிழ் மக்கள் வாக்கrpளித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு 80 ஆயிரம் வாக்குகள் மட்டும் தான் கிடைத்தது ஆனால் சமஷ்டியை வலியுறுத்தும் தமிழ் தரப்புகளுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வாக்குகள் கிடைத்துள்ளன. EPDP மற்றும் அங்கஜன் போன்ரோரின் வாக்குகளே NPPகு கிடைக்கப் பெற்றுள்ளது அவர்களை மக்கள் நிராகரித்துள்ளனர் என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.