எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை, நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கமைய, எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று (18), சபையில் அறிவித்துள்ளார். (“எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த” தொடர்ந்து வாசிக்க…)

‘மஹிந்தவால் எதுவும் செய்ய முடியாது’

மஹிந்த ராஜபக்‌ஷவால் இதுவரை எதையும் செய்ய முடியாது என்பதை புரிந்துக்கொள்வதற்கு கிடைத்த நல்ல சந்தர்ப்பம் தான் கடந்த 50 நாள்கள் என ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பு- காலிமுகத்திடலில் இடம்பெற்று வரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணியில் கலந்துக்​கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார். (“‘மஹிந்தவால் எதுவும் செய்ய முடியாது’” தொடர்ந்து வாசிக்க…)

‘கூட்டமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் அரசாங்கம்’

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஓர் அரசாங்கத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டுப்படுத்தப் போகிறது என்று, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் எச்சரித்தார். கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனைகளுக்கு மஹிந்த ராஜபக்‌ஷ இணங்கவில்லை எனவும் அதனால் தான், கூட்டமைப்பினர் மஹிந்த ராஜப க்‌ஷவுக்கு எதிராக வாக்களித்தனர் எனவும் தெரிவித்தார். (“‘கூட்டமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் அரசாங்கம்’” தொடர்ந்து வாசிக்க…)

‘மீண்டும் ஐ.தே.கட்சியுடன் இணையமாட்டார்கள்’

மஹிந்த ராஜபக்‌ஷவுடன் இணைந்துக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் எவரும் மீண்டும் ஐ.தே.கவுடன் இணைந்துக்​கொள்ள மாட்டார்களென முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். இன்று மீகொட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தான் இவ்வாறு ​தெரிவிப்பதற்குக் காரணம் குறித்த உறுப்பினர்களை கௌரவிப்பதற்காக என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துக்கொள்ளவுள்ளதாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையுமில்லையெனவும், ஸ்ரீ.ல.சு கட்சியினர் அவ்வாறு செய்யமாட்டார்களென ஜனாதிபதி மற்றும் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் அறிவித்துள்ளதாக பஷில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

‘பதவியை விட்டு விலகினாலும் போராட்டத்தைக் கைவிடேன்’

பிரதமர் பதவியை விட்டு விலகினாலும் நாட்டுக்காக ஆரம்பித்துள்ளப் போராட்டத்தை கைவிடமாட்டேன் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் பதவியிலிருந்து விலகுவது தனக்கு கடினமான வேலையில்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார். இன்று பகல் தங்காலையில் உள்ள மஹிந்தவின் கால்டன் இல்லத்தில் இடம்பெற்ற நிக​ழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தான் பிரதமர் பதவியை குறுகிய காலத்திற்கே வகித்திருந்தாலும் குறித்த குறுகிய காலத்துக்குள் பல நிவாரணங்களை வழங்கியதாகவும் மஹிந்த தெரிவித்துள்ளார்.

பிரதமராக ரணில் பதவியேற்றார்

ரணில் விக்கிரமசிங்க புதியப் பிரதமராக இன்று பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில்,ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றுள்ளார். ரணில் விக்கிரமசிங்க 5ஆவது தடவையாக பிரதமாகப் பதவியேற்கின்றமைக் குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி மஹிந்தவுக்கு?

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பானது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சியாக செயற்படவுள்ளமைத் தொடர்பாக, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் அறிவிக்க எதிர்பார்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவ​ர்தன தெரிவித்துள்ளார்.

(“எதிர்க்கட்சித் தலைவர் பதவி மஹிந்தவுக்கு?” தொடர்ந்து வாசிக்க…)

’முறுகல் முடிந்தது: ஆட்சியில் கைக்கோர்ப்போம்’

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை புதுப்பித்து, மீண்டும் கைக்கோர்த்து, ஆட்சியைக் கொண்டுசெல்வோம் என, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். (“’முறுகல் முடிந்தது: ஆட்சியில் கைக்கோர்ப்போம்’” தொடர்ந்து வாசிக்க…)

’ஜனாதிபதிக்கு வழிவிட்டேன்’ – மஹிந்த ராஜபக்ஷ

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதியதோர் அரசாங்கத்தை உருவாக்கி, முன்னோக்கிச் செல்லவேண்டும் என்பதற்காகவே, பிரதமர் பதவியிலிந்து இராஜினிமா செய்ததாக, ​முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். விஜேராம மாவத்தையில் ​அமைந்துள்ள தனதில்லத்தில், இராஜினாமா கடிதத்தில் கைச்சாத்திட்ட பின்னரே, அவர் கண்டவாறு தெரிவித்திருந்தார். (“’ஜனாதிபதிக்கு வழிவிட்டேன்’ – மஹிந்த ராஜபக்ஷ” தொடர்ந்து வாசிக்க…)

புதிய அமைச்சரவையில் சு.க உறுப்பினர்கள்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில், முதற்கட்டமாக, ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியச் சேர்ந்த 6 உறுப்பினர்கள் இணைந்துகொள்ளவுள்ளனத் என, தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களுக்கான பதவிகளை வழங்குவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சி இணக்கம் தெரிவித்துள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆறு பேரும், தனிக் கட்சியாக அன்றி, தனி நபர்களாவே, இந்த அரசாங்கத்தோடு இணைந்துகொள்ளவுள்ளதாகவும் தெரியவருகின்றது. எனினும், புதிய அரசாங்கத்தோடு இணையவுள்ள 6 உறுப்பினர்கள் தொடர்பான விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.