’பிரபாகரனின் மரணம் மகிழ்ச்சியை தரவில்லை’

தனது தந்தையின் உயிரிழப்புக்கு காரணமான, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டதை நினைத்து தானும் தனது சகோதரி பிரியங்கா காந்தியும் மகிழ்ச்சியடையவில்லை என, இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜேர்மனியின் ஹம்பேர்க் நகரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

(“’பிரபாகரனின் மரணம் மகிழ்ச்சியை தரவில்லை’” தொடர்ந்து வாசிக்க…)

ட்ரம்ப்புக்கு வருகிறது மிகப்பெரும் ஆபத்து?

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் முன்னாள் சட்டத்தரணி மைக்கல் கோஹன், தன்மீதான குற்றச்சாட்டுகளை ஏற்று, நீதிமன்றத்தில் சரணடைந்துள்ள நிலையில், ஜனாதிபதியை மேலும் சிக்கலுக்குள்ளாக்கும் தகவல்களை அவர் வெளியிடுவாரென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கோஹனின் சட்டத்தரணியான டனி டேவிஸ், இது தொடர்பான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

(“ட்ரம்ப்புக்கு வருகிறது மிகப்பெரும் ஆபத்து?” தொடர்ந்து வாசிக்க…)

கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பொதுவான கொள்கை மற்றும் வேலைத்திட்டத்திற்கு சகல தரப்புக்கும் திறந்த அழைப்பு

சம்பள உயர்வு உட்பட பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான புதிய கூட்டு ஒப்பந்தம் உட்பட பெருந்தோட்டத் தொழிலாளர்களையும் பெருந்தோட்டத் தொழிற்துறையையும் பாதுகாப்பது தொடர்பான பொவான கொள்கை மற்றும் வேலைத்திட்டத்திற்கான கலந்துரையாடலுக்கு சகல தொழிற்சங்கங்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும், சிவில் அமைப்புகளுக்கும், தனி நபர்களுக்கும் மக்கள் தொழிலாளர் சங்கம் திறந்த அழைப்பை விடுத்துள்ளது.

(“கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பொதுவான கொள்கை மற்றும் வேலைத்திட்டத்திற்கு சகல தரப்புக்கும் திறந்த அழைப்பு” தொடர்ந்து வாசிக்க…)

அன்பின் சூத்திரம் ஆசிரியருக்கு!

கலைஞர் தொடர்பாக ராம் எழுதி நீங்கள் வெளியிட்டுள்ள கட்டுரையில் நான் வடக்கு கிழக்கு மாகாண சபை காலத்தில் எங்களுக்கு நெருக்கடிகள் ஏற்பட்ட பின்னர் கடைசி நேரத்தில்த்தான் அவரை நாடியது போன்று அர்த்தம் தொனிக்கும் வகையில் எழுதப் பட்டிருக்கின்றது. அது மிகத் தவறானது. அதனைத் திருத்தும் வகையில் நான் கீழே குறிப்பிட்டுள்ளதை பதிப்பிப்பதுடன், அதனை எழுதிய ராமுக்கும் இந்தத் தகவலை அறியத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

(“அன்பின் சூத்திரம் ஆசிரியருக்கு!” தொடர்ந்து வாசிக்க…)

500 ஏக்கரை விடுவிக்க ரூ.780 மில்லியன் ஒதுக்கீடு

வடக்கு, கிழக்கில், பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளில், மேலும் 500 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு, அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளதென, அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது என்றும், திறைசேரித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

(“500 ஏக்கரை விடுவிக்க ரூ.780 மில்லியன் ஒதுக்கீடு” தொடர்ந்து வாசிக்க…)

‘படையினர், முகாம்கள் குறைப்பு விவகாரம் சூடுபிடித்தது ’

சிறிசேன, விக்கிரமசிங்க அரசாங்கம், ஜெனீவாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கமைய இராணுவத்தினரைப் பழிவாங்கி வருவதாக குற்றஞ்சாட்டிய ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, பயங்கரவாதிகளுக்கு எதிரான இராணுவ வெற்றியை அபகரிப்பதற்கு அரசாங்கம் முயன்று வருகின்றது என்றார்.

