தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஸூமா, தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பதவி விலக வேண்டுமென, அவரது கட்சியிடமிருந்து கிடைக்கப்பெற்ற அழுத்தத்துக்கு அடிபணிந்தே, அவர் பதவியிலிருந்து விலகியுள்ளார். அவரது கட்சியான ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், பதவி விலக வேண்டுமென்பதற்கான பணிப்புரையை, ஏற்கெனவே விடுத்திருந்தது. ஆரம்பத்தில் அதை ஏற்று நடக்க மறுத்த அவர், தற்போது பதவி விலகியுள்ளார். 9 ஆண்டுகளாக ஜனாதிபதியாகப் பதவி வகித்த அவர், அடுத்தாண்டு நடுப்பகுதியிலேயே பதவியிலிருந்து விலக வேண்டியிருந்தது. எனினும், ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக, பொதுமக்களின் ஆதரவை இவர் இழந்திருந்தார்.
Category: செய்திகள்
‘பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்கின்றோம்’
“தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இத் தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்கின்றோம்” என ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான என்.சிறீகாந்தா தெரிவித்துள்ளார். இதேவேளை, “வடக்கு, கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி அமைக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி ஆதரவு வழங்க வேண்டும். அது தொடர்பில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து சில சாதகமான கருத்துக்களும் வந்துள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.
(“‘பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்கின்றோம்’” தொடர்ந்து வாசிக்க…)
‘கட்சி பேதங்களைக் கடந்து, தேசிய நிலைப்பாட்டில் ஒன்றிணைய வேண்டும்’
“கட்சி பேதங்களைக் கடந்து, தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளை ஒன்றிணைத்து, அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் பேசி, இறுதி தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும்” என தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
(“‘கட்சி பேதங்களைக் கடந்து, தேசிய நிலைப்பாட்டில் ஒன்றிணைய வேண்டும்’” தொடர்ந்து வாசிக்க…)
உள்ளூராட்சி சபை தேர்தல் 2018 – முழுமையான முடிவுகள்- ஒரே பார்வையில்!
ஜனவரி 30 ஆம் திகதி உச்ச நீதிமன்றம் எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை விதித்ததை தொடர்ந்து பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி 340 உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகுவதில் மந்தநிலை காணப்பட்ட போதிலும் தற்போது 340 உள்ளூராட்சி சபைகளுக்குமான முழுமையான தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
(“உள்ளூராட்சி சபை தேர்தல் 2018 – முழுமையான முடிவுகள்- ஒரே பார்வையில்!” தொடர்ந்து வாசிக்க…)
உள்ளுர் அதிகாரசபை தேர்தல் முடிவுகள்
1. தமிழ் மக்களுக்கு – சகல தமிழ்த்தலைமைகளும் ஒன்றுபட வேண்டிய அவசியத்தையும்
2. சிங்கள மக்களுக்கு – அவர்களின் தலைமை மகிந்தவே என்பதையும்
3. சர்வதேசத்துக்கு – இனப்பிரச்சனை என்றும் தீரப்போவதில்லை என்ற சேதியினையும் கூறிநிற்கிறது.
ஜனாதிபதியும், பிரதமரும் உடனடியாக பதவி விலகவேண்டும்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெளிவான வெற்றியைப் பெற்றுள்ளதால், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் உடனடியாகப் பதவி விலகவேண்டுமென ஒன்றிணைந்த எதிரணியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
(“ஜனாதிபதியும், பிரதமரும் உடனடியாக பதவி விலகவேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)
சேவலும், மொட்டும் இணைந்தது
நுவரெலிய மாவட்டத்தின் 11 உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியை அமைக்கவுள்ளதாக சீ.பீ.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகர சபை தேர்தல் முடிவுகள்
யாழ். மாவட்ட யாழ். மாநகர சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சி – 14, 424 வாக்குகள், 16 ஆசனங்கள்
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் – 12,020 வாக்குகள், 13 ஆசனங்கள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 8,671 வாக்குகள், 10 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி – 2,423 வாக்குகள், 3 ஆசனங்கள்
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி – 1,479 வாக்குகள், 2 ஆசனங்கள்
தமிழர் விடுதலைக் கூட்டணி – 1,071 வாக்குகள், 1 ஆசனம்
சாவகச்சேரி நகர சபை முடிவுகள் – தமிழர் சமூக ஜனநாயக கட்சி தனது வெற்றியை பெற்றுள்ளது
யாழ். மாவட்டத்தின் சாவகச்சேரி நகர சபை முடிவுகள் வெளியாகியுள்ளன.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 2,779 வாக்குகள், 6 ஆசனங்கள்
இலங்கை தமிழரசுக் கட்சி – 2,481 வாக்குகள், 5 ஆசனங்கள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 1,372 வாக்குகள், 3 ஆசனங்கள்
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி – 1,029 வாக்குகள், 2 ஆசனங்கள்
தமிழர்களுக்கான சமூக ஜனநாயகக் கட்சி – 518, 1ஆசனம்
ஐக்கிய தேசியக் கட்சி – 344 வாக்குகள், 1 ஆசனம்
உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள்
வாக்குகள் | சதவீதம் | உறுப்பினர்கள் | |
---|---|---|---|
4056295 | 45.46% | 2807 | |
2853742 | 31.99% | 1935 | |
770006 | 8.63% | 539 | |
550359 | 6.17% | 350 | |
429513 | 4.81% | 302 | |
262151 | 2.94% | 309 |