நாளை மறுநாள் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு: கர்நாடகாவில் இன்று மாலை பிரச்சாரம் ஓய்கிறது; இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் தீவிரம்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைவதால் பிரதமர் நரேந்திர மோடி தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார். அவர் நேற்று சிக்மகளூரு நகரில் பிரச்சாரம் செய்தார். கர்நாடகாவில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று பிரார்த்தனை மேற்கொண்டு வருகிறார். பெங்களூருவில் காட்டன்பெட் பகுதியில் உள்ள தர்காவுக்கு அவர் நேற்று சென்றார்.

(“நாளை மறுநாள் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு: கர்நாடகாவில் இன்று மாலை பிரச்சாரம் ஓய்கிறது; இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் தீவிரம்” தொடர்ந்து வாசிக்க…)

கரவெட்டி பிரதேசசபையின் கோமாளிக்கூத்து

………….மிக பெரும் தொகையான பிளாட்டிக் கழிவுகளுடன் மற்றைய கழிவுகளும் இந்த பகுதியில் அகற்றப்படாமல் நீண்டகாலம் இருந்தது….
.
.
…..இந்த கழிவுகளை ராணுவத்தின் உதவியுடன் பெரிய கிடங்கை வெட்டி நிலத்துக்குள் தாட்டிருக்கிறார்கள்…
.
…இப்போது அதைவைத்து தங்கள் அந்த பகுதியை சுத்தமாக்கி விட்டதாக பிரச்சாரம் செய்துவருகிறார்கள்…

(“கரவெட்டி பிரதேசசபையின் கோமாளிக்கூத்து” தொடர்ந்து வாசிக்க…)

பத்ம விபூஷண் விருது பெற்ற பழங்குடிப் பெண்மணி

இந்த வருஷம் பத்ம விபூஷண் விருது
பெற்றவர்கள் பட்டியலில்
ஒரு பழங்குடிப் பெண்மணி இருந்ததை
கவனித்திருக்கமாட்டீர்கள்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம்
கள்ளாறு எனும் வனப்பகுதியை சேர்ந்தவர்
லஷ்மி குட்டி அம்மா.

இவர் தன் நினைவாற்றல் மூலம்
500 மருந்துகள் தயாரிக்கிறார்.

அதன் மூலம், பல்வேறு நோய்கள், பாம்புக்கடி, பூச்சிக்கடியால் பாதிக்கப்பட்ட
மலைவாழ்,பழங்குடி மக்களைக்
காப்பாற்றி வருகிறார்.

தாயிடமிருந்து இத்தகைய மருத்துவ அறிவு
தனக்கு வந்ததாகச் சொல்கிறார் இவர்.

தென் மாநிலங்களில் உள்ள
பல்வேறு கல்வி நிறுவனங்களில்,
இயற்கை மருந்துகள் குறித்து பாடம் நடத்துகிறார்
என்றால் பாருங்களேன்.

1995ஆம் ஆண்டு கேரள அரசிடமிருந்து
‘நாட்டு வைத்ய ரத்னா’ விருது
வழங்கப்பட்ட லஷ்மி குட்டிக்கு
2018ஆம் ஆண்டுக்கான ‘பத்ம விபூஷன்’ விருது வழங்கப்பட்ட செய்தியை
கொட்டை எழுத்தில் போட்டிருக்கவேணாமா
ஊடகக்காரர்களே?

(Rathan Chandrasekar)

நச்சுத்தன்மையற்ற விவசாயியானர் மஹிந்த

கமத்தொழில் அமைச்சராக புதிதாக பதவியேற்றுக்கொண்ட அமைச்சர், மஹிந்த அமரவீர, நச்சுத்தன்மையற்ற தேசிய விவசாயி வலையமைப்பின் நச்சுத்தன்யைற்ற விவசாயியாக தன்னை பதிவு செய்துக்கொண்டுள்ளார்.

