அனைத்து மாகாணங்களுக்குமான புதிய ஆளுநர்கள் இன்று வெள்ளிக்கிழமை (04) நியமிக்கப்படவுள்ள நிலையில், தென் மாகாண ஆளுநராகக் கடமையாற்றிய மார்ஷல் பெரேரா, வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவார் என்று, தகவல்கள் கசிந்துள்ளன. (“வடமாகாண ஆளுநராகிறார் மார்ஷல் பெரேரா?” தொடர்ந்து வாசிக்க…)
Category: செய்திகள்
விவசாயக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் மல்லப்பா தற்கொலை
ஆந்திரா.
அனந்த்பூர் மாவட்டம் .
கம்பதுரு மண்டல் பகுதி.
ராம்புரம் கிராமத்தைச் சார்ந்த
மல்லப்பா ஒரு விவசாயி.
பயிர் விளைச்சலில் இழப்பு ஏற்பட்டதால், விவசாயக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் மல்லப்பா தற்கொலை செய்து கொண்டார். (“விவசாயக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் மல்லப்பா தற்கொலை” தொடர்ந்து வாசிக்க…)
வட மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு உதவ முன்வருவோம்!!!
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட எமது பகுதி மக்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள்… எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு இடையில் முடியுமான அளவு பொருட்களை சேகரித்து வட மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரில் சென்று கையளிக்க சமூகத்தில் அக்கறையுள்ள இளைஞர்கள் ஊடாகவும், சமூக ஆர்வலர்கள் ஊடாகவும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் ஏற்பாடுகள் செய்து வருகின்றோம். ஆகவே தங்களால் முடிந்த உதவிகளை வெளிநாடுகளில் வசிக்கும் எமது நண்பர்கள், இப்பகுதி தனவந்தகர்கள், சமூக மட்ட அமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்கள், ஆலய பரிபாலன சபையினர்கள் கைகோர்த்து உங்களால் முடிந்த பணத்தினையோ, பொருட்களையோ தந்துதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.. நீங்கள் தரும் உதவித்தொகைக்கு கொள்வனவு செய்யப்படும் பற்றுச்சீட்டுக்கள் அடங்கிய கணக்கறிக்கைகள் உரியவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதுடன் எங்கள் சேவை ஒரு வெளிப்படை மிக்கதாகவும், எந்தவித உள்நோக்கமும் இன்றி பாதிக்கப்பட்டவர்களின் கரங்களுக்கு செல்லும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.. தொடர்புகளுக்கு – 0777389113 Please முடியுமானவரை செயார் செய்து ஏனைவர்களுக்கும் தெரியப்படுத்தவும்..
நான் பார்த்து வியந்த ஒரு மனிதன்
கிளிநொச்சிக்கு ஓர் அரசியல் வாதி வருவதாக இருந்தால் அவருடைய ஊடக செயலாளர் எம்மை தொடர்பு கொள்வார் இந்த திகதியில் இத்தனை மணிக்கு நாம் வருவோம் என்று இல்லை எனில் சக ஊடகவியாளர் ஒருவருக்காவது தகவல் வழங்கப்படும். இன்று எனக்கு ஓர் அழைப்பு வந்தது ஓர் அமைச்சர் கிணறுகளை சுத்தம் செய்கிறார் என்று நான் குறித்த இடத்துக்கு செல்லும் போது அங்கு அவர் இருக்கவில்லை அருகில் நின்றவர்களை விசாரித்தேன் ஓர் அமைச்சர் வந்து இந்த கிணற்றை துப்பரவு செய்தாரம் எங்கே போயிருக்கிறார் என்று அவர்கள் சொன்னார்கள் அமைச்சர் வந்ததாக தெரியவில்லை சிலர் வந்து நீரை இறைத்து துப்பரவு செய்தார்கள் என்று பின்னர் அத்தகவல் அறிந்து அவர் இருந்த இடத்துக்கு சென்றேன். (“நான் பார்த்து வியந்த ஒரு மனிதன்” தொடர்ந்து வாசிக்க…)
