ரம்புக்வெல்லவின் வங்கிக் கணக்குகள் இடைநிறுத்தம்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் சுமார் 20 மில்லியன் ரூபாய் சேமிப்புடனான நடப்புக் கணக்கு மற்றும் நிலையான வைப்புக் கணக்கு, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பெப்ரவரி முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி

பெப்ரவரி முதலாம் திகதி முதல் தனிப்பட்ட பாவனைக்கான கார்களை இறக்குமதி செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர திசாநாயக்க பாராளுமன்றத்தில் இன்று (18) தெரிவித்தார். “இதனால் மீண்டும் டொலர் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்பதில் சந்தேகம் வேண்டாம், மத்திய வங்கியுடன் நீண்ட நாட்களாக விவாதித்து, வெளியேறும் டொலர்களை புரிந்து கொண்டு இதைச் செய்கிறோம். அதனால்தான் நாங்கள் உழைத்தோம். வாகனச் சந்தையை கடுமையான ஸ்திரத்தன்மையுடன் திறக்க வேண்டும்” என்று ஜனாதிபதி கூறினார்.

பால்மா, யோகட்களின் வற் வரி நீக்கப்படும்

கடந்த அரசாங்கத்தினால் பால்மா மற்றும் யோகட் உள்ளிட்ட பொருட்களுக்கும் வற் வரி அறவிடப்பட்டிருந்தது. எனினும் சிறுவர்களின் போசனை மட்டத்தை உயர்த்தும் நோக்கில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால்மா மற்றும் யோகட் என்பவற்றுக்கான வற் வரியை நீக்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடனான மூன்றாவது மதிப்பாய்வின் போது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

39 நாடுகளுக்கு இலவச விசா – இலங்கை

2025ஆம் ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில், 39 நாடுகளுக்கு இலவச விசா வழங்க உள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜிதா ஹேரத் தெரிவித்தார். இந்த நடவடிக்கையால் இந்தியா உட்பட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதை எளிதாக்கும் என குறிப்பிட்டார்.

நாட்டுக்குள் நுழைந்த அரக்கன் ஆர்மி.. மோடியிடம் பேச.. மீண்டும் மீண்டும் போனை போட்ட வங்கதேச யூனுஸ்

(Shyamsundar )

மியான்மர் – வங்கதேச எல்லைப் பிரச்சனை தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் என்எஸ்ஏ அஜித் தோவல் ஆகியோரை தொடர்பு கொள்ள வங்கதேச நாட்டின் மூத்த ஆலோசகர் முகமது யூனுஸ் முயற்சித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

வாகன இறக்குமதி தொடர்பில் வர்த்தமானி வெளியீடு

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய சபாநாயகர் தெரிவு

பொலன்னறுவை மாவட்ட எம்.பி ஜகத் விக்கிரமரத்ன புதிய சபாநாயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவரின் பெயரை பிரதமர் ஹரிணி முன்மொழிய சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க அதனை வழிமொழிந்தார்

மனோ கணேசன் சத்தியப்பிரமாணம்

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் நுழையும் மனோ கணேசன் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பாராளுமன்ற உறுப்பினராக  பிரதி சபாநாயகர் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (17) சத்திப்பிரமாணம் செய்துகொண்டார்.

இராமேஸ்வரம்- தலைமன்னார் கப்பல் போக்குவரத்து விரைவில்…

மீனவர்களின் வாழ்வாதார பிரச்னையை மனிதாபிமான முறையில் அணுக இலங்கை ஜனாதிபதியுடன் விவாதிக்கப்பட்ட போது ஒப்புக்கொள்ளப்பட்டது. இராமேஸ்வரம்- தலைமன்னார் வரை கப்பல் போக்குவரத்து துவங்கப்படும்’ என பிரதமர் மோடி தெரிவித்தார்.

நான் விசேட வைத்திய நிபுணரல்ல;பிரதி சபாநாயகர்

தான் ஒரு விசேட வைத்திய நிபுணர் அல்ல என்றும் தனது உத்தியோகபூர்வ கடிதங்களிலும், விசிட்டிங் கார்டுகளிலும், மருந்துச் சீட்டுகளிலும் அவ்வாறான தலைப்பைப் பயன்படுத்தியதில்லை என்றும் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி இன்று தெளிவுபடுத்தினார். “தேர்தல் பிரசாரத்தின் போது என்னை விசேட வைத்தியர் என்று அழைக்கக்கூடாது என்று நான் திட்டவட்டமாக கூறியுள்ளேன்,” என்று அவர் பாராளுமன்றத்தில் கூறினார்.