(“நச்சுத்தன்மையற்ற விவசாயியானர் மஹிந்த” தொடர்ந்து வாசிக்க…)

தங்கூசி வலையால் ஏற்படும் பாதிப்புக்கள்

தங்கூசி வலையால் ஏற்படும் பாதிப்புக்கள் என்ன என்று சில நண்பர்கள் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். பல பதிவுகளில் மிகத் தெளிவாக விளங்கப் படுத்தி விட்டேன்.  களைப்பாய் இருக்கிறது. இப்படிச் சொல்லிவிட்டு விடவும் முடியாதல்லவா. இதை மீண்டும் மீண்டும் சொல்வதைத் தவிர வேறென்ன வெட்டிப் புடுங்குற வேலை எனக்கு இருக்கக் கூடும்.

(“தங்கூசி வலையால் ஏற்படும் பாதிப்புக்கள்” தொடர்ந்து வாசிக்க…)

நான்காவது தடவையாக ஜனாதிபதியானார் புடின்

ரஷ்ய ஜனாதிபதியாக, விளாடிமிர் புடின் நான்காவது தடவையாக பதவியேற்றுள்ளார். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற புடின் இன்றைய தினம் பதவியேற்றுள்ளார். கடந்த 18 வருடங்களாக ஜனாதிபதி அல்லது பிரதமராக அதிகாரத்தில் உள்ள புடினை, எதேச்சதிகாரமிக்கவர் என அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் குற்றசம்சாட்டியுள்ளன. கடந்த சனிக்கிழமை, ரஷ்யாவில் புடினுக்கு எதிராக 19 நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

(“நான்காவது தடவையாக ஜனாதிபதியானார் புடின்” தொடர்ந்து வாசிக்க…)

பெட்ரோல், டீசல் பெயரில் பாஜக அரசு மக்களிடம் கொள்ளை, கோடிக்கணக்கில் வரிகளை வசூலித்துள்ளது: ராகுல் காந்தி

 

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு என்ற பெயரில் பாஜக அரசு கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கிறது, பன்னாட்டு கச்சா விலை சரியும் போது அதன் பயன்களை மக்களுக்கு அளிக்காமல் ரூ.10 லட்சம் கோடிகளை வரியாக வசூலித்துள்ளது என்று ராகுல் காந்தி சாடியுள்ளார். அவர் கூறியதாவது: “பாஜக அரசு 10,00,000 கோடி வரிகளாக பெட்ரோல்/எல்பிஜி/டீசல் மீது வசூலித்துள்ளது. ஆனால் குடிமக்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை” என்று சாடியுள்ளார்.

(“பெட்ரோல், டீசல் பெயரில் பாஜக அரசு மக்களிடம் கொள்ளை, கோடிக்கணக்கில் வரிகளை வசூலித்துள்ளது: ராகுல் காந்தி” தொடர்ந்து வாசிக்க…)

சொந்த மக்கள் செத்துக்கிடக்க தேர்தல் பிரச்சாரமா?: ஆதித்யநாத்தை உ.பி.க்கு விரட்டிய எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள்

சொந்த மாநில மக்கள் தூசுப்புயலால் மடிந்து கிடக்க கர்நாடகத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த உ.பி. முதல்வர் ஆதித்யநாத் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதனால் தேர்தல் பிரச்சாரத்தை பாதியிலேயே முடித்து உபி புறப்பட்டார். (“சொந்த மக்கள் செத்துக்கிடக்க தேர்தல் பிரச்சாரமா?: ஆதித்யநாத்தை உ.பி.க்கு விரட்டிய எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

இளம் பெண் நுண்கடனுக்குப் பலி.

நேற்று (05.05.2018) மீண்டும் ஒரு 24வயது இளம் பெண் நுண்கடனுக்குப் பலி.  மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் நுண்கடன் அரக்கனுக்கு இது 7வது உயிர்ப்பலி.  வந்தாறுமூலையைச் சேர்ந்த டிசாந்தினி என்ற 24வயது இளம்பெண் நுண்கடனால் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியை “மட்டக்களப்பு இளைஞர் வலையமைப்பு” செய்தி வெளியிட்டுள்ளது.