‘அமைச்சரவைத் தொடர்பில் ஐ.தே.க உறுப்பினர்களுக்கு ஏமாற்றம்’
புதிய அமைச்சரவைத் தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் ஏமாற்றமடைந்துள்ளனரென, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். (“‘அமைச்சரவைத் தொடர்பில் ஐ.தே.க உறுப்பினர்களுக்கு ஏமாற்றம்’” தொடர்ந்து வாசிக்க…)
உ/த பெறுபேற்றில், முதல் மூன்றிடம் … தமிழ் மாணவர்கள் யாரும் இல்லை
2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (29) வெளியாகின. அதற்கமைய தேசிய ரீதியாக முதல் மூன்றிடங்களை பிடித்த மாணவர்களின் விவரங்கள்.. (“உ/த பெறுபேற்றில், முதல் மூன்றிடம் … தமிழ் மாணவர்கள் யாரும் இல்லை” தொடர்ந்து வாசிக்க…)
ஷொங்சிங் விமான நிறுவனம் இலங்கைக்கான முதலாவது சேவையை ஆரம்பித்துள்ளது
சீனாவின் ஷொங்சிங் விமான சேவையைானது ஷொங்சிங் விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமானநிலையத்துக்கான நேரடி விமானசேவையை நேற்று முன்தினம் (28) ஆரம்பித்துள்ளது. சீனாவின் ஷொங்சிங் விமான நிலையத்திலிருந்து முதன் முதலாக பயணத்தை ஆரம்பித்த ஓ.கியு. 2393 என்ற விமானம் நேற்று முன்தினம் 9.10 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்த இந்த விமானத்தில் 152 பயணிகளும் 11 விமான பணியாளர்களும் பயணித்துள்ளனர். குறித்த விமானம் வாரத்தில் திங்கள், புதன், வௌ்ளி ஆகிய நாள்களில் இரவு 9.10 மணியளவில் கட்டுநாயக்கவை வந்தடையும் என்பதுடன், குறித்த தினமே இரவு 10.10 மணியளவில் இவ் விமானம் சீனாவை நோக்கி புறப்படவுள்ளது.
‘பெப்.4க்கு முன்னர் வரைவு வெளிவரும்’
அரசமைப்பு மீறப்படும் போது, பாதிக்கப்படுவது தமிழ் மக்கள் என்ற ரீதியில், அரசியலமைப்பு மீறப்படும் போது, தடுத்து நிறுத்துவதற்கான உரிமை தமிழ் மக்களுக்கே உரியதென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார். எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னதாக ஐக்கிய தேசிய கட்சியும், ஜே.வி.பி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்த ஒரு வரைவு வெளிவருமெனவும் அவர் குறிப்பிட்டார். (“‘பெப்.4க்கு முன்னர் வரைவு வெளிவரும்’” தொடர்ந்து வாசிக்க…)
தோழர் றொபேட் (சுபத்திரன்)
ஞாபகார்த்த நிலையத்தின் அங்குரார்ப்பண வைபவம் 24.12.2018 அன்று கண்டி வீதி, நுணாவில், சாவகச்சேரி என்னுமிடத்தில் நடைபெற்றது. தமிழர் சமூக ஐனநாயகக் கட்சியின் தலைவர் தோழர் சுகு ,மத்திய குழு உறுப்பினர் தோழர் சாந்தன் மற்றும் தோழர்கள் பங்குபற்றியிருந்தனர்.
தோழர் றொபேட்டின் 61 ஆவது பிறந்தநாள் நினைவாக
அமரர் தோழர் றொபேட் (தம்பிராசா சுபத்திரன்) அவர்களின் 61 ஆவது பிறந்த நாள் இன்றாகும் (24.12.2018) தமிழ் மக்களது அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஆயுதப் போராட்டதில் தனது 24 ஆவது வயதில் இணைந்து கொண்ட சுபத்திரன் 46 வயதில் இறக்கும் வரை அதே குறிக்கோளுடன் உழைத்தவர். 1998 இலிருந்து 2003 வரை யாழ் மாநகர சபை உறுப்பினராகவும் பதவி வகித்தவர்.