‘விரைவாக முடிவெடுங்கள்; குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும்’: கர்நாடக ஆளுநருக்கு, ஓய்வுபெற்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே எச்சரிக்கை

 

கர்நாடக சட்டசபையை விரைவாகக் கூட்டுங்கள், இல்லாவிட்டால், அரசியல் கட்சிகளின் குதிரைபேரத்துக்கு வழிவகுக்கும் என்று கர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலாவுக்கு உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே எச்சரித்துள்ளார். கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தனிப் பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்காத நிலையில்,. 104 இடங்கள் பெற்ற பாஜகவை ஆட்சியில் அமரவிடக்கூடாது என்று நோக்கில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தது 78 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சி.

(“‘விரைவாக முடிவெடுங்கள்; குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும்’: கர்நாடக ஆளுநருக்கு, ஓய்வுபெற்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே எச்சரிக்கை” தொடர்ந்து வாசிக்க…)

குமுதினிப் படகு படுகொலை 33 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு

நெடுந்தீவு துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள குமுதினிப் படகு படுகொலை நினைவுத் தூபிக்கு இன்று (15) அஞ்சலி செலுத்தப்பட்டது. 1985ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் குமுதினி படகு தனது பயணத்தை வழமை போல ஆரம்பித்தது. படகு அரை மணி நேரம் தனது பயணத்தை மேற்கொண்டிருந்தவேளை கடற்படையால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் என 36 பேரை வெட்டி படுகொலை செய்யப்பட்ட துயரம் நிறைந்த 33 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

(“குமுதினிப் படகு படுகொலை 33 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு” தொடர்ந்து வாசிக்க…)

இரணைதீவில் மீள்குடியேற அனுமதி

இரணைதீவில் மக்கள் தங்களின் சொந்த காணிகளில் மீள்குடியேறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ் அறிவித்துள்ளார் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.ராஜபக்ஸ, இலங்கையின் கடற்படை தளபதி ரியர் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க தலைமையிலான குழுவினர் இன்று (15) இரணைதீவுக்கு விஜயம் செய்தனர்.

(“இரணைதீவில் மீள்குடியேற அனுமதி” தொடர்ந்து வாசிக்க…)

பிரதமர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்; அற்பமான அரசியல் செய்யாதீர்கள்: மோடியை விளாசிய சத்ருகன் சின்ஹா

நாட்டு மக்களில் யார் வேண்டுமானாலும் பிரதமர் பதவிக்கு வரமுடியும். எதிர்க்கட்சிகளை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து, அற்பமான அரசியல் செய்யாதீர்கள் என்று பிரதமர் மோடியை பாஜக எம்.பி.யும் நடிகருமான சத்ருகன் சின்ஹா கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜகவின் மூத்த தலைவரான சத்ருஹன் சின்ஹா அவ்வப்போது கட்சியின் தலைமையை விமர்சித்தும், கட்சியின் தவறான செயல்பாடுகளைத் துணிச்சலாகவும் பேசி அவ்வப்போது அறிக்கை வெளியிடுவார்.

(“பிரதமர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்; அற்பமான அரசியல் செய்யாதீர்கள்: மோடியை விளாசிய சத்ருகன் சின்ஹா” தொடர்ந்து வாசிக்க…)

வரலாற்று திருப்பம்: பிரதமரானார் மஹதீர் மொஹமட்

மலேசியப் பிரதமராக, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மஹதீர் மொஹமட், தெரிவாகியுள்ளார். 222 உறுப்பினர்களைக் கொண்ட, மலேசிய நாடாளுமன்றத்தின் ஆட்சியை தீர்மானிப்பதற்காகவும், பிரதமரைத் தெரிவு செய்வதற்காகவும் நடைபெற்ற பொதுத் தேர்தலில், 113 ஆசனங்களைக் கைப்பற்றிய மஹதீர் மொஹமட் தலைமையிலான பகடான் ஹரபான் (நம்பிக்கைக்கான முன்னணி) கட்சி ஆட்சியை தனதாக்கியுள்ளது. மலேசிய பிரதமராக தெரிவாகியுள்ள 92 வயதான மஹதீர் மொஹமட், உலகின், மக்களால் தெரிவான மிக வயதான தலைவராக கருதப்படுகின்றார்.

