பிஜேபி எம்.எல்.ஏ வை கைவிடுவாரா யோகி ஆதித்யநாத்?

உத்தரப்பிரதேச பிஜேபி ஆட்சியில்…

உன்னாவ் மாவட்டத்தில்…
சென்ற ஆண்டு ஜூன் மாதத்தில்…

பிஜேபி எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கர்
அவரது சகோதரன் அதுல் சிங் இருவரும் –
பப்புசிங் என்பவரது 16 வயது மகளை
பாலியல் வன்முறை வல்லுறவுக்கு ஆளாக்கியதால்
அவர் காவல்துறையில் புகார் கொடுத்தார்.

(“பிஜேபி எம்.எல்.ஏ வை கைவிடுவாரா யோகி ஆதித்யநாத்?” தொடர்ந்து வாசிக்க…)

“வெருகல் “

சகோதரர்களே ஒருவரை ஒருவர் கொன்று குதறி இரத்தத்தை குடித்து மகிழ்ந்த துயரம். வரலாற்றில் நினைவில் கொள்ளப்பட வேண்டிய கொலைக்களம். பிரபா-கருணா என இருவருமே வீழ்ச்சியை சந்தித்த நாள் April 10, 2004. @ On April 10th 2004, 175 Karuna cadres, including female cadres, were massacred in Verukal in an attack by the LTTE to prevent the separation. பி.கு: படம்-வடபகுதி தமிழர்களால் பெரிதாக கண்டுகொள்ளப்படாத வாகரையில் அமைந்துள்ள வெருகல் சம்பவத்தில் கொல்லப்பட்ட கிழக்கு புலிகளின் நினைவு தூபியும். பலியான தமது உரவுகளுக்காக இந்த நாளில் அஞ்சலி செலுத்துபவர்களும்.

வடமாகாண சபை உறுப்பினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

முல்லைத்தீவில் இடம்பெறுகின்ற திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த கோரி, வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் முன் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். முல்லைத்தீவுக்கு இன்று (10) விஜயம் செய்த வடமாகாண சபையின் உறுப்பினர்கள், அங்கு இடம்பெறும் திட்டமிட்ட குடியேற்றங்கள், சட்டவிரோத விகாரை அமைக்கும் பணி, அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைகள் நடைபெறும் இடங்களுக்கு நேரடியாகச் சென்று நிலைமைகளை பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து மாவட்டச் செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்ததுடன், ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றையும் மாவட்டச் செயலரிடம் கையளித்துள்ளனர்.

வாகரை பிரதேச சபையின் தலைவராகத் தெரிவானவர் சற்று நேரத்தில் கைது

மட்டக்களப்பு, கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச சபையின் அதிகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றிய சற்று நேரத்தில், அதன் தலைவரும் மற்றொரு உறுப்பினரும் கைது செய்யப்பட்டுள்ளனரென, வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதல் சம்பவமொன்று தொடர்பாகவே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனரெனப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த வாகரைப் பிரதேச சபையின் தலைவர் சிவஞானம் கோணலிங்கமும் உறுப்பினரான தெய்வேந்திரன் சத்தியநாதன் என்பவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

(“வாகரை பிரதேச சபையின் தலைவராகத் தெரிவானவர் சற்று நேரத்தில் கைது” தொடர்ந்து வாசிக்க…)

மொழிப் பிரச்சினையால் சபை அமர்வு ஒத்திவைப்பு

காலி மாநகர சபையில் ஏற்பட்ட மொழிப்பிரச்சினையால், சபையின் முதலாவது அமர்வு இன்று 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர மேயர் பிரியந்த சஹபந்து தலைமையில் இன்று சபை கூடிய போது, சபை நடவடிக்கைகள் சிங்கள மொழியில் முன்னெடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எம்.எப்.ரிஹான, சிங்கள மொழியை புரிந்தகொள்வதில் பிரச்சினை இருப்பதாகவும், தனக்கு மொழப் பெயர்ப்பாளர் ஒருவர் தேவை எனவும் வலியுறுத்திய நிலையில் சபையில் குழப்பம் ஏற்பட்டது.

