மஹிந்த – ரணிலுக்கு பிரதமருக்கான வரப்பிரசாதங்கள் கிடையாது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவால் கொண்டுவரப்பட்டுள்ள இடைக்காலக் கணக்கறிக்கைக்கு எதிராக, ஐக்கிய தேசிய முன்னணியினால் கொண்டுவரப்பட்டுள்ள யோசனை குறித்து சபையில் உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவல் அநுரகுமார திசாநாயக்க, இந்த யோசனையை நிறைவேற்றிக்கொண்ட பின்னர், அலரி மாளிகையிலிருந்து, ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் வெளியேற வேண்டுமென்றார். காரணம், அங்கு அவர்கள் செய்யும் செலவுகளையும், பொதுமக்களின் வரிப் பணத்தைக் கொண்டே செலுத்த வேண்டியுள்ளதாகக் கூறிய அவர், மஹிந்த ராஜபக்ஷவுக்கோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவுக்கோ, பிரதமருக்கான வரப்பிரசாதங்கள் கிடையாதெனவும் கூறினார்.

அகதிகள் மெக்ஸிக்கோவில் காத்திருப்பர் என்கிறார் ட்ரம்ப்

ஐக்கிய அமெரிக்க, மெக்ஸிக்கோ எல்லையிலுள்ள அகதிகள், அவர்களின் அகதிக் கோரிக்கைகள் தனித்தனியாக ஐக்கிய அமெரிக்க நீதிமன்றங்களில் அனுமதிக்கப்படும் வரை அவர்கள் மெக்ஸிக்கோவிலேயே இருப்பர் என ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று டுவீட் செய்துள்ள நிலையில், தாங்கள் எந்தவொரு இணக்கத்துக்கும் வரவில்லையென மெக்ஸிக்கோவில் புதிதாகப் பதவியேற்கவுள்ள அரசாங்கம் தெரிவித்துள்ளது.

(“அகதிகள் மெக்ஸிக்கோவில் காத்திருப்பர் என்கிறார் ட்ரம்ப்” தொடர்ந்து வாசிக்க…)

’ஐ. அமெரிக்க ஆதரவு படைவீரர்கள் 47 பேர் கொல்லப்பட்டனர்’

கிழக்கு சிரியாவிலுள்ள தமது இறுதி இடமான டெய்ர் எஸோரிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு இரண்டு நாட்களாக நடத்திய தாக்குதல்களில் ஐக்கிய அமெரிக்க ஆதரவு குர்திஷ் தலைமையிலான கூட்டணியான சிரிய ஜனநாயகப் படைகளின் படைவீரர்கள் 47 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் நேற்றுத் தெரிவித்துள்ளது. ஈராக்கிய எல்லையிலுள்ள கிழக்கு மாகாணமான டெய் எஸ்ஸோரிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவை வெளியேற்றுவதற்காக சிரிய ஜனநாயகப் படைகள் போரிடுகின்றன.

(“’ஐ. அமெரிக்க ஆதரவு படைவீரர்கள் 47 பேர் கொல்லப்பட்டனர்’” தொடர்ந்து வாசிக்க…)

கஜா புயல் பாதிப்பு: கேரள அரசு ரூ.10 கோடி நிதி, 14 லாரிகளில் நிவாரணப் பொருட்கள்: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டப் பகுதி மக்களுக்கு உதவும் வகையில் 14 நிவாரணப் பொருட்களும், ரூ.10 கோடி நிதியும் கேரள அரசு சார்பில் வழங்கப்படுவதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

(“கஜா புயல் பாதிப்பு: கேரள அரசு ரூ.10 கோடி நிதி, 14 லாரிகளில் நிவாரணப் பொருட்கள்: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

அந்தமான் தீவில் உயிரிழந்த அமெரிக்க இளைஞரின் டைரிக் குறிப்புகள்

அந்தமான் தீவில் பழங்குடியினரால் கொல்லப்பட்ட அமெரிக்க இளைஞரைப் பற்றி அவரது நண்பர் பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார். யூனியன் பிரதேசமான அந்தமான் நிக்கோபர் தீவுகள் பகுதியில் வடக்கு சென்டினல் தீவு உள்ளது. அங்கு பழங்குடியின மக்கள் சுமார் 60 ஆயிரம் ஆண்டுகளாக வெளியுலகத் தொடர்பு இல்லாமல் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. அவர்கள் தங்கள் பகுதிக்குள் வெளியாட்கள் யாரையும் அனுமதிப்பதில்லை என நம்பப்படுகிறது. இதையும் மீறி அங்கு சென்ற சிலரை அவர்கள் கொன்றுவிட்டதுடன் அவர்களுடைய உடலை மீட்கவும் அனுமதித்ததில்லை. (“அந்தமான் தீவில் உயிரிழந்த அமெரிக்க இளைஞரின் டைரிக் குறிப்புகள்” தொடர்ந்து வாசிக்க…)

சட்டப்பேரவைத் தேர்தல்: ம.பி.யில் 65.5% – மிசோரமில் 73% வாக்குப்பதிவு

இன்று நடந்த தேர்தலில் மத்தியப்பிரதேத்தில் 65.5 சதவீதமும், மிசோரமில் 73 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருப்பதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் சத்தீஸ்கரில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதைத்தொடர்ந்து மத்திய பிரதேசம் மற்றும் மிசோரமில் இன்று தேர்தல் நடைபெற்றது.

(“சட்டப்பேரவைத் தேர்தல்: ம.பி.யில் 65.5% – மிசோரமில் 73% வாக்குப்பதிவு” தொடர்ந்து வாசிக்க…)

நாடாளுமன்றம் கலைப்பு விவகாரம்: 7 பேரடங்கிய நீதியரசர்கள் குழாம் நியமனம்

நாடாளுமன்றத்தை கலைத்து, ஜனாதிபதியினால் வெ ளியிடப்பட்ட அதி​விஷேட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை, விசாரணை செய்வதற்கு ஏழு நீதியரசர்கள் குழாமை பிரதம நீதியரசர் நியமித்துள்ளார். இந்த வழக்கு, எதிர்வரும் 3 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

பிரெக்சிற் ஒப்பந்தத்தை அனுமதித்தனர் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள்

வரலாற்று ரீதியிலான ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகும் (பிரெக்சிற்) ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் இலங்கை நேரப்படி நேற்று மாலை அனுமதித்தனர். பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே இல்லாமல் பெல்ஜியத்தின் பிரஸல்ஸில் சந்தித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 தலைவர்களும் ஏறத்தாழ 30 நிமிடத்திலேயே பிரெக்சிற் ஒப்பந்தத்துக்கு இணங்கியிருந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அடுத்தாண்டு மார்ச் 29ஆம் திகதியிலிருந்து பிரித்தானியா விலகவுள்ளது.

(“பிரெக்சிற் ஒப்பந்தத்தை அனுமதித்தனர் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள்” தொடர்ந்து வாசிக்க…)

தலைமன்னார் – இராமேஸ்வரத்துக்கு இடையில் கப்பல் சேவை

தலைமன்னாருக்கும், இராமேஸ்வரத்துக்கும் இடையிலான கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ள மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு, சபரி மலை யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

(“தலைமன்னார் – இராமேஸ்வரத்துக்கு இடையில் கப்பல் சேவை” தொடர்ந்து வாசிக்க…)

’மஹிந்தவின் நியமனத்தை ஐ.தே.க ஏற்றது’