பாகிஸ்தான் தொடர்பாக ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த கருத்துகளைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இதன்மூலம், ஒரு காலத்தில் மிக நெருங்கிய தோழமை நாடுகளாக இருந்த இவ்விரு நாடுகளும், தமக்கிடையிலான முரண்பாடுகள் மூலம், அதிக இடைவெளியே ஏற்படுத்திய வண்ணமுள்ளன.
Category: செய்திகள்
தமது தரப்பினரைக் கடுமையாக எச்சரித்தார் மஹிந்த
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களை கடுமையாக எச்சரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் குறித்த உறுப்பினர்கள் நடந்துக்கொள்ளும் விதம் குறித்தே மஹிந்த எச்சரித்துள்ளார்.
(“தமது தரப்பினரைக் கடுமையாக எச்சரித்தார் மஹிந்த” தொடர்ந்து வாசிக்க…)
சி.வியின் கோரிக்கை நிராகரிப்பு
யாழ்ப்பாணக் குடாநாட்டில், கனேடியத் துணை உயர்ஸ்தானிகராலயம் ஒன்றை ஆரம்பிக்குமாறு, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நீண்டகாலமாக விடுத்துவந்த கோரிக்கையை, கனேடிய உயர்ஸ்தானிகராலயம் நிராகரித்துள்ளது.
நாடாளுமன்றம் மீண்டும் ஒத்திவைப்பு
நான்காவது நாளாக இன்று 1 மணிக்கு கூடிய நாடாளுமன்றம் எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி அறிவித்தார். கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானித்தமைக்கு அமையவே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக பிரதி சபாநாயகர் அறிவித்தார்.
தோழர் நாபாவின் மெருகூட்டப்பட்ட சிலை திறப்பு விழா
திருகோணமலை 19/11/2018 அன்று தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி நடத்திய தோழமை தினத்தில் கடல்முக வீதி மாவட்ட காரியாலயத்தில் தோழர் பத்மநாபா அவர்களின் உருவச்சிலை திறக்கப்பட்டு மாலை அணிவித்ததுடன் குளக்கோட்டன் மண்டபத்தில் தோழமை தின நிகழ்வு நடத்தப்பட்டு மக்களுக்கு கண் பரிசோதனை செய்து இலவச மூக்குக்கணடியும் வழங்கப்பட்டது. இவ் நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
மைத்திரி-ரணில் முதன்முறையாக உரையாடல்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், நேற்றுக்காலை முக்கிய உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இருவரும் தொலைபேசியில், சில நிமிடங்கள் உரையாடியுள்ளனர் என, இருதரப்பு வட்டாரத் தகவல்களும் தெரிவித்தன. ஒக்டோபர் 26ஆம் திகதிக்குப் பின்னர் இருவரும் முதல்தடவையாக நேற்று (18) பேசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பதவியிலிருந்து நீக்கப்பட்டு, மஹிந்த ராஜபக்ஷ, பிரதமராக ஒக்டோபர் 26ஆம் திகதியன்று நியமிக்கப்பட்டார். அதனையடுத்து, இலங்கை அரசியலில் ஒரு ஸ்திரமற்ற நிலைமை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
‘இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு அவசியம்’
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகவும் அரசாங்கத்துக்கு எதிராகவும் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து தான் தீர்மானிக்க வேண்டுமெனில் குறித்த வாக்கெடுப்பானது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை அழைத்தோ அல்லது இலத்திரனியல் முறையிலோ முன்னெடுக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
(“‘இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு அவசியம்’” தொடர்ந்து வாசிக்க…)
புளொட் பிரதிநிதிகளை பேரவையினர் வெளியேற்றியுள்ளனர்
தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்துக்குச் சென்ற புளொட் அமைப்பின் பிரதிநிதிகளை, பேரவையினர் வெளியேற்றியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம், பலாலி வீதியிலுள்ள தமிழ் மக்கள் பேரவையின் அலுவலகத்தில் பேரவையின் கூட்டம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்துக்கு பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கும் பொது அமைப்புகளின் பிரதிதிநிதிகள் பேரவை உறுப்பினர்கள் எனப் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
(“புளொட் பிரதிநிதிகளை பேரவையினர் வெளியேற்றியுள்ளனர்” தொடர்ந்து வாசிக்க…)
மரண அறிவித்தல்
‘கூட்டமைப்போடு இணைய வேண்டுமென்ற அவசியமில்லை’
மக்களாலேயே தான் நாடாளுமன்ற உறுப்பினராகவும் மக்கள் கேட்டுக்கொண்டதாலேயே தான் இன்று பிரதிஅமைச்சு பதவியை பெற்றுக்கொண்டதாகவும் கிழக்கு அபிவிருத்திப் பிரதியமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் வியாழேந்திரன் மீண்டும் இணைய முற்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து, இன்று (17) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
(“‘கூட்டமைப்போடு இணைய வேண்டுமென்ற அவசியமில்லை’” தொடர்ந்து வாசிக்க…)