தமிழ் மொழியில் வேம்படி மாணவி முதலிடம்

2017ஆம் ஆண்டு கல்வி பொதுதராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளமைக்கு அமைவாக அகில இலங்கை ரீதியில் 6 மாணவர்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். அத்துடன், 9 மாணவர்கள், இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளதுடன், தமிழ்மொழி மாணவர்களுள் யாழ்- வேம்படி மகளிர் கல்லூரி மாணவி மிருனி சுரேஸ்குமார் முதலாம் இடத்தைப் பிடித்துள்ளார். இதில் முதலிடங்களைப் பிடித்த மாணவர்கள் 6 பேரில் இருவர் கம்பஹா ரத்னாவலி மகளிர் பாடசாலையைச் சேர்ந்தவர்களாவர்.

(“தமிழ் மொழியில் வேம்படி மாணவி முதலிடம்” தொடர்ந்து வாசிக்க…)

முன்னாள் போராளிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான பாரிய வேலை திட்டம் யாழை மையப்படுத்தி விரைவில் ஆரம்பம்

இலங்கை மக்கள் நலன்புரி ஸ்தாபனத்தின் தலைவி வதனி அம்மையார் உறுதி

தமிழீழ விடுதலை புலிகள் இயக்க முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரம், பொருளாதாரம், வாழ்க்கை தரம், சுய தொழில் வாய்ப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்துகின்ற பாரிய வேலை திட்டம் ஒன்றை யாழ்ப்பாண மாவட்டத்தை மையமாக கொண்டு விரைவில் ஆரம்பிக்க உள்ளார் என்று இலங்கை மக்கள் நலன்புரி ஸ்தாபனத்தின் தலைவி வதனி மோகனசங்கர் அம்மையார் தெரிவித்தார்.

(“முன்னாள் போராளிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான பாரிய வேலை திட்டம் யாழை மையப்படுத்தி விரைவில் ஆரம்பம்” தொடர்ந்து வாசிக்க…)

கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது விடுதலைப்புலிகள் கட்சி

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதாக, புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சி தெரிவித்துள்ளது. ஒற்றுமையின் பலமாக செயற்பட முன்வந்த முன்னாள் போராளிகளாகிய தமது நம்பிக்கையினை உடைத்தெறிந்ததன் மூலம் ஈபிஆர்எல்எவ், தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சிளுடனான கூட்டினை முன்னெடுக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகள் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(“கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது விடுதலைப்புலிகள் கட்சி” தொடர்ந்து வாசிக்க…)

ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளராக  மிக பொருத்தமான ஒருவர் தெரிவு செய்யப்படுவார்

(சு. க அமைப்பாளர் ரகுபதி உறுதி)
 
 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர்களில் சிலர் தமிழினத்தை காட்டி கொடுக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு உள்ளமை கவலை தருகின்றது என்று இக்கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச அமைப்பாளர் கே. ரகுபதி தெரிவித்தார். இவருடைய ஆலையடிவேம்பு இல்லத்தில் ஊடகவியலாளர்களை நேற்று திங்கட்கிழமை சந்தித்து பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.

(“ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளராக  மிக பொருத்தமான ஒருவர் தெரிவு செய்யப்படுவார்” தொடர்ந்து வாசிக்க…)

ஹட்டன்-டிக்கோயா நகரசபை இ.தொ.கா வசமானது

ஹட்டன் – டிக்கோய நகரசபைக்கான புதியத் தலைவராக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் சடயன் பாலசந்திரனும் உப தலைவராக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஜே.பாமிஸூம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். புதியத் தலைவருக்கான வாக்கெடுப்பின் போது, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சடயன் பாலசந்திரனுக்கு 8 வாக்குகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அழகுமுத்து நந்தகுமாருக்கு 8 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன. இதனையடுத்து சபையில் பதற்றமான சூழல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு, பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். இறுதியில் இரு உறுப்பினர்களும் சமமான வாக்குகளை பெற்றிருப்பதால் குலுக்கள் முறையின் மூலம், சடயன் பாலசந்திரன் தெரிவு செய்யப்பட்டார். மேலும் உப தலைவர் பதவிக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரான ஏ.ஜே.எம்.பாஹிம்ஸூம் இ.தொ.காவின் சார்பில் குமார கருணாசிறியும் போட்டியிட்ட நிலையில், ஏ.ஜே.எம்.பாஹிம் உபதலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை நகரசபை

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை நகரசபை மற்றும் உப்புவெளி பிரதேச சபைக்கான உறுப்பினர்கள் சத்தியபிரமாணத்தின் போது. ..

தமிழருக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கைகள் போன்று முஸ்லிம்கள் மீது மத அழிப்பு நடவடிக்கைகள் கட்டவிழ்ப்பு

–  இந்தியாவில் முஸ்லிம் தலைவர்களை சந்தித்து தெளிவூட்டினார் பஷீர் 

இலங்கையில் நாடளாவிய ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிடப்பட்ட வகையில் கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ள வன்செயல்கள் குறித்து இந்தியாவை சேர்ந்த முஸ்லிம் தலைவர்களுக்கு முன்னாள் அமைச்சரும், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகு தாவூத் நேரில் சென்று விபரமாக தெரிவித்து உள்ளார்.

(“தமிழருக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கைகள் போன்று முஸ்லிம்கள் மீது மத அழிப்பு நடவடிக்கைகள் கட்டவிழ்ப்பு” தொடர்ந்து வாசிக்க…)

“தோழமைகளுக்கான பொது அழைப்பு”

20.02.2018 செவ்வாய் கிழமை மாலை 4மணிக்கு “வல்லினம் 100”

அறிமுகமும் உரையாடலும்
மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில்;
பெரியார் வாசகர் வட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தோழர் நவீன்,தயா உள்ளிட்ட
மலேசிய இலக்கிய செயற்பாட்டாளர்கள் பலரும் நிகழ்வில் கலந்துகொண்டு
நம்மோடு உரையாடக் காத்திருக்கிறார்கள்.
நம் தோழமைகள் எல்லோரும் வாருங்கள் பேசுவோம்.

வல்லினம் 100 பிரதியும் விற்பனைக்காக வைக்கப்படும்,
பெரியார் வாசகர் வட்டத்தின் புத்தக
விற்பனைக் கூடத்தில்
கருப்புப் பிரதிகள், வடலி பதிப்பக நூல்களையும் மேலும் சில தோழமைகளின் படைப்புக்களையும்
பெற்றுக்கொள்ள முடியும்.

அழைப்பு:
பெரியார் வாசகர் வட்டம் மட்டக்களப்பு.

மரண அறிவித்தல்

திருமதி ரவீந்திரன் பற்றீசியா ஜெயமணி

பிறப்பு : 15 மார்ச் 1959 — இறப்பு : 14 மார்ச் 2018

யாழ். டேவிட் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட ரவீந்திரன் பற்றீசியா ஜெயமணி அவர்கள் 14-03-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

(“மரண அறிவித்தல்” தொடர்ந்து வாசிக்க…)