அடையாள அட்டை கட்டணம் உயர்வு

தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்போரிடம் அறவிடப்படவுள்ள கட்டணம், இன்று (01) முதல், அதிகரிக்கப்படவுள்ளது. இதன் பிரகாரம், 15 வயதைப் பூர்த்திஜ செய்தவர்கள், அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது, இன்று முதல் 100 ரூபாய் கட்டணத்தைச் செலுத்தவேண்டும் என்று, ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

(“அடையாள அட்டை கட்டணம் உயர்வு” தொடர்ந்து வாசிக்க…)

‘பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சார்பான கூட்டு ஒப்பந்தம் எவ்வாறு அமைய வேண்டும்?’ – பொது வேலைத்திற்கான கலந்துரையாடல்

இடம்: சமூக நலனுக்கான நிறுவனம் (CSC) இல. 30,
                         புகையிரத நிலைய வீதி, ஹட்டன்
திகதி:         2018/09/01
நேரம்:         மு.ப. 10 மணி முதல் பி.ப. 2 மணிவரை
மக்கள் தொழிலாளர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இந் நிகழ்வு பற்றி தங்களின் மேலான ஊடகத்தில் செய்தியை பிரசுரித்தமைக்கு முதலில் எமது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உட்பட பெருந்தோட்ட முறையின் இருப்பு பற்றிய பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ள இந் நிகழ்விற்கு தங்களின் மேலான ஊடகத்தின் சார்பில் ஊடகவியலாளர்களை கலந்துகொள்ள ஏற்பாடு செய்து குறித்த செய்தியை மக்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி
இப்படிக்கு
சட்டத்தரணி இ. தம்பையா
பொதுச் செயலாளர்
தொடர்புகளுக்கு: 071-4302909/071-6275459

நண்பர் நுஃமான் தான் ஹஸ்புல்லாஹ்வை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்……

7 நாட்களாக முகநூலுக்குள் வரவில்லை. நான் வரவில்லை என்பதற்காக சூரியன் உதிக்காமலுமில்லை. ஆனாலும் கடந்த 25ம் திகதி பகல் 10 மணியளவில் நண்பர் சிராஜ்மஸூர் சொன்ன செய்தியும் நண்பர் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் தொலைபேசியில் அழைத்த நிகழ்வும் என்னைக்கலங்கவைத்து…

(“நண்பர் நுஃமான் தான் ஹஸ்புல்லாஹ்வை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்……” தொடர்ந்து வாசிக்க…)

யாழ் சிங்கள மகா வித்தியாலயத்தை மீண்டும் திறக்க முயற்சி

யாழ் சிங்கள மகா வித்தியாலயத்தை மீண்டும் திறப்பதற்கான முக்கியப் பேச்சுவார்த்தை ஒன்று, யாழ் பழைய பூங்காவில் நேற்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 53 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ் நகரப் பகுதியில் அமைக்கப்பட்ட சிங்கள மகா வித்தியாலயமானது, 1985 ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்த சூழ்நிலைகளால் மூடப்பட்டது. இந்நிலையில், தற்போது அதனை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி, யாழ் பழைய பூங்காவில் குறித்த பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவர்கள், யாழ் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வாழும் சிங்களவர்கள் உள்ளிட்ட பலரும் நேற்று கூடி, இது தொடர்பில் கலந்துரையாடியிருப்பதாக தெரியவந்துள்ளது. எனினும் தற்போது இராணுவத்தினரின், ஆக்கிரமிப்பிலேயே யாழ் சிங்கள மகா வித்தியாலயம் இருக்கின்றது.

‘தீர்வை ஒத்திவைத்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’

நாட்டில் தற்போது யுத்தம் இல்லை. ஆனால், யுத்தம் ஏற்பட்டதற்கான காரணங்கள் அப்படியே இருந்துகொண்டுதான் இருக்கின்றன என்று தெரிவித்த, தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், அரசியல் தீர்வைப் பெறும் வரை பொருளாதார தீர்வை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்திவைத்துள்ளது என்றும் கிளிநொச்சி மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில், இளைஞர் யுவதிகளுடனான சந்திப்பு, கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் நேற்று (26) இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

(“‘தீர்வை ஒத்திவைத்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’” தொடர்ந்து வாசிக்க…)

