மரண அறிவித்தல்

தோழர் சாந்தனின் (க. தம்பையா — லண்டன்) அன்புத் தாயார் கதிரவேலு நாகலட்சுமி, நாவலர் வீதி, கடைச்சாமி ஒழுங்கை, யாழ்ப்பாணம். இன்று (27. 04 . 2018) காலை 9 மணியளவில் காலமாகிவிட்டார். அவருடைய இறுதிக்கிரியைகள் 30.04.2018 திங்கள் கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் .

தோழர்கள்

பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்

பிரபல பின்னணிப் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 87. ‘டவுன் பஸ்’ படத்தில் கலக்கிய இசைக்குயில் ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்ன விட்டுப்பிரிந்தே போன கணவன் வீடு திரும்பலே’ என்ற பாடல் 1950 களில் மிகப்பிரபலம். ‘டவுன் பஸ்; என்ற படத்தில் அஞ்சலிதேவிக்காக பின்னணிக் குரல் கொடுத்தவர் எம்.எஸ்.ராஜேஸ்வரி. அதே படத்தில் பொன்னான வாழ்வே என்ற பாடலும் எல்லோராலும் உச்சரிக்கப்பட்ட பாடல்.

(“பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்” தொடர்ந்து வாசிக்க…)

3 ஆட்கொணர்வு மனுக்களை முல்லைத்தீவு நீதிமன்றம் நிராகரித்துள்ளது

இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று ஆட்கொணர்வு மனுக்களை முல்லைத்தீவு நீதிமன்றம் நிராகரித்துள்ளதாகவும், அந்த வழக்குகளின் விசாரணை அறிக்கைகள் தொடர்பில் ஆராய்வதுக்காக, குறித்த வழக்குகள் எதிர்வரும் மே மாதம் 22ஆம் திகதி வவுனியா மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் தெரிவித்தார்.

(“3 ஆட்கொணர்வு மனுக்களை முல்லைத்தீவு நீதிமன்றம் நிராகரித்துள்ளது” தொடர்ந்து வாசிக்க…)

மீண்டும் சாதனை படைத்தார் அனித்தா

தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் ஜெகதீஸ்வரன் அனித்தா மீண்டும் புதிய சாதனையை படைத்துள்ளார். கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமாகிய தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில், 23 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலிலேயே யாழ். மாவட்ட மெய்வல்லுநர் சங்கம் சார்பில் கலந்துகொண்ட ஜெகதீஸ்வரன் அனித்தா 3.55 மீற்றர் உயரத்தைத் தாண்டி தங்கப் பதக்கத்தைப் பெற்றதோடு புதிய சாதனையையும் படைத்துள்ளார். தான் 3.48 மீற்றர் உயரத்தை முன்னர் தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் 23 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான பிரிவில் தாண்டி சாதனை படைத்தையே அனித்தா தற்போது முறியடித்துள்ளார்.

கர்நாடகத்தில் பாஜக வெற்றி பெற தேர்தலில் கூட்டணி அவசியம்: கருத்துக் கணிப்பில் தகவல்

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து, பாஜக ஆட்சி அமைக்க வேண்டுமென்றால், கூட்டணி வைக்காமல் தேர்தலைச் சந்தித்தால் பெரும்பான்மை கிடைக்காது, தோல்வியைத் தழுவும் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் மே 12-ம் தேதி தேர்தலும், 15-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது. ஆளும் காங்கிரஸ் கட்சி மீண்டும்ஆட்சியைக் கைப்பற்ற தீவிரமான பிரச்சாரத்தில் இறங்கி இருக்கிறது. அதேபோல எதிர்க்கட்சியான பாஜகவும் களத்தில் வேட்பாளர்களை நிறுத்தி, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

(“கர்நாடகத்தில் பாஜக வெற்றி பெற தேர்தலில் கூட்டணி அவசியம்: கருத்துக் கணிப்பில் தகவல்” தொடர்ந்து வாசிக்க…)

’இறுதி டெஸ்டில் பங்கேற்ற அந்த விசேட விருந்தினர்’ சச்சின் பகிர்வு

“மாஸ்டர் பிளாஸ்டர்” சச்சின் டெண்டுல்கர் தனது இறுதி டெஸ்ட் போட்டியை மும்பையில் நடத்துமாறு கோரியமைக்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார். 24 வருடங்கள், இந்திய அணிக்காக விளையாடிய சச்சின் டெண்டுல்கரின் விளையாட்டை அவரது தாய் ஒருமுறையேனும் நேரடியாக பார்த்திராத நிலையில், தனது இறுதி டெஸ்ட் போட்டியினை தனது தாய் இரசிக்க வேண்டுமென்பதற்காகவே இந்த போட்டியை மும்பையில் நடத்தக்கோரியதாகத் தெரிவித்துள்ளார்.