(“மொழிப் பிரச்சினையால் சபை அமர்வு ஒத்திவைப்பு” தொடர்ந்து வாசிக்க…)

தமிழும் சிங்களமும் அரச கரும மொழிகள்; திருத்தச் சட்டம் விரைவில்

தமிழ் மற்றும் சிங்கள மொழியை அரச கரும மொழிகளாக்கும் வகையில் 21ஆவது திருத்தச் சட்டமூலத்தை எதிர்காலத்தில் நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அரச மொழிக் கொள்கையை மீறி செயற்படுகின்றமை தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவு செய்தல் மற்றும் மொழிப் பிரச்சினை தொடர்பில் கையாளும் அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து தீரமனாங்களை மேற்கொள்வார்கள் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழன்டா……!

நேற்று மன்னார் சென்று திரும்பும் வழியில் வீதியின் மறுபுறத்தில் நின்றவாரே கையை காட்டி மறித்தார் போக்குவரத்துகாவல்துறை அதிகாரி வீதியை வீட்டு இறக்க இடமில்லை ஒரேமுள்ளும் தடிகளும் ஆகவே வீதியிலே அபாய விளக்குகளை ஔிரவிட்டவாறு காரினை நிறுத்தினேன் கீழே இறக்கி நிறுத்த சொன்னார் நான் முடியாது முட்கள் தடிகள் என்றேன் கடுப்பானவாரே பத்திரங்களை கேட்டார் கொடுத்துவிட்டு கண்ணாடிகளை உயர்த்தி கொண்டேன் சுத்தி சுத்தி பாத்தார் எல்லாம் சரியாக இருந்தது. நான் உள்ளே இருந்தமை இறங்காமை வாகனத்தை கரையில் நிறுத்தாமை என்பவற்றால் கடுப்பானவர்.ரயர் தேய்ந்திருக்கேன்றார்.நான் சொன்னன் இன்னும் 15000 கிலோமீற்றர் ஓடும் என்று இல்லை தவறுஎன்றார் நான் சரி என்றேன்.

(“தமிழன்டா……!” தொடர்ந்து வாசிக்க…)

துருக்கியும் ஈரானும் ரஷ்யாவும் இணைந்தன

சிரியாவில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளைத் துரிதப்படுத்துவதற்கு, துருக்கியும் ஈரானும் ரஷ்யாவும் இணைந்து, தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளன. சிரியாவிலிருந்து, தனது படைகளை ஐக்கிய அமெரிக்கா வெளியேற்றக்கூடுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், முக்கியமான இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.

(“துருக்கியும் ஈரானும் ரஷ்யாவும் இணைந்தன” தொடர்ந்து வாசிக்க…)

‘பதிலளிக்கத் தேவையில்லை’

“தேவையற்ற கருத்துக்களுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை இல்லையென” நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை (30) யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, “தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னரே விடுதலை புலிகளின் முக்கிய தளபதிகளை இலக்கு வைத்து இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினார்கள்” என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் எம்.ரெமிடியஸ் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனிடம் கேட்டபோது, “தேவையற்ற கருத்துக்களுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை இல்லையென” தெரிவித்துள்ளார்.

உதட்டிலிருக்கும் ‘லிப்ஸ்ரிக்’ போன்றதா தேசிய நல்லிணக்கம்?

(அதிரன்)

பெண்கள் தங்கள் உதட்டில் பூசியிருக்கும் ‘லிப்ஸ்ரிக்’ அழியாமல், கழராமல் உணவு உண்பதைப் போலவும் நளினமாகப் பேசுவதையும் போன்ற கதையாகத்தான் நமது நாட்டின் தேசிய நல்லிணக்கம் என்கிற செயல்பாடு இருக்கிறது. தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், ‘சமாதானப் புறா’ என்று புகழப்பட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க (தலைவி: தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம்) எனப் பலர் இலங்கை நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த செயற்பட்டு வருகின்றனர்.

(“உதட்டிலிருக்கும் ‘லிப்ஸ்ரிக்’ போன்றதா தேசிய நல்லிணக்கம்?” தொடர்ந்து வாசிக்க…)