(“வரலாற்று திருப்பம்: பிரதமரானார் மஹதீர் மொஹமட்” தொடர்ந்து வாசிக்க…)

“நரேந்திரமோடியின் இந்த நான்காண்டு ஆட்சியில்  15 – 24 வயதுடைய 72 லட்சம் இளைஞர்கள்  வேலை இழப்பு”

– டாக்டர் மன்மோகன் சிங்.

பிரச்சாரத்திற்காக எதையும் பேசும்
இழிவான மனிதரல்ல மன்மோகன் என்பதை
நினைவிற்கொண்டு மேலும் வாசியுங்கள்.

“காங்கிரஸ் தலைமையிலான UPA ஆட்சியில்
விவசாய விளைபொருட்களுக்கு அளிக்கப்பட்ட
குறைந்தபட்ச ஆதரவு விலை 193 சதம்.

பா.ஜ.க ஆட்சியில் அது வெறும்
36 சதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஆட்சியைக் காட்டிலும்
மோடி ஆட்சியில்
விவசாயப் பொருட்களின் ஏற்றுமதி
21% குறைந்துள்ளது;
இறக்குமதியோ 60% ஆக அதிகரித்துள்ளது.

2022 இல் விவசாயிகளின் வருவாய்
இரட்டிப்பாகும் என மோடி சொல்லியுள்ளது
சாத்தியமே இல்லை”

எனவும் மன்மோகன் கூறியுள்ளார்.

(அ.மார்க்ஸ்)

‘‘என் தாய் இத்தாலிகாரர்தான்; ஆனால்…’’ – ராகுல் காந்தி உருக்கம்

என்னுடைய தாய் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்தான், ஆனால், சிறந்த இந்தியராகவே வாழ்ந்து, பல்வேறு தியாகங்களைச் செய்துள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்குமான சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 12-ம் தேதி நடக்கிறது, 15-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக ஈடுபட்டு வந்தன.

(“‘‘என் தாய் இத்தாலிகாரர்தான்; ஆனால்…’’ – ராகுல் காந்தி உருக்கம்” தொடர்ந்து வாசிக்க…)

எரிபொருள் விலை அதிகரிப்பு

எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சுகதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். கொழும்பில் அமைந்துள்ள அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

விலை அதிகரிப்பு விபரம் ( 1 லீட்டர்)

ஒக்டைன் 92 – 137 ரூபா

ஒக்டைன் 95 – 148 ரூபா

ஒட்டோ டீசல் – 109 ரூபா

சுப்பர் டீசல் – 119 ரூபா

மண்ணெண்ணெய் – 101 ரூபா

சமுர்த்தி பயனாளிகளுக்கும், மீனவர்களுக்கும் மண்ணெண்ணெய்யை பழைய விலையான 44 ரூபாவுக்கே பெற்றுக்கொள்ளமுடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

‘மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக’ என்னும் நூல் வெளியீடு.

தமிழர் சமூக ஜனநாயக கட்சியின்(SDPT) தலைவரும், சமுக செயற்பாட்டாளருமான தோழர் சுகு சிறிதரன் திருநாவுக்கரசு  அவர்களின் ஆக்கத்தில் உருவான “மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக” எனும் நூல் வெளியீடு பேர்லீன் நகரில் 08.05.2018 அன்று Kopf str-25,12053 Berlin எனுமிடத்தில் அமைந்த மண்டபத்தில் நடைபெற்றது.

(“‘மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக’ என்னும் நூல் வெளியீடு.” தொடர்ந்து வாசிக்க…)