தயவுசெய்து தங்களின் ஊடகத்தில் வெளியிடவும்

“ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும்” – வெளிநாடு வாழ் தமிழர்கள் புகார்; மத்திய – தமிழக அரசுகள் முரண்பாடு

வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் கோடிக்கணக்கான தமிழர்கள் வசிக்கின்றனர். இவர்களும் தமிழகத்தின் மக்கள் பிரச்சினைகளில் பங்கெடுத்து வருகின்றனர். தமிழக மண்ணைக் காப்பாற்ற வேண்டும் என்று கடமை உணர்வு இங்கு இருப்போருக்கு மட்டுமல்ல, கடல் கடந்து வாழும் தமிழர்களுக்கும் இருக்கிறது. இதன் நிரூபணச் செயல்பாடுகள் தற்போது காணக் கிடைக்கின்றன.

(“தயவுசெய்து தங்களின் ஊடகத்தில் வெளியிடவும்” தொடர்ந்து வாசிக்க…)

புலேந்திரன், குமரப்பாவுக்கு திருமணத்தை நடத்தி வைத்ததும் இந்தியப்படையினர்

புலிப்பயங்கரவாதிகள் தாங்கள் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வது போல நடித்தார்கள். தங்களிடமிருந்த சில ஆயுதங்களைக் கையளித்தார்கள். பின்பு புலேந்திரன், குமரப்பா உட்பட 12 பேர் ஆயுதங்களைக் கடத்திக்கொண்டிருந்த போது கடலில் கைதானார்கள்.

(“புலேந்திரன், குமரப்பாவுக்கு திருமணத்தை நடத்தி வைத்ததும் இந்தியப்படையினர்” தொடர்ந்து வாசிக்க…)

எங்கள் வலியின் உணர்வுகளை வார்த்தைகளால் புரியவைக்க முடியாது

தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதிக்கு உருக்கமான கடிதம்
தமிழ் அரசியல் கைதிகளைப் பொதுமன்னிப்பின் கீழோ புனர்வாழ்வளித்தோ விடுதலை செய்ய நடவடிக்ைக எடுக்குமாறு கொழும்பு மகசீன் சிறைச்சாலை கைதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உருக்கமான கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர். வலிகளையும் சுமைகளையும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதென்று தெரிவித்துள்ள அவர்கள், தம்மை உறவுகளோடு சேர்த்து வைப்பதற்கு நடவடிக்ைக எடுத்தால், வரலாறு ஜனாதிபதியை வாழ்த்தும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

(“எங்கள் வலியின் உணர்வுகளை வார்த்தைகளால் புரியவைக்க முடியாது” தொடர்ந்து வாசிக்க…)

ஆசிய நாடுகளின் நாணயம் மேலும் வீழ்ச்சியடையலாம்

அமெரிக்க டொலரின் பெறுமதி தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றமையினால் ஆசிய நாடுகளின் நாணய அலகுகள் மேலும் குறைவடையலாம் என ரொயிட்டஸ் செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. டொலரின் பெறுமதி அதிகரிப்பதற்கு மேலதிகமாக மசகு எண்ணெயின் விலையும் சர்வதேச மட்டத்தில் அதிகரித்துள்ளது. இது ஆசிய நாடுகளின் நாணயங்களின் பெறுமதியில் மாற்றத்தை ஏற்படுத்தும். அமெரிக்காவின் பொருளாதார சேவைத்துறை 21 ஆண்டுகளின் பின்னர் வளர்ச்சியை காட்டுவதாக ரொயிட்டஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்திய ரூபாவின் பெறுமதி பாரிய சரிவை எதிர்நோக்கியுள்ளது. இந்தியாவின் இறக்குமதி பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு இந்திய பொருளாதாரத்தில் பாரிய தாக்கதை ஏற்படுத்தியுள்ளன என்றும் ரொயிட்டஸ் செய்தி ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

நீர் ஆய்வு அறிக்கையால் சபையில் குழப்பம்

பாலியாற்றில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீரைக் கொண்டு வருவது தொடர்பான பிரேரணை, வடக்கு மாகாண சபையில் இன்று (04) நிறைவேற்றப்பட்டது. வடக்கு மாகாண சபையின் 133ஆவது அமர்வு, கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் இன்று (04) அவைத் தலைவர் சீ.வீகே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தால் பாலியாற்றில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீரைக் கொண்டு வருவது தொடர்பான பிரேரணை முன்மொழியப்பட்டது. இந்தப் பிரேரணையை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வழிமொழிந்தார்.

(“நீர் ஆய்வு அறிக்கையால் சபையில் குழப்பம்” தொடர்ந்து வாசிக்க…)

சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய அலைபேசி செயலி அறிமுகம்

உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையின் கலாசார பாரம்பரியம் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் தொடர்பிலானத் தகவல்களை இலகுவாக தெரிந்துக்கொள்வதற்கு புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

(“சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய அலைபேசி செயலி அறிமுகம்” தொடர்ந்து வாசிக்க…)

அரசியல் கைதிகளின் விடுதலையே தீர்வுக்கான வாசலைத் திறக்கும்

அரசியல் கைதிகளை சிறையில் வைத்துக் கொண்டு அரசியல் தீர்வை எட்டவே முடியாது, மண்டேலாவின் விடுதலையே ஆபிரிக்காவில் நல்லிணக்கம் ஏற்பட வழிவகுத்தது. எனவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையே அரசியல் தீர்வுக்கான வாசலை திறக்கும் என சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

(“அரசியல் கைதிகளின் விடுதலையே தீர்வுக்கான வாசலைத் திறக்கும்” தொடர்ந்து வாசிக்க…)

இந்தோனேசிய நிலநடுக்கம், சுனாமி; சுமார் 380 பேர் பலி

இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர்அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமியில் சிக்கி சுமார் 384இற்கும் அதிகமானோர்உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக் கணக்கானோர் காயமடைந்துள்ளதாக இந்தோனேசியா உறுதி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. இந்தோனேசியாவின் சுலாவெசி தீவிலுள்ள பாலு என்ற பகுதியில் சுமார் 2 மீட்டர் உயரத்துக்கு எழுந்த சுனாமி அலைகள் அங்கிருந்தவர்களை கடலுக்குள் இழுத்துச் சென்றுள்ளன.

(“இந்தோனேசிய நிலநடுக்கம், சுனாமி; சுமார் 380 பேர் பலி” தொடர்ந்து வாசிக்க…)

புதிய பஸ் நிலையம் தொடர்பாக மீண்டும் முரண்பாடு

வவுனியா புதிய பஸ் நிலையத்தில், இன்று மீண்டும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்ட காலத்தில் இருந்து தொடர்ச்சியாக தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையினருக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டு வந்த நிலையில், இன்று பஸ் நிலையத்துக்கு முன்பாக பஸ்களை நிறுத்த முடியாது என வவுனியா நகரசபையால் சமிக்ஞை பதாதை அமைக்கப்பட்டபோது, ஓட்டோ உரிமையாளர்களுக்கும் நகரபிதாவுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

(“புதிய பஸ் நிலையம் தொடர்பாக மீண்டும் முரண்பாடு” தொடர்ந்து வாசிக்க…)