விலைபோன வியாழேந்திரன் விலக்கப்படுவார்

புதிய அரசாங்கத்துக்கு ஆதரவளித்துள்ள வியாழேந்திரன் எம்.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலக்கப்பட்டவுடன் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்த இரா.சம்பந்தன், மேலும் கூறுகையில்,

(“விலைபோன வியாழேந்திரன் விலக்கப்படுவார்” தொடர்ந்து வாசிக்க…)

சபாநாயகர் ஆசனம் சுற்றிவளைப்பு; சபையில் பெரும் குழப்பம்

சபாநாயகர் ஆசனத்தை ஆளுங்கட்சியினர் சுற்றி வளைத்ததால் சபையில் குழப்ப நிலை தோன்றியுள்ளது. பிரதமர் மஹிந்த அவர் தலைமையிலான அமைச்சரவைக்கும் எதிராக வாக்கெடுப்பை நடத்துமாறு, லக்ஸ்மன் கிரியெல்ல கோரியதையடுத்து, ச​பையில் அமைதியின்மை ஏற்பட்டது. இதனையடுத்து, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் ஆசனத்துக்கு அருகில் சென்றதும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சபாநாயகருக்கு பாதுகாப்பை வழங்குவதற்காக சபாநாயகரை சுற்றி வளைத்தனர்.

மஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை பாராளுமன்றத்தில் முக்கிய உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். வவுனியாவில் கஜா சூறாவளியால் அனர்த்தம் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் முப்படையினர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும் அந்த மக்களை மீண்டும் பொருளாதார ரீதியாக பாதிப்படைய வைக்க முடியாது என மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர் கே.காதர் மஸ்தான் தெரிவித்தார்.

நாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் – ரணில்

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் நெருக்கடிகள் ஏற்படும் நேரங்களில் நாம் ஆதரவை தெரிவிக்கின்றோம், ஆனால் அதற்கான பலனாக தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை அமைத்தவுடன் தமிழர் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு பெற்றுத்தரப்படுவது உறுதியென ரணில் – சம்பந்தனுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார்.

(“நாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் – ரணில்” தொடர்ந்து வாசிக்க…)

நாளை காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடும்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற அமர்வு, நாளை (14) காலை 10 மணிக்கு கூடவுள்ளதாக, சபாநாயகர் கருஜயசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடர், ஜனாதிபதி மைத்திரிபால சிறி​சேனவால், அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக, நாளை (14) ஆம் திகதி வரையிலும், கடந்த 27ஆம் திகதியன்று ஒத்திவைக்கப்பட்டது. எனினும் அவர், கடந்த வெள்ளிக்கிழமை (9) நாடாளுமன்றத் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்.

(“நாளை காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடும்” தொடர்ந்து வாசிக்க…)

ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவு

‘யாழில் வீதிச் சுற்றுக்காவல் நடவடிக்கை இனி அதிகரிக்கப்படும்’

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சகல குற்றச்செயல்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துவருவதாக, யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வருண ஜெயசுந்தர தெரிவித்தார். அதன் ஓர் அங்கமாக, தற்போது முன்னெடுக்கப்படும் வீதிச் சுற்றுக்காவல் நடவடிக்கைகளை, இனிவரும் நாள்களில் அதிகரிக்கப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். (“‘யாழில் வீதிச் சுற்றுக்காவல் நடவடிக்கை இனி அதிகரிக்கப்படும்’” தொடர்ந்து வாசிக்க…)

‘தமிழ்க் கட்சிகளை இணைக்க முயற்சிப்பேன்’

தென்னிலங்கை கட்சிகள், அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளும் போட்டியில் குதித்துள்ளன என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்படுவதற்கு முன்னர், சகல தமிழ்க் கட்சிகளையும் ஓரணியின் கீழ் கொண்டுவருவதற்கு முயற்சிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். “தெற்கு அரசாங்கம் இந்நாட்டிலிருக்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, தங்களுடைய அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளல், அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்ளல் எவ்வாறு என்பது தொடர்பிலான சிந்தனையிலேயே இருக்கின்றன. அது ஒக்டோபர் 26ஆம் திகதி முதல், இதுவரையிலான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட நகர்வுகளை வைத்து பார்க்கும் போது, தெட்டத்தெளிவாகின்றது” என்றார். (“‘தமிழ்க் கட்சிகளை இணைக்க முயற்சிப்பேன்’” தொடர்ந்து வாசிக்க…)

‘ பொதுத் தேர்தலை எவராலும் தடுக்க முடியாது’

விசேட வர்த்தமானி அறிவித்தலின்படி பொதுத்தேர்தல் நடைபெறும். இதனை எவராலும் தடுக்க முடியாது. தேர்தல் என்பது மக்களுக்குள்ள உரிமையாகும். இதனை நீதிமன்றத்தால் கூட சவாலுக்குட்படுத்த முடியாது எனத் தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலுக்குச் செல்லத் தாம் எடுத்திருந்த தீர்மானம் குறித்து விரைவில் சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளைச் சந்தித்து விளக்கமளிக்கப்போவதாகவும் தெரிவித்தார்.

(“‘ பொதுத் தேர்தலை எவராலும் தடுக்க முடியாது’” தொடர்ந்து வாசிக்க…)