முள்ளிவாய்க்காலைப் போல சுற்றி வளைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி, திரேஸ்புரம்!

இன்றிரவு நடக்கவிருக்கும் போலீசு தாக்குதலை தடுத்து நிறுத்த குரல் கொடுப்போம்!

– பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கூட்டறிக்கை

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 என்பது கடைசியாக கிடைத்த தகவல். 30 பேருக்கும் மேற்பட்டவர்கள் குண்டடி பட்டிருக்கின்றனர். துப்பாக்கிச் சூடு மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதியில்தான் நடைபெற்றது என்பது உண்மைக்குப் புறம்பானது என்கிறார்கள் தூத்துக்குடி மக்கள்.
திரேஸ்புரம் பகுதிக்குள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வரும்போது, அவருக்கு காவல் வந்த படையினர் துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு பெண்கள் ஓர் ஆண் உள்ளிட்ட மூவர் கொல்லப்பட்டிருக்கின்றனர். (“முள்ளிவாய்க்காலைப் போல சுற்றி வளைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி, திரேஸ்புரம்!” தொடர்ந்து வாசிக்க…)

தூத்துக்குடியில் உயிர் இழந்த மக்களுக்கு அஞ்சலி

இந்திய தமிழகத்தில் தூத்துக்குடியில் அகிம்சைவழியில் போராடிய தமிழ்மக்களை சுட்டு கொன்றதற்கு கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் உயிர் இழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இலங்கையில் திருகோணமலை மலையருவி முன் ஒன்று கூடிய போது

ஸ்டெர்லைட் போராட்டம்: கள நிலவரம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நேற்று (22.05.2018) நடந்த ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தின்போது பயங்கர வன்முறை வெடித்தது. போலீஸ் துப்பாக்க டில் 9 பேர் உயி ரிழந்தனர். தடியடி, கல்வீச்சு சம்பவங்களில் 12 போலீஸார் உட்பட 75-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வாகனங்கள் கொளுத்தப்பட்டன. தூத்துக்குடி நகரமே கலவர காடாக மாறியது. பதற்றம் நீடிப்பதால் பெருமளவு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

(“ஸ்டெர்லைட் போராட்டம்: கள நிலவரம்” தொடர்ந்து வாசிக்க…)

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு ‘அரச பயங்கரவாதம்’: தமிழக அரசை விளாசிய ராகுல் காந்தி

தமிழகத்தில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களில் 9 பேர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டது மாநில அரசே மக்களைக் கொன்று குவிக்கும் அரசு பயங்கரவாதச் செயலுக்கு கொடூரமான உதாரணமாகும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழக அரசை கடுமையாகச் சாடியுள்ளார். இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்து தமிழக அரசைச் சாடியுள்ளார். அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

(“ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு ‘அரச பயங்கரவாதம்’: தமிழக அரசை விளாசிய ராகுல் காந்தி” தொடர்ந்து வாசிக்க…)

காங்கிரஸை தவிர்த்து பாஜக எதிர்ப்பு கூட்டணியை உருவாக்குவது சாத்தியமில்லை: தேவே கவுடா

காங்கிரஸ் அல்லாத பாஜக எதிர்ப்பு கூட்டணியை உருவாக்குவது என்பது சாத்தியமில்லை என மதச் சார்பற்ற ஜனதாதளத்தின் தலைவர் தேவே கவுடா தெரிவித்திருக்கிறார். 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்பில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் இருக்கும் சூழலில் தேவே கவுடாவின் இந்த கருத்து அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

(“காங்கிரஸை தவிர்த்து பாஜக எதிர்ப்பு கூட்டணியை உருவாக்குவது சாத்தியமில்லை: தேவே கவுடா” தொடர்ந்து வாசிக்க…)

ஜி.பரமேஸ்வரா கர்நாடகத்தின் முதல் தலித் துணை முதல்வர்?

கர்நாடகாவில் நாளை முதல்வராக மஜத தலைவர் குமாராசாமி பதவியேற்கிறார். கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜி.பரமேஸ்வரா அம்மாநிலத்தின் முதல் தலித் துணை முதல்வராகப் பொறுப்பேற்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனாலும் மதச்சார்பற்ற ஜனதாதளம் காங்கிரஸின் இந்த முன்மொழிவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதாகவும் கூறப்படுகிறது.

(“ஜி.பரமேஸ்வரா கர்நாடகத்தின் முதல் தலித் துணை முதல்வர்?” தொடர்ந்து வாசிக்க…)

8 பேர் பலி; 38,048 பேர் பாதிப்பு

சீரற்ற வானிலையால், இதுவரையிலும் 9,817 குடும்பங்களைச் சேர்ந்த 38,048 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறான அனர்த்தங்களினால் இதுவரையிலும் 8 பேர் மரணமடைந்துள்ளனர். இதேவேளை 7 பேர் காய​மடைந்துள்ளனர். 19 வீடுகள் முழுமையாகவும், பகுதியளவில் 918 வீடுகளும் ​சேதமடைந்துள்ளனவென தெரிவித்துள்ள அந்த நிலையம்,1,625 குடும்பங்களைச் சேர்ந்த 6,090 பேர், 80 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

(“8 பேர் பலி; 38,048 பேர் பாதிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

கர்நாடகாவில் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணியில் துணை முதல்வர், அமைச்சர் பதவியை பகிர்வதில் இழுபறி

கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் காங்கிரஸ், மஜத கூட்டணியில் துணை முதல்வர், அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் புதிதாக அமையும் மஜத, காங்கிரஸ் கூட்டணி அரசில் எந்த கட்சிக்கு கூடுதல் முக்கியத்துவம், எத்தனை அமைச்சர்கள், துணை முதல்வர் உள்ளிட்ட பதவிகளை பகிர்ந்து கொள்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மஜத தேசிய தலைவர் தேவகவுடா தலைமையில் நடக்கும் இந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, மாநில தலைவர் பரமேஷ்வர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

(“கர்நாடகாவில் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணியில் துணை முதல்வர், அமைச்சர் பதவியை பகிர்வதில் இழுபறி” தொடர்ந்து வாசிக்க…)

மதுரோவுக்கு வெற்றி; புதிய தடைகள் வரும்?

வெனிசுவேலாவின் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள தற்போதைய ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ, அடுத்த 6 ஆண்டுகளுக்கும் ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார். ஆனால், அவரது இவ்வெற்றி, வெனிசுவேலா மீது புதிய தடைகளைக் கொண்டுவருமென எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று முன்தினம் (20) இடம்பெற்ற வாக்கெடுப்பில், ஜனாதிபதி மதுரோவுக்கு 5.8 மில்லியன் வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரதம வேட்பாளர் ஹென்றி ஃபல்கொன்னுக்கு, 1.8 மில்லியன் வாக்குகள் கிடைத்தன.

(“மதுரோவுக்கு வெற்றி; புதிய தடைகள் வரும்?” தொடர்ந்து வாசிக்க…)