ட்ரம்ப் மிரட்டலை புறக்கணித்தது இந்தியா: ரூபாய் மூலம் கச்சா எண்ணெய் வாங்க ஈரானுடன் புதிய ஒப்பந்தம்

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றபோதிலும், அதனை இந்தியா புறக்கணித்துள்ளது. இந்திய ரூபாயை செலுத்தி கச்சா எண்ணெய் வாங்குவதற்கு ஈரானுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் செய்துள்ளது.

(“ட்ரம்ப் மிரட்டலை புறக்கணித்தது இந்தியா: ரூபாய் மூலம் கச்சா எண்ணெய் வாங்க ஈரானுடன் புதிய ஒப்பந்தம்” தொடர்ந்து வாசிக்க…)

விதைகளுக்கு உயிர்கொடுத்தவர்: ‘நெல்’ ஜெயராமனுக்கு பிரபலங்கள் இரங்கல்

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் சென்னையில் வியாழன் அன்று காலை காலமானார். புற்றுநோய் பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று வந்த ஜெயராமன் தன் வாழ்நாள் முடியும் வரை விவசாயிகள் நலன் மீது அக்கறை கொண்டிருந்தார். அவருக்கு நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ட்விட்டரில் நெல் ஜெயராமன் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்த பிரபலங்கள் சிலரின் பதிவுகள் இதோ: (“விதைகளுக்கு உயிர்கொடுத்தவர்: ‘நெல்’ ஜெயராமனுக்கு பிரபலங்கள் இரங்கல்” தொடர்ந்து வாசிக்க…)

‘ஐ.தே.கவின் குற்றச்சாட்டை நிராகரிக்கின்றேன்’

வழக்குகளுக்கு பயந்​தே அரசாங்கத்தை பொறுப்பேற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் சுமத்தும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும், தனக்கு எதிராக சுமத்தப்படும் எந்தவொரு குற்றச்சாட்டையும் நீதிமன்றில் சந்திக்க தயாராகவிருப்பதாக மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். (“‘ஐ.தே.கவின் குற்றச்சாட்டை நிராகரிக்கின்றேன்’” தொடர்ந்து வாசிக்க…)

‘ஜனநாயகத்தை ஏற்படுத்த ரணிலுக்கு ஆற்றல் இல்லை’

நாட்டில் நிலவும் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நமது கட்சிக்குள் இல்லாத ஜனநாயகத்தை, நாட்டில் ஏற்படுத்துவதற்கான ஆற்றல் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இல்லை​யென்றார். (“‘ஜனநாயகத்தை ஏற்படுத்த ரணிலுக்கு ஆற்றல் இல்லை’” தொடர்ந்து வாசிக்க…)

மோதலே ஹெரோய்ன் கைப்பற்ற காரணம்’

போதை வர்த்தக குழுக்களிடையே ஏற்பட்டுள்ள மோதலே பேருவளை கடற்பரப்பில் 231.54 கிலோகிராம் ​ஹெரோய்னைக் கைப்பற்ற காரணமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள பொலிஸ் ​போதைபிரிவு ​அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். (“மோதலே ஹெரோய்ன் கைப்பற்ற காரணம்’” தொடர்ந்து வாசிக்க…)

கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கும் ஐ.ம.சு.கூ சமுகமளிக்கவில்லை

சபாநாயகர் தலைமையில் சற்றுமுன்னர் நிறைவடைந்த கட்சித்தலைவர்கள் கூட்டத்தில், ஒழுங்குப்பத்திரத்தில் ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட யோசனையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளாமல் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை கொண்டுவருவதற்கு, இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(“கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கும் ஐ.ம.சு.கூ சமுகமளிக்கவில்லை” தொடர்ந்து வாசிக்க…)

’பின்புலத்தில் சம்பந்தனும் மேற்குலக நாடுகளும்’

தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலைமைகளுக்குப் பின்னால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் மேற்குலக நாடுகளுமே இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று(04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இ​தேவேளை, இந்நெருக்கடி நிலைமையினை சாதகமாக்கிக்கொண்டு சமஷ்டி ஆட்சிமுறையைக் கொண்டுவருவதற்கு முயற்சிக்கிறார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

‘26ஆம் திகதி எடுக்கப்பட்ட தீர்மானம் சரியானது’

நாட்டுக்காக ஒக்டோபர் 26ஆம் திகதியன்று எடுக்கப்பட்ட தீர்மானம் சரியானதென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று (04) மாலை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்துரையாற்றுகையில், ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி அரசாங்கத்தின் நோக்கத்தையும், ஐக்கிய தேசிய கட்சியை​யும் நாசமாக்கியுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

காங்கிரஸுடன் நெருங்கும் ஆம் ஆத்மி: எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார் கேஜ்ரிவால்

டெல்லியில் 1998 முதல் 2013-ம் ஆண்டு வரை தொடர்ந்து மூன்று முறை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. இதற்கு, புதிய கட்சியாக உருவான ஆம் ஆத்மி கட்சி முடிவு கட்டியது டெல்லியில் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆட்சி அமைந்தது முதல், ஆம் ஆத்மி – காங்கிரஸ் இடையே மோதல் வலுத்து வந்தது. அதன் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை எதிர்த்து எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து வந்த காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மியை மட்டும் சேர்க்கவில்லை. (“காங்கிரஸுடன் நெருங்கும் ஆம் ஆத்மி: எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார் கேஜ்ரிவால்” தொடர்ந்து வாசிக்க…)