‘வெடுக்குநாறிமலை’ பற்றி பேசுவதற்கு தமிழ்த் தலைமைகள் தயாராக இல்லை

தமிழர்களின் அபிலாஷைகள் வென்றெடுக்கப்படுவதில் காலம் தாழ்த்தப்படுவது அச்சமூகத்தின் அழிவுக்கே வித்திடும் என்று கூறும் வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், அவ்வாறு காலம் தாழ்த்தப்படுவதன் எதிரொலியாகவே வெடுக்குநாறி மலையின் கையகப்படுத்தலையும் பார்க்க வேண்டும் என்கின்றார். அவர் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணலில் வெடுக்குநாறி மலை கையகப்படுத்தப்படுவதைத் தடுப்பதன் அவசியத்தை விபரிக்கின்றார்.

(“‘வெடுக்குநாறிமலை’ பற்றி பேசுவதற்கு தமிழ்த் தலைமைகள் தயாராக இல்லை” தொடர்ந்து வாசிக்க…)

Mexico’s Left Turn?: Mexico’s Election and Beyond in the Trump Era

Despite fierce opposition from big business and the media, Andrés Manuel López Obrador (AMLO) was elected by an overwhelming majority as President of México on July 1 and has won majorities in both houses of Congress. How did this rejection of the major parties come about? Is he a “leftist,” or “populist” as widely purported in the North American press? What kind of change can be expected? How might this affect the future of NAFTA and the immigration crisis? What obstacles will the new government face?

(“Mexico’s Left Turn?: Mexico’s Election and Beyond in the Trump Era” தொடர்ந்து வாசிக்க…)

கார்ல்ஸ் மாக்ஸ் இன் 200 ஆண்டு நினைவு தின நிகழ்வு

கனடா தமிழ் சங்க மண்டபத்தில் கார்ல் மாக்ஸ் இன் 200 பிறந்த தின கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. மாக்சிச ஆர்வலர்களும் பொது மக்களும் இந்த கலந்துரையாடலில் கலந்து கெண்டனர். கனடா கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பிரமுகர் உட்பட தவபாலன் மாஸ்ரர் பாலா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கலந்துரையாடலில் கலந்து கொண்ட பலரும் தமது ஆழமான வாசிப்பு அனுபவங்களின் அடிப்படையில் கார்ல் மாக்ஸ் இன் சமூக விஞ்ஞாம் சம்மந்மான கருத்துக்களை பதிவு செய்னர். முன்பு எப்போதையும் விட சமூக மாற்றத்தை ஏற்படுத்தி உழைக்கும் மக்களின் அதிகாரத்தை நிறுவ வேண்டி அளவிற்கு முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக வளர்ச்சியடைந்துள்ள நிலமையை உலக நாடுகளில் தற்போது நடைபெற்றுவரும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு பலரும் தமது கருத்துக்களை வழங்கினர்.

(“கார்ல்ஸ் மாக்ஸ் இன் 200 ஆண்டு நினைவு தின நிகழ்வு” தொடர்ந்து வாசிக்க…)

மீனவ நண்பர்கள்

(Vijay Baskaran)
நமது சமூகத்தில் நமது நாடுகளில் கற்ற கல்வி சமூகத்துக்கு பயன்படுவது இல்லை.பயன்படுத்துவதும் குறைவு.ஆனால் இந்தப் படித்தவர்கள் படிக்காத பாமர மக்களிடம் நிறையவே கற்கவேண்டியுள்ளது. கேரளாவில் வெள்ளத்தில் தத்தளித்த மக்களை எந்த பிரதிபலன் பாராது களத்திலே இறங்கி பல உயிர்களை மீனவர்களே காப்பாற்றியுள்ளனர்.இதைவிட தமிழக மீனவர்களும் பலன் எதிர்பராது உதவிக்கு சென்றுள்ளார்கள்.இந்த மீனவர்களே கேரளத்து இராணுவம் என பிரணாயி விஜயன் கூறி அவர்களை கௌரவுத்துள்ளார்.

(“மீனவ நண்பர்கள்” தொடர்ந்து வாசிக்க…)

அனைத்து தமிழ் கட்சிகளும் சந்தித்போது

22/8/2018 இன்று களுவாஞ்சிகுடி ராசமாணிக்கம் அரங்கில் கிழக்கு மாகாண தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சகல தமிழர் கட்சிகளின் கலந்துரையாடல் இடம்பெற்ற போது