இராணுவ வீரர்களின் எண்ணிக்கையில் குறைப்பு மற்றும் வடக்கு, கிழக்கில் முகாம்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவது தொடர்பில், நாடாளுமன்றத்தில், நேற்று (18) கேள்வியெழுப்பி, கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(“‘படையினர், முகாம்கள் குறைப்பு விவகாரம் சூடுபிடித்தது ’” தொடர்ந்து வாசிக்க…)

மலையகம்: பெரு மழை காரணமாக ரயில் சேவைகள் தாமதம்

பதுளை – கொழும்பு பிரதான ரயில் போக்குவரத்து பாதையின், அட்டன் மற்றும் கொட்டகலை ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் சிங்கமலை சுரங்கப் பகுதிக்கு அருகாமையில், 109ஆவது மைல் கட்டைப்பகுதியில், இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, மலையக ரயில் சேவைகள் தாமதமாகி சென்றன. அதன் பின்னர் பாதிப்பு ஏற்பட்ட தண்டவாளங்களை சீர்செய்யும் பணிகளில், ரயில்  நிலைய ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டன. தற்பொழுது தண்டவாளங்கள் சீர்செய்துள்ளதோடு, மலையகத்துக்கான ரயில் சேவை வழமைக்கு மாறியுள்ளதாக, அட்டன் ரயில் நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

(“மலையகம்: பெரு மழை காரணமாக ரயில் சேவைகள் தாமதம்” தொடர்ந்து வாசிக்க…)

‘யாழில் வன்முறைகள் குறைந்துள்ளன…?’

அதிக வன்முறைச் சம்பங்கள் இடம்பெறும் பிரதேசங்களின் தகவல்களை, இரகசியமான முறையில், தொலைபேசி மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் நேரடியாக தெரிவிக்குமாறு, வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான்  பெர்ணான்டோ பொது மக்களைக் கேட்டுக்கொண்டார். அத்துடன், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் ஓரளவுக்கு குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் – தலைமைப் பொலிஸ் நிலையத்தில், இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

(“‘யாழில் வன்முறைகள் குறைந்துள்ளன…?’” தொடர்ந்து வாசிக்க…)

பாலியல் குற்றச்சாட்டு; தனியார் கல்வி நிலைய நிர்வாகிக்கு மறியல்

தர்மபுரம்  பகுதியில் இயங்கிவந்த தனியார் கல்வி நிலையத்தில், தனது மனைவியின் துணையுடன் கல்வி நிலையத்துக்கு கல்வி கற்க வந்த மாணவிகள் சிலருக்கு , பாலியல் தொந்தரவு  மற்றும் பாலியல் துஷ்பிரயோக முயற்சி செய்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட அதன் உரிமையாளரை,  எதிர்வரும்  30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கிளிநொச்சி பதில் நீதவான் சிவபாலன், நேற்று (17) உத்தரவிட்டுள்ளார்.

“இனி எல்லாம் கடவுள் கையில்தான் இருக்கு”- வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட நடிகை அனன்யா உருக்கம்

சில நிமிடங்களில் வெள்ள நீர் கிடுகிடுவென அதிகரித்துவிட்டது, 2 நாட்களாக வெள்ளத்தில் சிக்கி மிகவும் வேதனைப்பட்டேன், இனி எல்லாம் கடவுள் கையில்தான் இருக்கிறது என்று மீட்கப்பட்ட நடிகை அனன்யா தெரிவித்துள்ளார். கேரளாவில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்து கடந்த 10 நாட்களாக இடைவிடாது பெய்த மழை பெய்து வருகிறது. இந்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மாநிலத்தின் பெரும்பகுதியான மாவட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

(““இனி எல்லாம் கடவுள் கையில்தான் இருக்கு”- வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட நடிகை அனன்யா உருக்கம்” தொடர்ந்து வாசிக்க…)