மெரினாவில் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அதற்கு அருகே உள்ள பாரதி சாலையில் 2000க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பொதுமக்கள் கூடி நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தினர். இந்நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் தெகலான் பாகவி ஆகியோர் பங்கேற்றனர். இதனையடுத்து மெரினா கடற்கரையை நோக்கி பேரணியாகச் சென்ற 1000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
Category: செய்திகள்
மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக……. என்னும் நூலின் வெளியீட்டு விழா
தமிழர் சமூக ஜனநாயக கட்சியின்(SDPT) தலைவரும், சமுக செயற்பாட்டாளருமான தோழர் சுகு சிறிதரன் அவர்களினால் எழுதி வெளியிடப்பட்ட மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக..….. என்னும் நூலின் வெளியீட்டு விழா Germany இல் Neuss என்றும் நகரத்தில் 13.05.2018 அன்று மாலை 14.30 இலிருந்து 17.30 வரை நடைபெற்றது.தோழர் அலெக்ஸ் அவர்களின் வரவேற்புரையினைத் தொடர்ந்து இலங்கையில் இதுவரை காலமும் நடைபெற்ற பல்வேறு அனர்த்தங்களினால் மரணித்த மக்களுக்கான மெளன அஞ்சலியுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.இந் நிகழ்வினை திருமதி சசிப்பிரியா ஜெயந்தன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
(“மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக……. என்னும் நூலின் வெளியீட்டு விழா” தொடர்ந்து வாசிக்க…)
முள்ளிவாய்க்காலில், உயிரை தக்கவைக்க முனைந்த அனைத்து தமிழ் மக்ளுக்கும் எதிராகவே அவர்கள் துப்பாக்கிப்பிரயோகம்
அரசும் புலிகளும் செய்துகொண்ட சமாதன உடன்படிக்கை காலத்தில், ஆயிரக்கான தமிழர்கள் மட்டும் புலிகளால் துரோகி என முத்திரை குத்தி கொல்லப்பட்டார்கள்.
இதை விட ,முஸ்லீம்கள், சிங்களவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என கொன்று குவித்த புலிகளின் வீர வரலாறு தனியானவை.
கர்நாடக வாக்கெடுப்பு எப்படி நடக்கும்? சாதக பாதகங்கள் என்ன?- ஓர் அலசல்
கர்நாடக சட்டப்பேரவையில் நாளை மாலை தனது பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் அளித்துள்ளது. அதன் அடிப்படையில் நாளை எப்படி சட்டப்பேரவை நடக்கும் எப்படி வாக்கெடுப்பு நடக்கும் என்பது குறித்துப் பார்ப்போம்.
(“கர்நாடக வாக்கெடுப்பு எப்படி நடக்கும்? சாதக பாதகங்கள் என்ன?- ஓர் அலசல்” தொடர்ந்து வாசிக்க…)
தொடங்கியது குதிரை பேரம்: எம்எல்ஏக்களுக்கு ரூ.150 கோடி வலைவிரித்த ஜனார்த்தன ரெட்டி: ஆடியோ வெளியிட்டு காங்கிரஸ் புகார்
கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் நிலையில், எம்எல்ஏக்களுக்கு கோடிக்கணக்கில் பணம், பதவி சலுகைகளைக் கூறும் பாஜகவின் ஜனார்த்தன ரெட்டியின் ஆடியோ டேப்பை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
அறமற்ற முறையில் அதிகாரத்தைப் பறிக்கிறது பாஜக; பாஜகவின் பணிவான ஊழியர் கர்நாடக ஆளுநர்: சிவசேனா விளாசல்
பாஜகவின் பணிவான ஊழியர் கர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலா. மோடிக்கு விசுவாசமாகச் செயல்படுவதால்தான், பாஜகவைப் பதவி ஏற்க அழைத்துள்ளார். அறமற்ற வழியில் அதிகாரத்தைப் பறிப்பதுதான் பாஜகவின் புதிய கொள்கையா என்று சிவசேனா கட்சி கேள்விகளால் விளாசியுள்ளது.
இராக்கின் புனித நகரில் முதல் முறையாக ‘சமூக நீதி’ கோரும் 2 பெண் கம்யூனிஸ்ட்கள் வெற்றி
இராக் அரசியல் சூழல் பற்றிய குப்பைவாத புரிதல்களைக் கேள்விக்குட்படுத்தும் விதமாக இராக் தேர்தலில் அதன் புனித நகரில் 2 பெண்கள், அதுவும் கம்யூனிஸ்ட் கட்சிப் பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இராக்கில் நடந்த பொதுத்தேர்தலில் ஈராக்கிய கம்யூனிஸ்ட் கட்சி பெற்றுள்ள வரலாறு காணாத வெற்றி அக்கட்சியின் சார்பில் 2 பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநர் அழைப்பு விடுத்தார்: கர்நாடகத்தில் பாஜக ஆட்சியமைக்கிறது; பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம்
கர்நாடகாவில் ஆட்சி அமைக்க வருமாறு பாஜக மாநில தலைவர் எடியூரப்பாவுக்கு அம்மாநில ஆளுநர் வாஜூபாய் வாலா அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து எடியூரப்பா வியாழன் காலை 9.30 மணிக்கு கர்நாடகாவின் 23-வது முதல்வராக பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இறுதி யுத்தத்தில் காணாமலாக்கப்பட்ட 280 பேரின் பெயர் விவரங்கள் வெளியீடு
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது, சரணடைந்த பின்னர் இலங்கை படையினரின் தடுப்புக்காவலில் இருந்த 280 பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் தெரிவித்துள்ளது. இவ்வாறு காணமற்போனவர்களில் குறைந்தது 25 சிறுவர்களும் உள்ளடங்குவதாகவும், இவர்கள் 2009ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மைய நாட்களில் இவர்களின் குடும்பங்களுடன் இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பில் இறுதியாக காணப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, பெயர் விபரங்களையும் வெளியிட்டுள்ளது.
(“இறுதி யுத்தத்தில் காணாமலாக்கப்பட்ட 280 பேரின் பெயர் விவரங்கள் வெளியீடு” தொடர்ந்து வாசிக்க…)
அனைத்து அதிகாரங்களும் காவிரி வாரியத்துக்கே: உச்ச நீதிமன்றம் உத்தரவு: மத்திய அரசுக்கு ‘குட்டு’: கர்நாடக கோரிக்கை நிராகரிப்பு
காவிரி நதிநீர் பங்கீடு வழக்கை இன்று விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், இறுதி தீர்ப்பில் கூறியுள்ளபடி அமைக்கப்படும் காவிரி நிதிநீர் மேலாண்மை வாரியத்துக்கே அனைத்து அதிகாரங்களும் உண்டு, மத்திய அரசை அணுகத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேசமயம், வழக்கை ஜூலை மாதத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என்ற கர்நாடகத்தின் கோரிக்கையும், இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கே என்பதையும் ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.