34வது நினைவுதினம்……

தோழர் குமார் என எம்மால் அழைக்கப்பட்ட யாழப்பாணம் குருநகரை சேர்ந்த போல்டன் உதயகுமார் எம்மை விட்டுப்பிரிந்து 34 வருடங்கள் கடந்திருக்கிறது. இன்று அவர் தமிழ் மக்களின் விடிவிற்கான போராட்டத்தில் தன் உயிரை அர்ப்பணித்த தினமாகும்.
ஈபிஆர்எல்எவ் இன் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான தோழர் குமார் ஈபிஆர்எல்எவ் இன் இராணுவப்பிரிவான மக்கள் விடுதலைப் படையில் முக்கியத்துவம் மிக்க ஒருவராய் காத்திரமான பங்களிப்பை வழங்கியதுடன் ஈபிஆர்எல்எவ் இன் பிரச்சாரம் மற்றும் அரசியல் வேலைத்திட்டங்களிலும் மக்கள் நலன் சார்ந்த இதர பணிகளிலும் அதிகம் பங்கெடுத்துக்கொண்ட ஒருவராக விளங்கினார்.சிங்கள மொழியை சரளமாக பேசவும் எழுதவும் கூடியவராக விளங்கினார்.
சமூக அடிப்படையில், வர்க்க ரீதியில், இன ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களை போக்குவதற்காகவும், இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வுக்காகவும் அர்ப்பண உணர்வோடு உழைத்தவர். உள உரமும், வேகமாகச் செயற்படும் திறனும் கொண்ட தோழர் குமார் ஈபிஆர்எல்எவ் ஐ பலம் மிக்கதொரு ஸ்தாபனமாகக் கட்டியமைத்ததிலும், அதன் வளர்ச்சிக்கும் அளப்பரிய பங்காற்றியவர்.
1985 பங்குனி 18ம் திகதி யாழ் பிரதான வீதிக்கு சமீபமாக குருநகர் பிரதேசத்தில் இராணுவத்தினர் மறைந்திருந்து நடாத்திய தாக்குதலில் தோழர் குமார் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த அவரது மரியாதைக்குரிய அணித்தலைவரும், அன்புக்குரிய தோழனுமான தோழர் றொபேட் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்.
தோழர் குமார் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் குறுகிய காலமே பங்கெடுத்துக்கொண்ட போதும் நிறைவாகவும், நேர்த்தியாகவும், உறுதியோடும், கட்டுக்கோப்புடனும் பணிபுரிந்தார். ஈபிஆர்எல்எவ் இன் அத்தனை அரசியல் இராணுவ நடவடிக்கைகளிலும் பங்கெடுத்துக்கொண்டார்.
அவரது பங்களிப்புக்களுக்காக தோழர்களாலும், நண்பர்களாலும், அவரை அறிந்த அனைவராலும் அவர் என்றென்றும் நினைவு கூரப்படுவார். எம் மனதில் சிம்மாசனமிட்டிருக்கும் அவருக்கு எம் புரட்சிகர அஞ்சலிகள்.

வடக்கிலும் பெரும்பாலான சேவைகள் ஸ்தம்பிதம்

கிழக்கு மாகாணத்தில் அனுஸ்டிக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் முகமாக வடக்கிலும் பெரும்பாலான சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்தன. ஐ.நா இலங்கைக்கு கால அவகாசம் வழங்ககூடாது எனவும் சர்வதேச நீதி விசாரணையைக் கோரியும் கிழக்கு மாகாணத்தில் இன்று (19) இடம்பெற்ற ஹர்த்தாலுக்கு வடக்கு மாகாணத்திலும் ஆதரவு கோரப்பட்டிருந்தது. இந்நிலையில், வடக்கில் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் முகமாக அநேகமான சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன. சில இடங்களில் காலைவேளை வழமைபோன்று வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெற்ற போதும் நண்பகலுடன் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஓபிஎஸ்ஸை நம்பி வந்த ஒருவருக்கு கூட மீண்டும் சீட் இல்லை: நிராயுதபாணியாக நிற்கும் ‘தர்மயுத்த’ எம்.பி.க்கள்

அதிமுகவில் சசிகலா தலைமையை எதிர்த்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் ‘தர்மயுத்தம்’ நடத்திய அவரது ஆதரவு எம்.பி.க்கள் 10 பேரில் ஒருவருக்குக்கூட மீண்டும் ‘சீட்’ வழங்காதது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமுலுக்கு சூத்திரம் வருகிறது கவனம், அதன் பெயர் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் (CTA)

அமுலுக்கு சூத்திரம் வருகிறது கவனம், அதன் பெயர் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் (CTA) ஆகும். நீண்ட காலமாக நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை( PTA) நீக்கி ஐ.தே.கட்சி அரசினால் புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் (CTA) ஜனநாயத்துக்கும் சுதந்திரத்துக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று முற்போக்கு சக்திகள் குரலெழுப்புகின்றன.Résultat de recherche d’images pour “ranil unp”

முலாயம் சிங், மாயாவதி தொகுதிகள் உட்பட உ.பி.யில் 7 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியில்லை

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் கூட்டணி தலை வர்கள் போட்டியிடும் 7 தொகுதி களில் போட்டியிடப் போவ தில்லை என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.

5 மக்களவை தொகுதி திமுக வேட்பாளர்கள் விவரம்

டி.ஆர்.பாலு ஸ்ரீபெரும்புதூர்: திமுக முதன்மைச் செயலாளரான டி.ஆர்,பாலு (78), தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர். தென் சென்னை தொகுதியில் மூன்று முறை வென்ற அவர், 2009-ல் ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிட்டு வென்றார். 2014-ல் தஞ்சை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் மீண்டும் ஸ்ரீபெரும் புதூரில் போட்டியிடுகிறார்.

’புதிய அரசமைப்பு மக்கள் அரசமைப்பாக இருக்க வேண்டும்’

புதியதொரு அரசமைப்பை ​கொண்டு வந்தால் அது மக்களின் அரசமைப்பாக இருக்க வேண்டுமேயன்றி அதனூடாக மதம், இனங்களுக்கிடையிலான பிரிவினைவாதத்தை தூண்டும் அரசமைப்பாக அது இருக்க கூடாதென்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். நேற்று மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த 52 நாள்கள் அரசாங்கம் தொடர்பில் பலரும் குற்றஞ்சுமத்துகின்றனர். எனினும் அதனூடாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நிருபிக்கும் சந்தர்ப்பம் இல்லாமல் போனதாகத் தெரிவித்த அவர், அந்த குறுகிய காலத்திலும் மக்களுக்கான பல நிவாரணங்களை வழங்கியுள்ளதாகவும் மஹிந்த தெரிவித்துள்ளார்.

பதுளையில் நிலநடுக்கம்

பதுளை, பஸ்ஸர, ஹாலி-எல பிரதேசங்களில், பாரிய சப்தத்துடன், இன்று காலை 8.20 மணிக்கு நில அதிர்வொன்று ஏற்பட்டதாக, பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் உதய குமார தெரிவித்தார். அதிக சப்தத்துடன், 3 வினாடிகள் நேரம் இந்த நிலஅதிர்வு காணப்பட்டதாக, பிரதேசவாசிகள் குறிப்பிட்டனர்.