அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கலந்துரையாடல்

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்துக்கும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி செயலகத்தின் சட்டப் பணிப்பாளர் சட்டத்தரணி ஜே.எம். விஜேபண்டார தெரிவித்துள்ளார்.

பாம்பன் பாலத்தில் போராட்டம்

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் ஒருங்கிணைந்து செவ்வாய்கிழமை (12) பாம்பன் பாலத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தற்போது வரை தமிழக மீனவர்களின் 66 படகுகளை சிறைப்பிடித்து, 497 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமந்திரனின் கூட்டத்தில் குழப்பம்

வட்டுக்கோட்டை – சுழிபுரம் பகுதியில், திங்கட்கிழமை (12)  நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரசார கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

குறிகாட்டுவான் – நெடுந்தீவுக்கு விசேட படகு சேவைகள்

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, யாழ்ப்பாணம் , குறிகாட்டுவான் – நெடுந்தீவுக்கு இடையிலான விசேட படகு சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. 

70 ஆண்டுகளில் நேர்ந்த கொடூரம்: மன்னிப்பு கோரிய பிரதமர்

சிறுவர்களுக்கான அரசு பராமரிப்பு இல்லங்கள், மனநல மருத்துவமனைகள் உள்ளிட்ட காப்பகங்களில் கடந்த 70 ஆண்டுகளாக சுமார் 2 லட்சம் பேருக்கு நிகழ்த்தப்பட்ட கொடூரங்களுக்காக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் பாராளுமன்றத்தில் பகிரங்கமான, வரலாற்றுபூர்வமான மன்னிப்பு கோரினார்.

21/4 தாக்குதல் ; பிள்ளையானுக்கு CID அழைப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். 

வாக்காளர் அட்டையின்றி இம்முறை வாக்களிக்கலாம்

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை இல்லாமல் கூட வாக்களிக்க முடியும் என, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார். ஆனால், வாக்களிக்கும்போது செல்லுபடியாகும் அடையாள அட்டையை முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார்

வாக்காளர்கள் இம்முறை கவனமாக இருக்க வேண்டும்

சில சிரேஷ்ட அரசியல்வாதிகள் தமது வருமான ஆதாரங்களை வெளியிட வேண்டியிருப்பதன் காரணமாக, இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.  எனவே, வாக்களிக்கும் வேட்பாளர்களை தெரிவு செய்யும் போது வாக்காளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என, ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகள் நிறுவகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்தார்.

மூவின தீபாவளி கொண்டாட்டம் நாளை

மூவினத்தவர்களும் பங்குபற்றும் தீபாவளி கொண்டாட்டம், மத்திய மாகாணத்தில், சனிக்கிழமை (09) நடைபெறும். தெல்தெனிய, இரஜவலை, மாபெரிதன்ன தமிழ் மகா வித்தியாலயத்திலேயே மூவின மாணவர்களின் பங்குபற்றுதலோடு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

மற்றுமொரு சொகுசு வாகனம் மீட்பு

நீர்கொழும்பு, தெமங்சந்தி பிரதேசத்தில் இலக்கத் தகடு இல்லாத சொகுசு வாகனம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த வாகனத்தின் உரிமையாளர் வெளிநாட்டில் உள்ள தனது சகோதரன் ஊடாக இந்த சொகுசு வாகனம் தனக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இந்த சொகுசு வாகனம் பிரபல வர்த்தகர் ஒருவரினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.