ஐ.தே.மு இறுதித் தீர்மானம்

நாட்டில் நிலவும் அரசியல் பிரச்சினை தொடர்பில், இன்று (03) இரவு, ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர், மீண்டும் இது விடயத்தில் ஜனாதிபதியைச் சந்திக்கப்போவதில்லையென, ஐக்கிய தேசியக் கட்சி அடங்கலான ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த, ஐ.தே.மு.வின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், இந்த வாரத்துக்குள் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென்றார். அவ்வாறாக, இந்த வாரத்துக்குள் இறுதித் தீர்மானமொன்று வழங்கப்படவில்லையாயின், மாற்று வழி தொடர்பில் சிந்திக்கவேண்டி ஏற்படுமெனவும், அவர் மேலும் கூறினார்.

வவுணதீவு சம்பவத்தைக் கண்டித்து அம்பாறையில் ஆர்ப்பாட்டங்கள்

மட்டக்களப்பு, வவுணதீவில் பொலிஸார் இருவர், சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்றில் ஆர்ப்பாட்டங்கள் இன்று (03) முன்னெடுக்கப்பட்டன. திருக்கோவில் ஆர்ப்பாட்டம், திருக்கோவில் பிரதேச சமாதானத்தை விரும்பும் மக்கள் வணிகம் எனும் அமைப்பாலும், அக்கரைப்பற்று ஆர்ப்பாட்டம், மக்கள் ஒருங்கிணைப்புக் குழுவாலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

(“வவுணதீவு சம்பவத்தைக் கண்டித்து அம்பாறையில் ஆர்ப்பாட்டங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

வவுணதீவு சம்பவம்; முன்னாள் போராளிகள் உட்பட 20 பேரிடம் விசாரணை

மட்டக்களப்பு, வவுணதீவு வலையிறவு பாலம் அருகில் பொலிஸார் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, வவுணதீவிலுள்ள முன்னாள் போராளிகளின் வீடுகளுக்குச் சென்ற படைப் புலனாய்வுப் பிரிவினர் தேடுதல்களை நடத்தியதுடன், விசாரிப்பிலும் ஈடுபட்டனர். மட்டக்களப்பு வவுணதீவு வாவியிலும் கடற்படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

(“வவுணதீவு சம்பவம்; முன்னாள் போராளிகள் உட்பட 20 பேரிடம் விசாரணை” தொடர்ந்து வாசிக்க…)

நடிகர் மோகன்லால் மீது பிரகாஷ் ராஜ் பாய்ச்சல்

மீடூ இயக்கம் தொடர்பான மோகன்லாலின் கருத்துக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்திய திரையுலகில் மீடூ இயக்கம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்து வருகிறது. தமிழ், கன்னடம் மற்றும் இந்தி திரையுலகில் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மீது பெண்கள் பாலியல் புகார் தெரிவித்து வருகிறார்கள். (“நடிகர் மோகன்லால் மீது பிரகாஷ் ராஜ் பாய்ச்சல்” தொடர்ந்து வாசிக்க…)

இந்திய அணியைக் கிண்டல் செய்து ஆஸி. நாளேடு செய்தி

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணியையும், கேப்டன் விராட் கோலியையும் கிண்டல் செய்து ஆஸி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு அந்நாட்டு மக்களே கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு விளையாடச் செல்லும் வெளிநாட்டு அணிகளை தரக்குறைவாக கிண்டல் செய்வதும், செய்தி வெளியிடுவதையும் அங்குள்ள ஊடகங்கள் சில வாடிக்கையாக வைத்துள்ளன. தென் ஆப்பிரிக்க, இந்திய, நியூசிலாந்து, பாகிஸ்தான், இங்கிலாந்து போன்ற வலிமையான அணிகள் அங்கு விளையாடும் போது கிண்டல் செய்திகள் தொடர்ந்து வந்தது.

(“இந்திய அணியைக் கிண்டல் செய்து ஆஸி. நாளேடு செய்தி” தொடர்ந்து வாசிக்க…)

’பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கப்படலாம்’

பிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ்த்​ தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கிய வாக்குறுதியின்படி, எதிர்வரும் புதன் கிழமை நாடாளுமன்றில் புதிய பிரதமரை நியமிக்கக்கோரும் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட உள்ளது. (“’பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கப்படலாம்’” தொடர்ந்து வாசிக்க…)

முன்னாள் வடக்கு முதலமைச்சரை எப்போதோ நிராகரித்து விட்டேன் அவருடன் கூட்டுச் சேரும் நோக்கம் எப்போதும் இல்லை

முன்னாள் வடமாகாண முதலமைச்சரை நான் எப்போதோ நிராகரித்து விட்டேன். அவருடன் கூட்டுச் சேரும் நோக்கம் எப்போதும் இல்லை என மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, இந்து சமய காலாச்சாரம் மற்றும் வடக்கின் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்ற முன்னாள் முதலமைச்சர், ஈபிடிபியை இணைத்துக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளாரே என ஊடகவியலாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கேள்வி எழுப்பிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(“முன்னாள் வடக்கு முதலமைச்சரை எப்போதோ நிராகரித்து விட்டேன் அவருடன் கூட்டுச் சேரும் நோக்கம் எப்போதும் இல்லை” தொடர்ந்து வாசிக்க…)

இந்திய வாகன இறக்குமதியாளர்கள் பாதிப்பு

வாகன இறக்குமதியை கட்டுப்படுத்தி, அதனூடாக இலங்கை ரூபாயின் பெறுமதியை மேலும் வீழ்ச்சியடையாமல் பேணுவது தொடர்பாக, இலங்கை அரசாங்கம் மேற்கொண்டிருந்த நடவடிக்கைகளால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக, இந்திய வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

(“இந்திய வாகன இறக்குமதியாளர்கள் பாதிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

ஐ.ஜி.பி தலைமையிலான குழு வவுணதீவுக்கு விரைந்தது

பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி) பூஜித ஜயசுந்தர தலைமையிலான குழுவொன்று மட்டக்களப்பு வவுணதீவுக்கு விரைந்துள்ளது என பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றப்புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஆகியோரே, அந்த குழுவில் அங்கம் வகித்துள்ளனர். (“ஐ.ஜி.பி தலைமையிலான குழு வவுணதீவுக்கு விரைந்தது” தொடர்ந்து வாசிக்க…)

ஐ.தே.கவின் அரசியலில் ’சுமந்திரனின் ஆதிக்கம் இல்லை’

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் பணிகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் ஆதிக்கம் காணப்படுகிறது என்ற கருத்தில், எதுவித உண்மையுமில்லையெனத் தெரிவித்த ஐ.தே.கவின் சிரேஷ்ட எம்.பியான லக்‌ஷ்மன் கிரியெல்ல, அவ்வாறான கருத்துகள், முழுப்பொய்கள் எனவும் தெரிவித்தார்.

(“ஐ.தே.கவின் அரசியலில் ’சுமந்திரனின் ஆதிக்கம் இல்லை’” தொடர்ந்து வாசிக்க…)