இந்த நூற்றாண்டின் மறக்கமுடியாத நிகழ்வு !!

இது செய்தி என்பதை விட பல பாடங்களை உலகிற்கு கற்பித்த இந்த நூற்றாண்டின் மறக்கமுடியாத நிகழ்வு. நம்பிக்கை என்ற அந்த ஒற்றை வார்தையின் பலம் மட்டுமே 10 நாட்கள்…….முதன்முறையாக 4km தொலைவில் கண்டுபிடிக்கப்படும் வரை அவர்களை உயிரோடு வைத்திருந்தது.

(“இந்த நூற்றாண்டின் மறக்கமுடியாத நிகழ்வு !!” தொடர்ந்து வாசிக்க…)

‘அபிவிருத்திகளைத் திணிப்பதால் ஐக்கியத்தை ஏற்படுத்திவிடமுடியாது’ – சி.வி.விக்னேஸ்வரன்

வடக்கு, கிழக்கின் பொருளாதார விருத்தி நாட்டின் ஐக்கியத்தை உறுதி செய்யும் என்ற உங்கள் எதிர்பார்ப்பு இடந்தவறியதாகவே எனக்குப்படுகின்றது என்று குறிப்பிட்டுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அரசியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்கள் மீது பொருளாதார அபிவிருத்திகளைத் திணிப்பதன் மூலம் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்திவிடமுடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

(“‘அபிவிருத்திகளைத் திணிப்பதால் ஐக்கியத்தை ஏற்படுத்திவிடமுடியாது’ – சி.வி.விக்னேஸ்வரன்” தொடர்ந்து வாசிக்க…)

போதைப்பொருள் விற்றால் மரண தண்டனை

போதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு எதிராக மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று (10) கூடிய அமைச்சரவைக் கூட்டத்திலேயே, மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கே அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ளது.

(“போதைப்பொருள் விற்றால் மரண தண்டனை” தொடர்ந்து வாசிக்க…)

சிறுவர்கள் மீட்கப்பட்ட பின்னர் கொண்டாடுகிறது தாய்லாந்து

தாய்லாந்தின் குகையில் சிக்கியிருந்த 12 சிறுவர்களையும் அவர்களின் கால்பந்தாட்டப் பயிற்றுநரையும் மீட்கும் நடவடிக்கை, நேற்று முன்தினம் (10) வெற்றிகரமாக நிறைவுக்கு வந்ததைத் தொடர்ந்து, தாய்லாந்து முழுவதும், நேற்று (11) கொண்டாட்டமான நிலைமையே நிலவியது.

(“சிறுவர்கள் மீட்கப்பட்ட பின்னர் கொண்டாடுகிறது தாய்லாந்து” தொடர்ந்து வாசிக்க…)

தியாகிகள் தினம் யாழ்பாணத்தில்

தமிழ் இனத்தின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும், சக அமைப்புக்கள், மக்களுக்கு மறுக்கப்பட்ட ஜனநாயக உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவும் ஏற்றத்தாழ்வுகள் அற்ற சமூக சமத்துவத்திற்காகவும், மக்களின் விடிவிற்காகப் போராடிய சக்திகளிடையே ஐக்கியத்திற்காகவும்

(“தியாகிகள் தினம் யாழ்பாணத்தில்” தொடர்ந்து வாசிக்க…)

தியாகிகள் தினம் 19.06.2018

மண்முனை மேற்கு பிரதேச சபை உறுப்பினர், தோழர் குகன் அவர்களின் வழிகாட்டலுடன் கிழக்கு மாகாண தோழர்களின் எற்பாட்டில் தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் 28 ஆவது தியாகிகள் தின வைபவம் மட்டக்களப்பு, கல்லாறு மெதடிஸ்த சமூக மண்டபத்தில் 19.06.2018 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் போராட்டத்தில் மரணித்த தோழர்கள் குணம், காளி ஆகியோரின் தங்கை விமலேஸ்வரி தீபம் ஏற்றி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

(“தியாகிகள் தினம் 19.06.2018” தொடர்ந்து வாசிக்க…)

இந்தியாவிலிருந்து திரும்பியோரின் பிள்ளைகள் வடக்கில் புறக்கணிப்பு

யுத்தம் காரணமாக, பாதுகாப்பு நலன் கருதி, வடக்கில் இருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, பின்னர் யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின் மீண்டும் வடக்குக்கு மீள்குடியமர்ந்த மக்கள் பல்வேறு வகையில் புறக்கணிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

(“இந்தியாவிலிருந்து திரும்பியோரின் பிள்ளைகள் வடக்கில் புறக்கணிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

விக்னேஷ்வரனை முன்னாள் போராளிகள் கன்னத்தில் அறைந்துள்ளனர்’

சிவில் பாதுகாப்புப் படையின் கேர்ணல் ரத்னபிரிய பந்துவுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் கண்ணீருடன் வழஙகிய பிரியாவிடை வழங்கி, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் எம்,கே.சிவாஜிலிங்கம் ஆகியோரை கன்னத்தில் அறைந்துள்ளதாக ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

(“விக்னேஷ்வரனை முன்னாள் போராளிகள் கன்னத்தில் அறைந்துள்ளனர்’” தொடர்ந்து வாசிக்க…)