சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்துக்கு எதிராகவும், அவரின் அரசு வைத்திருக்கும் ரசாயன ஆயுதங்களை அழிக்கும் வகையில் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாட்டு ராணுவம் நேற்று இரவு முதல் வான்வழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளன. இதனால் சிரியாவில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ராணுவ விமானங்கள் தலைநகர் டமாஸ்கஸில் குண்டுமழை பொழிந்து வருகின்றன. இதனால் டமாஸ்கஸ் நகரமே ஒரே புகை மண்டலமாகவும், கட்டிடக் குவியல்களாகவும் காட்சி அளிக்கிறது.
Category: செய்திகள்
இன்று (ஏப்ரல் – 15) திருநங்கையர் தினம்: வாங்கப்பட்ட பாதை அல்ல; வழங்கப்பட்ட பாதை
கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் 15 அன்று திருநங்கைகளுக்கு தனி நலவாரியம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. திருநங்கைகளை மேம்படுத்தும் வகையில் இந்த நலவாரியம் அமைக்கப்பட்ட நாளை, திருநங்கையர் நாள் எனக் கொண்டாட கடந்த 2011 மார்ச் 11-ல் அரசாணை பிறப்பிக்கப்பட் டது. திருநங்கைகளுக்கு தனி நலவாரியம் அமைத்து அவர்களுக்கான நாள் கொண்டாடப்பட்டாலும், சமூகத்தில் இன்னும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டவர்களாகவே உள்ளனர்.
“என் அண்ணன் மணிரத்னத்துக்கு நன்றி; ஸ்ரீதேவியை இப்போ மிஸ் பண்றேன்” – தேசிய விருது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்
‘என்னுடைய அண்ணன் மணிரத்னத்துக்கு மீண்டும் நன்றி’ என்றும், ‘ஸ்ரீதேவியை இப்போ மிஸ் பண்றேன்’ என்றும் தேசிய விருது குறித்து மனம் திறந்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். 65-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில், ‘காற்று வெளியிடை’ படத்தின் பாடல்கள் மற்றும் ‘மாம்’ படத்தின் பின்னணி இசை என இரண்டு தேசிய விருதுகள் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா, ரஷ்யா பொறுமை காக்க வேண்டும்: ஐ.நா. பொதுச்செயலாளர் குத்தேரஸ் வேண்டுகோள்
சிரியா விவகாரத்தில் அமெரிக்காவும் ரஷ்யாவும் பொறுமை காக்க ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் கேட்டுக் கொண்டுள்ளார். சிரியாவின் டவுமா பகுதியில் அண்மையில் நடத்தப்பட்ட ரசாயன ஆயுத தாக்குதலில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இதன் பின்னணியில் சிரியா அதிபர் ஆசாத், ரஷ்யா, ஈரான் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. அதற்கு பதிலடியாக சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்தார். சிரியாவில் ரஷ்ய ராணுவம் முகாமிட்டிருப்பதால் அமெரிக்காவும் ரஷ்யாவும் நேரடி போரில் ஈடுபடும் அபாயம் எழுந்துள்ளது.
உரையரங்கு
“சுதந்திரத்துக்கு முன்னரும் பின்னரும் இலங்கை பெருந்தோட்ட மலையக மக்களின் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார நிலைமைகள்”
என்ற தலைப்பில் மலையகத்தைச் சேர்ந்த கல்வி மற்றும் சமூக செயற்பாட்டாளர்
திரு.எஸ்.சந்திரசேகரன் அவர்கள் உரையாற்ற இருக்கிறார்.
இடம்: ஸ்காபரோ சிவிக் சென்ரர் கூட்ட அறை
(150, Borough Drive, Toronto, ON, M1P 4N7)
காலம்: 2018 ஏப்ரல் 13, வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் 9 மணி வரை
இந்நிகழ்வில் ஆர்வமுள்ளவர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நிகழ்ச்சி ஏற்பாடு: ஆக்கபூர்வ சிந்தனை மற்றும் செயற்பாட்டிற்கான அமையம் (Centre for Creative Thoughts and Action)
தொடர்புகளுக்கு: E-Mail: creathought1@gmail.com
யாழ் மாநகர சபை செய்யவேண்டியவை
யாழ் மாநகரம் நுளம்பு குப்பைமேடு அசுத்தமான குடி நீர் நோய் எனதிணறுகிறது. குருநகர் நாவாந்துறை காக்கைதீவு பொம்மைவெளி மக்களின் அவலங்கள் சொல்லி மாளாது. ஒரு சுத்தமான கழிப்பறையை யாழ் நகரில் கண்டுபிடிக்க முடியாது. நகருக்கு வருபவர்கள் உடல் உபாதைகளை அவஸ்தைகளை சகித்தாக வேண்டும். அனால் பெரும் எதிர்பார்ப்புடன் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மாநகரசபையில் சிலர் சமாதி கட்டுவதற்கும் சிலைகட்டுவதற்கும் மிருகசாலை அமைப்பதற்கும் பரிந்துரை செய்கிறார்கள். வடக்கு மாகாண சபை போல் மாநகரசபையும் கீழ்வாந்து போய்விடக்கூடாது. மாநகர சபை 4 ந்தர கபடதாரி அரசியல் செய்யும் இடமல்ல. இந்த மாதிரி தான் ஆரம்பம் என்றால் யாரும் மாநகர சபைக்கு உதவ முன் வர மாட்டார்கள்.