(“’இறுதி டெஸ்டில் பங்கேற்ற அந்த விசேட விருந்தினர்’ சச்சின் பகிர்வு” தொடர்ந்து வாசிக்க…)

இரணைதீவில் தங்கியிருந்து போராட்டத்தை முன்னெடுத்துள்ள மக்கள்

இரணைதீவு கிராம மக்கள் இன்று (23) இரணைதீவில் தங்கி நின்று போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர். கிளிநொச்சி இரணைதீவு கிராம மக்கள் 1992 ஆம் ஆண்டு தமது சொந்த மண்ணில் இருந்து இடம்பெயர்ந்து சென்று முழங்காவில் கிராமத்தில் உள்ள இரணை மாதா கிராமத்தில் குடியேறியுள்ளனர்.

(“இரணைதீவில் தங்கியிருந்து போராட்டத்தை முன்னெடுத்துள்ள மக்கள்” தொடர்ந்து வாசிக்க…)

முஸ்லிம்களுக்கு வழிகாட்டுகின்ற மிக பொருத்தமான தலைமையாக முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் முகிழ்ப்பு

– அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அஸ்மி பெருமிதம்

அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு சரியான அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளதையே நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் முடிவுகள் காட்டுகின்றன, அவர்களுக்கு வழிகாட்டுகின்ற மிக பொருத்தமான தலைமையாக முன்னாள் அமைச்சர் ஏ. எல். எம். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸை அடையாளம் கண்டு ஏற்று அங்கீகரித்து உள்ளனர் என்று அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி தெரிவித்தார்.

(“முஸ்லிம்களுக்கு வழிகாட்டுகின்ற மிக பொருத்தமான தலைமையாக முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் முகிழ்ப்பு” தொடர்ந்து வாசிக்க…)

நீதிபதி லோயா மரணம்:  லோயாவின் கதை முடிக்கப்பட்ட கதை

ஷொராபுதீன் ஷேக், அவரது உதவியாளர் துள்சிராம் பிரஜாபதி ஆகியோர் போலி என்கவுன்டரில் கொல்லப்படுகின்றனர். (2005 நவம்பர் 25). ஷொராபுதீனின் மனைவி கவ்சர் பீவியின் உடல் பின்னர் கண்டெடுக்கப் படுகிறது. ஷொராபுதீன் கொல்லப்பட்ட நான்கைந்து நாட்களுக்குப் பின் அவர் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டார் எனப் பின்னர் செய்திகள் வருகின்றன. இது போலி என்கவுன்டர் எனப் பின்னர் அறியவந்தபோது அதற்குக் காரணமாக இருந்தவர் அமித்ஷா எனக் குற்றச்சாட்டு எழுகிறது. அது குஜராத்தில் மோடி ஆட்சியில் பல போலி என்கவுன்டர் கொலைகள் நடந்து கொண்டிருந்த காலம். அந்தப் போலி என்கவுன்டர்களைச் செய்த IPS அதிகாரிகள் (வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் etc) பலர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுகின்றனர். அப்படியான வழக்குகளில் ஒன்றுதான் மோடியில் வலது கரமான அமித்ஷா மீதான இந்தக் கொலை வழக்கும்.

(“நீதிபதி லோயா மரணம்:  லோயாவின் கதை முடிக்கப்பட்ட கதை” தொடர்ந்து வாசிக்க…)

சாவகச்சேரி பிரதேசசபையின்

சாவகச்சேரி பிரதேசசபையின் கன்னியமர்வில் தமிழர்சமூகஜனநாயகக்கட்சியின்( SDPT) உறுப்பினர் வை.விக்னேஸ்வரன் ஆகிய என்னால் (கிருபா)முன்மொழியப்பட்டவைகளில் இதுவும் ஒன்று………….. (நன்றி:- உதயன்18.04.2018)