அம்பாறையில் உணவில் இருந்தது வெறும் மாக்கட்டி ; அரச இரசாயன பகுப்பாய்வாளர் பொலிஸாருக்கு அறிவிப்பு!

அம்பாறையில் பள்ளிவாசல் உள்ளிட்ட முஸ்லிம் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட காரணமாக இருந்த, ஹோட்டல் ஒன்றின் உணவில் கருத்தடையோ அல்லது மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் எந்த மாத்திரைகளும் இருக்கவில்லை என அரச இரசாயன பகுப்பாய்வாளர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

(“அம்பாறையில் உணவில் இருந்தது வெறும் மாக்கட்டி ; அரச இரசாயன பகுப்பாய்வாளர் பொலிஸாருக்கு அறிவிப்பு!” தொடர்ந்து வாசிக்க…)

கண்டியில் இதுதான் நடந்த சம்பவம்.

திகன, தெல்தெனிய, மெதமஹநுவர சம்பவத்தில அடித்துக் கொல்லப்பட்ட சிங்கள இளைஞனின்,
தந்தை சீனி நோயால் காலை இழந்தவர்.
தாய் பாரிசவாதத்தால் முடக்கப்பட்டவர்.
தங்கை குடும்ப சூழலால் மனநோயாளியானவர்.
பொதுப் போக்குவரத்து குறைந்த பிரதேசமாகையால் சில நேரங்களில் பள்ளி ஜமாத்தாரை தனது லொறியில் பிரதான பாதைக்கு இலவசமாக ஏற்றிச் செல்வான்.
வறுமையான குடும்பம்.

(“கண்டியில் இதுதான் நடந்த சம்பவம்.” தொடர்ந்து வாசிக்க…)

திரு பத்மனாதன் மறைவு!

இலங்கையின் நிர்வாகத்துறையில் பல்வேறு துறைகளில் பணியாற்றியவரும் 1983 வெலிகடை சிறை படுகொலையின் பின்னர் மட்டக்களப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் சிறை தகர்ப்பில் தப்பியவர்களுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டு வெலிகடையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் எம்முடன் சக கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்தவருமான திரு பத்மனாதன் மறைவு. 1987 இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் விடுதலையான திரு பத்மனாதன் வடக்கு கிழக்கு மாகாண அரசாங்கத்தின் புனர்வாழ்வு புனர் நிர்மாண அமைச்சின் செயலாளராகவும் சந்திரிகா அவர்களின் ஆட்சிக்காலத்தில் நிதி அமைச்சின் உதவி செயலராகவும் பணியாற்றியவர். அன்னாருக்கு எம் அஞ்சலிகள். அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக்கொள்கிறோம்!

திரிபுரா தோல்வி சொல்லும் பாடம்: எதிர்க்கட்சிகளுக்கு அச்சுதானந்தன் எச்சரிக்கை

நாடு பல்வேறு ஆபத்தான சவால்களை எதிர்கொண்டு வருகிறது. ஆதலால், சங் பரிவார் அமைப்புகளை தோற்கடிக்க மதச் சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஒரே அணியாக இணைய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கேரள மாநில முன்னாள் முதல்வருமான வி.எஸ். அச்சுதானந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

(“திரிபுரா தோல்வி சொல்லும் பாடம்: எதிர்க்கட்சிகளுக்கு அச்சுதானந்தன் எச்சரிக்கை” தொடர்ந்து வாசிக்க…)

விடை பெறுகிறார் ‘எளிமையான முதல்வர்’ மாணிக் சர்க்கார்

 

திரிபுராவில் இடதுசாரி கூட்டணி அரசு 25 ஆண்டுகளுக்கு பிறகு பதவியில் இருந்து இறங்குகிறது. அங்கு 20 ஆண்டுகாலம் முதல்வர் பதவி வகித்த எளிமையான முதல்வர் மாணிக் சர்க்கார் விடை பெறுகிறார். நாடுமுழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட திரிபுரா மாநில சட்டப்பேரவை முடிவுகள் வெளியாகி வருகின்றன. அம்மாநிலத்தி்ல் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் வேட்பாளர் மறைவால் ஒரிடத்தில் தேர்தல் நடைபெறவில்லை. மீதமுள்ள 59 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

(“விடை பெறுகிறார் ‘எளிமையான முதல்வர்’ மாணிக் சர்க்கார்” தொடர்ந்து வாசிக்க…)

யாழ்ப்பாண பொலீசாரின் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பானது

கோவில் வீதி யாழ்ப்பாணம் எனும் முகவரியில் உள்ள வீட்டில் தற்காலிகமாக வசித்து வருகின்றேன் .23.01.2018 அன்று இரவு 11.15 வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டு வரும்வேளை கச்சேரியடியில் உள்ள கடைக்குச் சென்று ஆஸ்பத்திரி வீதிவழியாக எனது வீடடைச் சென்றடைந்தேன், அப்போது எனது வீட்டுக்கு சற்றுத் தொலைவில் மறைவாக யாழ் போக்குவரத்து போலீசார் நின்றிருந்தனர் அவர்களில் சுமித் என்ற பொலீஸ் அதிகாரி வீட்டு வாசலில் நின்ற எனதருகில் வந்து எனது மோட்டார் சைக்கிள் காப்புறுதி பத்திரம் மற்றும் இறை வரி பத்திரம், ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களைக் காண்பிக்குமாறு கோரினார், நான் அவரிடம் அதற்கு மறுத்துவிடடேன். வீதியில் செல்லும்போது மாத்திரமே போலீசாருக்கு ஆவணங்களைக் காண்பிக்க வேண்டும் நான் எனது வீட்டு வாசலில் நின்றிருந்த போது நீங்கள் ஆவணங்களைக் கோருவது சட்டவிரோதமானது ஆகும் என்று கூறி நான் எனது வீட்டுக்குள் சென்று விட்டேன்.

(“யாழ்ப்பாண பொலீசாரின் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பானது” தொடர்ந்து வாசிக்க…)