இப்படியான அராஜக போக்குகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். தார்மீக அற சமூக பிரக்ஞை கொண்ட உறுப்பினர்கள் பெருமளவில் மாநகர சபையில் இருக்கிறார்கள். அவர்கள் இந்த திருகுதாள விளையாட்டுகளுக்கு இடமளிக்க கூடாது.
(Sritharan Thirunavukarsu)
”வன்புணர்வு செய்து ஆஷிஃபாவைக் கொன்றவர்களை விடுதலை செய்!” -தேசியக் கொடியேந்தி வெட்கமற்ற இந்து வெறியர்கள் ஊர்வலம்!-
(எஸ். ஹமீத்)
குற்றவாளியை விடுவிக்க தேசியக் கொடியுடன் ஊர்வலம்! அவர்கள் காஷ்மீரத்து முஸ்லிம்கள். பகர்வால் சமூகம் என்றும் அவர்களுக்குப் பெயர் உண்டு. நிரந்தரமாய் வாழ்வதற்கானவொரு நிலமின்றி கிராமம் கிராமமாக அலையும் அப்பாவி நாடோடிகள் அவர்கள். அந்தப் பாவப்பட்ட நாடோடிக் கூட்டத்திலுள்ள ஒரு குடும்பத்தின் வாரிசுதான் எட்டே எட்டு வயதான சிறுமி ஆஷிஃபா.
காஷ்மீரின் ரோஜாப்பூப் போன்ற கவினுறு அழகுடைய அந்தச் சிறுமி ஒரு நாள் காணாமற் போய்விடுகிறாள்.
பெற்றோரும் உற்றோரும் பெருந்துக்கத்தோடு ஆஷிஃபாவைத் தேடியலைகின்றனர்.
காஷ்மீர், உ.பி., பாலியல் பலாத்கார சம்பவங்கள்: ‘இரக்கமுள்ள நாடுதானா?’- கவுதம் கம்பீர், சானியா மிர்சா
காஷ்மீரின் கதுவா நகரில் 8 வயது சிறுமியும், உத்தரப் பிரதேசம் உன்னாவ் மாவட்டத்தில் இளம்பெண்ணும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீரும், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் கண்டனம் தெரிவித்து, ஆவேசமாக கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
சீமானைப் பழிவாங்கும் நோக்கத்துடன் நடவடிக்கை: அதிமுக அரசுக்கு அன்புமணி கண்டனம்
சீமானுடன் கைது செய்யப்பட்ட மற்றவர்கள் விடுவிக்கப்பட்ட பிறகும் அவர் விடுவிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது எள்ன்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்குள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தியதற்காக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை கைது செய்ய காவல்துறை திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதற்காக, அவருடன் கைது செய்யப்பட்ட மற்றவர்கள் விடுவிக்கப்பட்ட பிறகும் சீமான் விடுவிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.
(“சீமானைப் பழிவாங்கும் நோக்கத்துடன் நடவடிக்கை: அதிமுக அரசுக்கு அன்புமணி கண்டனம்” தொடர்ந்து வாசிக்க…)
தமிழ்த் தேசியவாதியும் நானும்
1989 இல் அச்சுவேலியைச் சேர்ந்த வட்டார கல்வி அதிகாரி ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவர் புலி ஆதரவாளர்.தமிழப் பற்றாளர்.எனது அண்ணன் யோகசிங்கம்,அதிபர் இராசதுரை இருவருக்கும் அறிமுகமானவர்.தமிழ் இன ஒற்றுமை,பழைய தமிழர்களின்,வரலாறுகள் எல்லாம் எனக்கு கூறினார்.