பத்திரிகைகளுக்காக வெளியிடப்படும் அறிக்கை – 29-10-2018
மலையகத் தொழிலாளர்களின் கூலி உயர்வுக்கான போராட்டத்துக்கு
எமது பூரண ஆதரவைத் தெரிவிக்கிறோம்
மலையக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஆயிரம் ரூபா நாளாந்தக் கூலி கேட்டுப் போராடி வருகிறார்கள். மலையகத்தில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். மேலும், கொழும்பு காலி முகத் திடலில் பல்லாயிரக்கணக்கில் அணி திரண்டு தமது கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள். தேயிலைத் தொழிலாளர் சங்கங்களுக்;கும் தேயிலைப் பெருந்தோட்ட கம்பனிகளுக்கும் இடையே தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு தொடர்பான ஒப்பந்தம் ஏற்படும் வரை அவர்களின் போராட்டம் மேலும் வீறு கொண்டதாகத் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.
தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கள் தத்தமது அரசியல் வேறுபாடுகளுக்கு ஏற்ப தனியாகவும், வௌ;வேறாக கூட்டிணைந்தும் தொழிலாளர்களைத் திரட்டி வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களின் கூலி உயர்வுப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதிலுமுள்ள பல்வேறு அரசியல் சமூக அமைப்புக்களும் தலைவர்களும் குரலெழுப்பி வருகின்றனர். இருந்தும் இந்த விடயத்தில் அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களின் கூலி உயர்வுக்கான முன்னெடுப்பு எதனையும் இதுவரை மேற்கொள்ளாதது கவலையைத் தருகின்றது. மத்திய அரசாங்கத்தின் ஆட்சி அதிகாரம் தொடர்பாக தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகள் தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கை மீது அரசாங்கத்தின் அக்கறையை காலதாமதாக்கி விடுமோ என்ற அச்சம் பரவலாக ஏற்பட்டுள்ளது.
(“மலையகத் தொழிலாளர்களின் கூலி உயர்வுக்கான போராட்டத்துக்கு எமது பூரண – SDPT” தொடர்ந்து வாசிக்க…)