ஸ்ரீ.மு.கா. தேர்தல் அலுவலகத்தின் மீது தாக்குதல்

பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் அக்கட்சியின் தலைமை வேட்பாளரான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அலுவலகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

விருப்பு வாக்குக்காக கட்டணங்களை செலுத்தும் வேட்பாளர்

பாராளுமன்ற தேர்தலில் பிரதான கட்சியொன்றில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தனக்கான விருப்பு வாக்கை பெற்றுக்கொள்வதற்காக வாக்காளர்களின் குடிநீர், மின்சார கட்டணங்களுக்கான பணம் செலுத்துவதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக திருகோணமலை மாவட்ட காரியாலயத்தில் ஸ்தாபிக்கப்பட்ட தேர்தல் முறைப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

”வாக்குறுதிகளை 5 வாரங்களுக்குள் நிறைவேற்ற முடியாது”

அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் சிலர் குற்றம் சுமத்துவதாகக் கூறிய அமைச்சர் விஜித ஹேரத், தேசிய மக்கள் சக்தியின் விஞ்ஞாபனம் ஐந்து வாரங்களுக்குள் பூர்த்தி செய்யப்பட அன்றி ஐந்தாண்டுகளுக்குள் பூர்த்தி செய்யப்படுவதற்காகவே முன்வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

நாட்டின் சொத்துக் கையிருப்பு அதிகரிப்பு

இலங்கையின் உத்தியோகபூர்வ சொத்துக் கையிருப்பு இந்த ஆண்டு செப்டம்பரில் பதிவான 5.99 பில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 2024 ஒக்டோபரில் 6.46 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் (CBSL) படி, இது 7.9% கணிசமான அதிகரிப்பு ஆகும். இது 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமான சீன மக்கள் வங்கியின் (PBOC) மாற்று வசதியையும் உள்ளடக்கியதுடன், பயன்பாட்டிற்கான நிபந்தனைகளுக்கும் உட்பட்டதாகும். 

புதிய தூதுவர்கள் நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்

இலங்கைக்கு புதிதாக உத்தியோகபூர்வ நியமனம் பெற்ற இரு தூதுவர்கள் இன்று (07) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து தமது நன்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர்.

எகிப்து அரபுக் குடியரசின் தூதுவர் அதிமேதகு அடெல் இப்ராஹிம்(Adel Ibrahim) மற்றும் ஜப்பான் தூதுவர் அதிமேதகு இசோமாடா அகியோ (ISOMATA Akio) ஆகியோர் இலங்கைக்கான தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்த பின்னர் ஜனாதிபதியுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

பூஜித், ஹேமசிறிக்கு எதிரான விசாரணையைத் தொடர உத்தரவு

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் இருந்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை விடுவித்து உத்தரவிட்ட கொழும்பு மேல் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்துள்ளதுடன்  விசாரணையைத் தொடரவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் வாதத்தை முன்வைக்கவும் உயர் நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது.

துங்கிந்த விபத்து: சாரதி அனுமதிப்பத்திரம் போலியானது

பதுளை துங்கிந்த பகுதியில், விபத்துக்குள்ளான பேருந்தின் சாரதியின் சாரதி அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்ட நிலையில் போலி சாரதி அனுமதிப்பத்திரத்தை வைத்திருந்துள்ளார் என்பது பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பதுளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்தை தெரிவித்துள்ளார்.

இது அரசியல் பழிவாங்கும் செயல் – சுஜீவ

தனது இல்லத்தை சோதனையிட்டமை அரசியல் பழிவாங்கும் செயல் என குற்றஞ்சாட்டியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி (SJB) தேசிய அமைப்பாளர் சுஜீவ சேனசிங்க, வலான ஊழல் தடுப்புப் பிரிவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.  

லொஹானின் வாகனம் குறித்த புதிய தகவல்

சட்ட விரோதமாக இறக்குமதி செய்து உதிரிபாகங்களை இணைத்து பொருத்தப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான அதிசொகுசு கார், தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட அவருடைய தனிப்பட்ட செயலாளருடையது என ரத்வத்தே தம்பதிகள் கூறினாலும், அந்த வாகனம் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் உடையது  என்பது தெளிவாகிறது.

ஜனாதிபதி மீது முன்னாள் ஜனாதிபதி குற்றச்சாட்டு

அரசாங்க ஊழியர்களுக்கு வழங்குவதற்கு இணங்கிய சம்பள அதிகரிப்பு அல்லது மேலதிக சம்பள உயர்வை தமது அரசாங்கம் நிச்சயம் வழங்கும் என ஜனாதிபதி அனுரகுமார உடனடியாக நாட்டுக்கு அறிக்கை விட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.