கெனடா, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, நியூசிலாந்து உள்ளிட்ட ஒன்பது நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைதரும் உல்லாசப் பயணிகளுக்காக, சுமார் 6 மாத காலப்பகுதிக்கு, வருகைதரு விசா அனுமதிகளை வழங்க, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
Category: செய்திகள்
வடக்கில் 248 பாடசாலைகள் மூடப்படும் அபாயம்
யாழ். மாவட்டத்தின் அதிகஷ்ட பிரதேசமான அரியாலை கிழக்கு மனித நேய வேலை திட்டத்துக்காக இராணுவத்தால் தத்தெடுப்பு
சர்ச்சைக்கு உரிய காரைதீவு பிரதேச சபையிலே மீண்டும் பரபரப்பு, பிரதி தவிசாளர் இல்லாத கூட்டத்தில் அவர் மீது ஒழுக்க நடவடிக்கை
அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான போட்டியில் அட்டப்பள்ளம் பிலோமினாவுக்கு தேசிய சாதனை விருது
விழாவுக்கு செல்ல முடியாத அளவுக்கு வீட்டில் வறுமை
நாடளாவிய ரீதியில் இந்து அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு இடையில் நடத்தப்பட்ட ஆக்க திறன் போட்டியில் கிழக்கு மாகாணத்தின் அதிகஷ்ட பிரதேசங்களில் ஒன்றான அட்டப்பள்ளத்தை சேர்ந்த சிறுமி ஜெ. பிலோமினா மகத்தான வெற்றி ஈட்டி தேசிய சாதனை புரிந்து உள்ளார்.
‘‘மன்னிக்க முடியாது’’ – வெனிசுலாவிடம் இருந்து ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்கினால் கடும் நடவடிக்கை: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
வெனிசுலாவிடம் இருந்து பண்டமாற்று முறையில் கச்சா எண்ணெய் வாங்கினால் கடும் நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என இந்தியாவுக்கு அமெரிக்கா மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் அமெரிக்காவில் எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளில் வெனிசுலாவும் ஒன்று. இங்கு கடந்த மே மாதம் நடந்த நடந்த தேர்தலிலும் நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அதிபரானார். தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் செய்து மதுரோ வென்றிருப்பதாகவும் சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்தன.
நெடுந்தீவில் 5 ஆண்டுகளாக வைத்தியர் இல்லை
நெடுந்தீவு வைத்தியசாலைகளில் கடந்த ஐந்தாண்டு காலமாக நிரந்தர வைத்தியர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வந்தார். யாழ்ப்பாணத்துக்கு இன்று (14) வியாழக்கிழமை விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் மீளாய்வு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போது நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த விடயத்தை பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வந்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
யாழ் போதனா வைத்தியசாலைக்கான விபத்து மற்றும் அதிதீவிர சிகிச்சைப்பிரிவு திறப்பு
யாழ் போதனா வைத்தியசாலைக்கான புதிய விபத்து மற்றும் அவசர அதி தீவிர சிகிச்சைப்பிரிவு இன்று (14) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ணவும் கலந்து கொண்டிருந்தார். குறித்த சிகிச்சை பிரிவானது 245 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு தொழில்நுட்ப வசதியிலான பிரிவுகளும் திறந்து வைக்கப்பட்டன.
சென்னையில் ஏற்பட்ட நில அதிர்வால் மக்கள் அச்சம்
வங்கக் கடலில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படாததால் வழக்கம்போல் மெரினா கடற்கரையில் கூடி மகிழ்ந்த பொதுமக்கள். சென்னையில் நேற்று காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர். நில அதிர்வால் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்று வானிலை மையம் விளக்கம் அளித்துள்ளது.