‘தனி ஈழம் வேண்டாம்; ரூ. 1,000 சம்பளமே வேண்டும்’

பெருந்தோட்ட மக்கள் தனி ஈழக் கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைக்கவில்லை எனத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் ​சுரேஷ், அடிப்படைச் சம்பளத்தை ஆயிரமாக அதிகரிக்க, அரசாங்கத்தின் ​அழுத்தங்கள் தேவை எனவும் தெரிவித்துள்ளார். ராஜகிரியவில் இடம்பெற்ற முதலாளிமார் சம்மேளனத்துடனான கலந்துரரையாடலின் பின்னர், அதில் கலந்து கொண்ட அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

(“‘தனி ஈழம் வேண்டாம்; ரூ. 1,000 சம்பளமே வேண்டும்’” தொடர்ந்து வாசிக்க…)

ஒன்று கூடிய முன்னாள் ஆயுதக் குழுக்களின் தலைவர்கள்!! யாழ் நகரில் கோலாகல விருந்து!!

முன்னாள் போராளியொருவரது குழந்தையின் பிறந்த நாள்(05/03/2018) விழாவிற்கு முன்னாள் ஆயுதக்குழுக்களது தலைவர்கள் ஒன்று திரண்டு பங்கெடுத்துள்ளமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான குறித்த நபர் தற்போது புளொட் அமைப்பின் முக்கியஸ்தராகியுள்ளார்.அவ்வகையில் ஒட்டுக்குழு புளொட் தலைவர் த.சித்தார்த்தன், மத்திய குழு உறுப்பினரும், மாமனிதர் சிவராம் கொலை முக்கிய சூத்திரதாரியுமான ஆர்.ஆர் எனப்படும் இராகவன் அவ்வமைப்பின் மாகாணசபை உறுப்பினர் கஜதீபன் உள்ளிட்டோர் விழாவில் பங்கெடுத்திருந்தனர்.இதேவேளை பிளவுண்ட ஈபிஆர்எல்எவ் கட்சியின் அனைத்து தலைவர்களும் நீண்ட இடைவெளியின் பின்னர் ஒரே வைபவத்தில் பங்கெடுத்துள்ளனர். சுரேஸ்பிறேமசந்திரன், வரதராஜாப்பெருமாள்சுகு மற்றும் முன்னாள் இராணுவத்தளபதியும் தற்போதைய ஈ.பி.டி.பி செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா,அதிலிருந்து வெளியேறிய வடமாகாண எதிர்கட்சி தலைவர் சி.தவராசா என அனைவரும் வருகை தந்திருந்தனர்.இதேவேளை விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் முக்கியஸ்தரான பசீர் காக்கா போன்றவர்களும் இந்நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.

(“ஒன்று கூடிய முன்னாள் ஆயுதக் குழுக்களின் தலைவர்கள்!! யாழ் நகரில் கோலாகல விருந்து!!” தொடர்ந்து வாசிக்க…)

துமிந்தவின் மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷமன் பிரேமசந்திர உள்ளிட்ட நால்வர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு மேல் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம், அதனை நிறைவேற்றுமாறு இன்று (11), உத்தரவிட்டுள்ளது.

(“துமிந்தவின் மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டது” தொடர்ந்து வாசிக்க…)

Rupee crisis mainly due to internal problems – DEW

General Secretary of the Communist Party Dew Gunasekara at a Seminar on ‘the Economic Crisis in Sri Lanka’ held at the Sujeewa Hall in Matara last weekend flayed the government for trying to shirk the responsibility for the current economic crisis.

(“Rupee crisis mainly due to internal problems – DEW” தொடர்ந்து வாசிக்க…)

உண்ணாவிரதமிருந்த கைதிகளில் ஐவர் வைத்தியசாலையில்

தங்களுக்கு எதிராக, நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை துரிதமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு தெரிவித்து, அநுராதபுரம் மற்றும் மெகசின் சிறைச்சாலைகளில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும், அரசியல் கைதிகள் 55 பேரில், ஐவர் சுகயீனமுற்றநிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, சிறைக் கைதிகளை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. சுகயீனமுற்ற கைதிகள், சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதன் பின்னர், மீண்டும் சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும், குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.

நடைபவனிக்கு ஆதரவு…

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்து வருகின்ற நடைபவனிக்கு அதரவு தெரிவித்து, கைதடி சித்த மருத்துவ மாணவர்களும், இன்று (09) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இலங்கையின் உதவியைக் கோருகிறது சீஷெல்ஸ்

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, சீஷெல்ஸ் நாட்டைச் சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அந்நாட்டு ஜனாதிபதி டெனி ஃபோவுக்கும் இடையிலான சந்திப்பொன்று, நேற்று (08) மாலை இடம்பெற்றது. நேற்று மாலை, சீஷெல்ஸ் அரச மாளிகைக்குச் சென்ற ஜனாதிபதிக்கு, பாரிய வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், மரியாதை வேட்டுகள் தீர்க்கப்பட்டு, அணிவகுப்பு மரியாதையும் செலுத்தப்பட்டது.

(“இலங்கையின் உதவியைக் கோருகிறது சீஷெல்ஸ்” தொடர்ந்து வாசிக்க…)