தாக்குதல் குறித்து அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை

அறுகம்பை குடா பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தலாம் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

’ஹிஸ்புல்லா’ அமைப்பின் புதிய தலைவரும் பலி?

ஹிஸ்புல்லா இயக்கத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹஷேம் சபிதீனும் கொல்லப்பட்டுள்ளதாக,  இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையேயான போரில் லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா இயக்கம் ஹமாஸுக்கு ஆதரவாக உள்ளது. அந்த இயக்கம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

தேங்காய் சம்பலுடன் சாப்பிடுவதும் கேள்விக்குறியாகிறது

இன்றைய சந்தையை அவதானிக்கும் போது, பொருட்களின் விலைகள் திடீரென அதிகரிகத் தொடங்கி விட்டன. இதனால், சாதாரண மக்கள் மீண்டும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக நாட்டு அரிசி, வெள்ளை மற்றும் சிவப்பு அரிசியின் விலை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதால், சந்தையில் நாட்டு அரிசிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏனைய அரிசி வகைகளின் விலைகள் அதிகரித்துள்ளன.

பற்றைக்குள்ளிருந்து கார் மீட்பு

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் பற்றைக்காடொன்றில் இருந்து சொகுசு கார் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

”எதற்காகவும் பதவியிலிருந்து நீக்கப்பட மாட்டார்கள்”

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சேனவிரத்ன மற்றும் இலங்கை பொலிஸ் குற்றப் பிரிவின் பணிப்பாளர், குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர், எஸ்எஸ்பி ஷானி அபேசேகர ஆகியோர் எக் காரணத்திற்காகவும் பதவியில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள் என அமைச்சர் விஜித ஹேரத் இன்று தெரிவித்தார்.

சேறு பூசும் சுவரொட்டி: ரங்காவை கைது செய்ய உத்தரவு

சேறு பூசும் சுவரொட்டிகளுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்காவுக்கு தொடர்பு இருக்குமாயின், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு, கொழும்பு  பிரதம நீதவான் திலின கமகே, கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

“மாகாண சபை பொறிமுறை வேண்டும்: ஜனாதிபதி

மாகாண சபை பொறிமுறையை நெறிப்படுத்துவதற்கான பரிந்துரையொன்றைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு  மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.

மாகாண சபைகளின் கீழ் உள்ள சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் உள்ள வெற்றிடங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதோடு அதற்குச் சாதகமான தீர்வுகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.

ரூ. 30 மில்லியனை உதவி செய்தது சீனா

அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை (USD 100,000) இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

”அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை”

அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

முதன்முறையாக தேர்தலில் குதிக்கும் பிரியங்கா

வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல், நவம்பர் 13ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி களம் இறக்கப்பட்டுள்ளார். முதன்முறையாக பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டியிடவுள்ளார். அவருக்கு ஆதரவாக அவரது தாயாரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும்,  காங்கிரஸ் கட்சி தலைவருமான சோனியா காந்தி தேர்தல் பிரசார நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளார்.